நிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.!
சுமார் 450கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயை ஒரு பெரும் கோள் ஒன்று தாக்கி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது, அந்த பாதிப்பின் மூலம் உருவானது இந்த சந்திரன் என்கிற துனைக்கோள்.
இன்றைய தொழில்நுட்ப சாதனங்கள் மக்களுக்கு பூமியில் பல்வேறு வகையில் மிகவும் உதவியாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கூடியவிரைவில் விண்வெளி மற்றும் நிலவு போன்ற பகுதிகளுக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் கண்டிப்பாக பயன்படும்.

வரும் 2030-க்குள் மனிதன் நிலவில் நிரந்திரமாக திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான் பல்வேறு பணிகளை நாசா மற்றும் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு மையம் செய்து முடிக்கும். மேலும் வர்த்தகம், சுற்றுலா, ஆய்வு
போன்ற காரணங்களுக்கு வேண்டி மனிதன் நிலவில் குடியேறுவான் என்று ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இயக்குநர் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்துள்ளார், குறிப்பாகக இந்த குடியேற்றத்திற்கு Moon village என்று பெயரிடப்படும் என்று தெரிவித்தார்.

சுமார் 450கோடி ஆண்டுகளுக்கு முன்பு:
சுமார் 450கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயை ஒரு பெரும் கோள் ஒன்று தாக்கி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது,
அந்த பாதிப்பின் மூலம் உருவானது இந்த சந்திரன் என்கிற துனைக்கோள். குறிப்பாக 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது முதல் இன்று வரை நிலவின் ஒவ்வொரு அங்குலமும் ஆய்விற்கு உள்ளக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்வேண்டும், மேலும் இதில் நிலவு குறித்து பல்வேறு அறிய தகவல்களுகம் திரட்டப்பட்டுள்ளன.

நிலவின் தென்துருவம்
நமது பூமியைப் போன்றே இருதுருவங்களை கொண்டுள்ள நிலவின் தென்துருவம் சூரியஓளி இன்றி எப்போதுமே இருட்டாகவே இருக்கும் என்றுக் கூறப்படுகிறது. மேலும் நிலவின் வடதுருவத்தில் இரவு என்பதே இல்லை என்று ஆய்வில் தெரிவக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு நிலவில் என்ன நடந்தது தெரியுமா?
2009-ம் ஆண்டு மே மாதம் l cross என்ற விண்கலம் நீருடன் ஓரு சில ரசாயனங்களை கலந்து நிலவின் எப்போதும் இருட்டாக இருக்கும் தென்துருவத்தில் வெடிக்க செய்தது, வெடிப்பில் சிதறிய துகள்களை அப்பகுதியில் நிறுத்தப்பட்ட பல்வேறு விண்கலங்கள் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது. இதில் நடத்தப்பட்ட ஆய்வில் நிலவின் தரைப்பரப்புக்கு கிழ் நீர் ஊற்று இருப்பதும் தெரியவந்தது. எனவே நிலவில் குளிர் அதிகமாக இருக்கும் இடங்களில் கூட நீர் அதிகமாக
இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்ந்த விண்கற்கள்
நிலவை தொடர்சியாக தாக்கி வந்த குளிர்ந்த விண்கற்கள் நிலவில் நீரை உருவாக்கி இருக்கலாம் என்றும் பின்பு சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் போட்டோன் ஓளித்துகள் நிலவின் தரைப்பகுதியில் உள்ள தாதுக்களுடன்
கலந்து மெல்லிய நீர் படிவத்தை உருவாக்கி இருக்கும் என்று நம்புகின்றனர்கள் அறிஞர்கள். மேலும் பல்வேறு அம்சங்கள் நிலவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிலவில் வீடு எப்படி சாத்தியம்?
ஆய்வளார்கள் அனுப்பும் விண்கலம் மற்றும் இயந்திரங்கள் நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்து அத்தகவலை பூமிக்கு
அனுப்பும். பின்பு விண்கலம் நிலவின் தரைப்பகுதியில் இரங்கியதும், அங்கு காத்திருக்கும் ஆள் இல்லா தான்இயங்கி
வாகனம் ஒன்று விண்கலம் கொண்டுவந்த கட்டுமானம் ஒன்றை அதன் முதல் பகுதியில் இணைக்கும்.

