Subscribe to Gizbot

"நானே ஒரு ஏலியன் தான்" நாசாவில் வேலை கேட்டு 9 வயது சிறுவன் அட்டகாசம்.!

Written By:

சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஒரு கிரக பாதுகாப்பு அதிகாரியை (Planetary Protection Officer) பணியமர்த்துவதற்கு முயல்வதாக அறிவித்தது. இந்த பணியில் அமர்பவர்கள் நமது கிரகத்தை மார்ட்டியன்ஸ்களிடமிருந்து பாதுகாக்கும் மறுகையில், மனிதர்கள் விண்வெளியில் ஊடுருவி மற்ற உலகங்களைக் கறைபடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற குறிப்போடு இந்த வேலைக்கு என்னென்ன தகுதிகள் மற்றும் திறன்கள் இருக்க வேண்டும் என்பதையும் அறிவித்திருந்தது.

"மனிதன் மற்றும் ரோபோ சார்ந்த விண்வெளி ஆராய்ச்சியில் கரிம-சமுதாயம் மற்றும் உயிரியல் ரீதியான மாசுபாடுகளை தவிர்ப்பது குறித்து கிரானேட்டரி பாதுகாப்பு கவலை கொண்டுள்ளது" என்று இந்த வேலை விவரம் கூறுகிறது. ஆண்டுதோறும் 187,000 அமெரிக்க டாலர்கள் சம்பளத்துடன் நாசாவின் இதர நன்மைகளும் இந்த பணியில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அறிவியல், பொறியியல் அல்லது கணிதம்

அறிவியல், பொறியியல் அல்லது கணிதம்

ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டிய விருப்பத்துடன் மூன்று ஆண்டுகளுக்காக திறந்திருக்கும் இந்த பணியானது, 2020-களில் ஜூப்பிட்டர் நிலவான யூரோபாவிற்கு நிகழும் பயணம் உட்பட நாசாவின் வரவிருக்கும் விண்வெளி சார்ந்த பணிகளிலும் ஈடுபடும் சாத்தியக்கூறு கொண்டுள்ளது. இந்த பணி விண்ணப்பிக்கும் ஆர்வம் இருந்தால், குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவமுள்ள சிவில் அரசாங்க ஊழியராகவும் மற்றும் உடல் அறிவியல், பொறியியல் அல்லது கணிதத்தில் ஒரு மேம்பட்ட பட்டம் பெற்றவராகவும் நீங்கள் இருக்க வேண்டும்.

நாசா பதில்

நாசா பதில்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இந்த வேலை பாத்திரத்தில் "மிகக் கடினமான மற்றும் சிக்கலான பலதரப்பட்ட விவாதங்களில், வெற்றிகரமான தீர்வுகளை விளைவிக்கும் இராஜதந்திர திறன்கள தேவை" என்றும் நாசா என்றும் கூறியிருந்தது. இவ்வளவு விளக்கமாக அறிவித்தும் 9 வயது நிரம்பிய நான்காம் கிரேட் படிக்கும் ஜாக் என்ற சிறுவன் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளான். இதில் சுவாரசியம் என்னவென்றால் ஜாக் அனுப்பிய கடிதத்திற்கு நாசா பதில் அனுப்பி வைத்துள்ளது என்பது தான்.

வீடியோ கேம்களில் சிறப்பாக விளையாடுவானாம்

வீடியோ கேம்களில் சிறப்பாக விளையாடுவானாம்

நாசா குறிப்பிட்டுள்ள எந்த தகுதியும் "தற்போது" இல்லாத, நியூ ஜெர்சியில் நான்காவது கிரேட் படிக்கும் ஒன்பது வயதே நிரம்பிய ஜேக் டேவிஸ், பல விண்வெளித் திரைப்படங்களைக் கண்டிருக்கிறானாம், மேலும் அவன் வீடியோ கேம்களில் சிறப்பாக விளையாடுவானாம் அதனால் இந்த பணிக்கு விண்ணப்பித்துளான்.

"நான் ஒரு ஏலியன்"

தனது சொந்த கையெழுத்தில் நாசாவிற்கு கடிதம் எழுதியுள்ள ஜாக் அதில் தன்னை "கார்டியன் ஆப் தி கேலக்ஸி" என்றும் குறிப்பிட்டடுள்ளான். "நான் ஒன்பது வயது சிறுவன் தான், ஆனால் நான் இந்த வேலைக்கு தகுதியுடையவன் என்று நினைக்கிறேன். "நான் ஒரு ஏலியன்" என்று என் சகோதரி கூறுவதும் அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக நினைக்கிறேன்"

கையொப்பம்

கையொப்பம்

அதுமட்டுமின்றி, நான் காணும் கிட்டத்தட்ட அனைத்து விண்வெளி திரைப்படம் மற்றும் ஏலியன் திரைப்படங்களையும் பார்த்துளேன்" என்று ஜாக் தனது கடிதத்தில் எழுதி முடித்து கையொப்பம் ஒன்றும் ஈட்டுள்ளான். இதற்கு நாசாவின் பிளானட்டரி சயின்ஸ் இயக்குனர் ஜிம் கிரீன் பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அது மிகப்பெரியது

அது மிகப்பெரியது

அதில் "நீங்கள் உங்களை ஒரு கேலக்ஸியின் கார்டியன் என்று கூறுவதை நான் அறிந்தேன். நீங்கள் ஒரு நாசா பிளானட்டரி பாதுகாப்பு அதிகாரியாக இருப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். அது மிகப்பெரியது" என்று தொடங்குகிறது க்ரீன் அனுப்பிய கடிதம். கிரக பாதுகாப்பு என்ற வார்த்தையை வைத்து அந்த பணி சார்ந்த ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. மற்ற கிரகங்கள் மற்றும் நமது சொந்த நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது சூரிய மண்டலத்தின் பொறுப்புணர்வை ஆராய்வதில் முக்கிய பங்கை இந்த பணி கொண்டுள்ளது" என்று நாசா பதில் கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

கிரனேட்டரி பாதுகாப்பு கவலை கொண்டுள்ளது

கிரனேட்டரி பாதுகாப்பு கவலை கொண்டுள்ளது

"மனிதன் மற்றும் ரோபோ சார்ந்த விண்வெளி ஆராய்ச்சியில் கரிம-சமுதாயம் மற்றும் உயிரியல் ரீதியான மாசுபாடுகளை தவிர்ப்பது குறித்து கிரானேட்டரி பாதுகாப்பு கவலை கொண்டுள்ளது" என்று இந்த வேலை விவரம் கூறுகிறது.

கிரக பாதுகாப்பு கொள்கை

கிரக பாதுகாப்பு கொள்கை

பூமி மற்றும் அதன் உயிர்க்கோள மாதிரிகளை அறிந்தோ அல்லது அறியாமலோ வேறு கிரகங்களுக்கு அல்லது பிற சூரிய மண்டலங்களுக்கு கொண்டு செல்வதிலும், அங்கிருந்து பூமிக்கு கொண்டு வருவதிலும் நாசா அதன் அனைத்து விண்வெளி விமான பணிகளிலும் பொருந்தும் கிரக பாதுகாப்பு கொள்கைகளை பராமரிக்கிறது. 1967-ஆம் ஆண்டின் விண