இராட்சத பலூன்:
விண்கலம் கொண்டுவரும் முதல் கட்டுமானம் என்னவென்றால் இராட்சத பலூன் ஆகும், இந்த இராட்சத பலூன் நிலவில் குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்படும், பின்பு விண்கலத்தில் இருந்து வெளிவரும் 3டி பிரிண்டர் ரோபோ நிலவில்
இருக்கும் மண்ணை வைத்து பலூன் மீது வீடுகட்ட துவங்கும். இந்த 3டி பிரிண்டர் ரோபோ 3மாதங்களில் வீடுகட்டி முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
குறிப்பாக 4பேர் தங்கி வாழக்கூடும் இந்த வீடு ரேடியேசன் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும், மேலும் அனைத்து நாடுகளுடன் இந்தியாவும் இந்த குடியேற்றத்தில் பங்குபெறும் என ஐரோப்பிய விண்வெளி இயக்குநர் தெரிவித்துள்ளார். பின்பு நிலவில் மனிதக் குடியேற்றங்களுக்கு உதவுவது இந்த தானியங்கி வாகனங்கள் தான் என்று தெரிவித்துள்ளனர்.

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!
வேற்றுகிரக வாசம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது சகஜம் என்றாகிவிட்டது. பெரும்பாலும் இவை அதிகாரப்பூர்வ தகவலாக இருப்பதில்லை என்பதால் இது குறித்து யாரும் அதிகம் கவலை கொண்டதில்லை.
எனினும் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மை என்பதை விளக்கும் சான்றுகளை பலமுறை வெளியிட்டு இருக்கின்றனர். இன்றும் பல்வேறு காரணங்களால் இவை குறித்த தகவல் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.

தகவல்
நிலைமை இப்படி இருக்க வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றனர் என்ற வாக்கில் பல நாசா ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாசா
பல்வேறு நாசா ஊழியர்களும் ஏலியன் இருப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து வரும் நிலையில் நாசா அதிகாரப்பூர்வமாக இத்தகவலை உறுதி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிர்ச்சி
இந்நிலையில் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நாசாவின் தலைமை ஆராய்ச்சியாளர் எல்லென் ஸ்டோஃபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல்
ஏலியன் இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடப்படலாம் என வேற்றுகிரக வாசம் சார்ந்த சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உண்மை
இதனிடையே ஸ்டோஃபன் அறிக்கையானது ஏலியன் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரம்
நம் வாழ்நாள் நிறைவடையும் முன் நமது பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசம் இருப்பதை புரிந்து கொள்வோம் என ஸ்டோஃபன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை
இத்தகவல் ஆனது பூமியை தவிர மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசம் இருப்பது நிச்சயம் உண்மை என்பதில் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதை உணர்த்துவதாகவே இருக்கின்றது.

வீரர்
அப்போலோ 14 திட்டத்தின் மூலம் விண்வெளி சென்ற வீரர் தன் பேட்டியில் ஏலியன் இருப்பது உண்மை என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்
இதோடு வேற்றுகரக வாசிகள் இருப்பது குறித்த தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளதோடு, அரசாங்கம் மற்றும் நாசா இணைந்து ஏலியன் இருப்பதை மறைக்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகின்றது.

ஆதாரம்
முன்னதாக 2011 ஆம் ஆண்டில் நாசா அதிகாரியான சார்லஸ் போல்டன் ஏலியன் இருப்பதை தான் நம்புவதாகவும், ஆனால் இதற்கு தன்னிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

கருத்து
இது குறித்து டாக்டர் மிட்செல் கூறியதாவது, 'உலகில் ஏலியன் இருப்பதை மறைக்க நாசா எது வேண்டுமானாலும் செய்யும்' என தெரிவித்திருந்தார்.

கென் ஜான்ஸ்டன்
கென் ஜான்ஸ்டனும் ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ இருப்பது குறித்த தகவல்களை வெளியிட்டார்.

ஆதாரம்
தகவல்களை மட்டும் வெளியிட்ட கென் ஆதாரங்களை வெளியிட மாட்டேன் என கூறினார், இத்தகவல் வெளியானதும் அவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

விண்வெளி மையம்
சர்வதேச விண்வெளி மையத்தின் நேரலை கேமராவில் இருந்து, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெரிவது பலமுறை மறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சில வினாடிகள் காணப்பட்டது, எனினும் இதுவும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.

யுஎஃப்ஒ
சர்வதேச விண்வெளி மையம் இல்லாமல் உலகின் பல பகுதிகளில் யுஎஃப்ஒ காணப்பட்டது பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இது குறித்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications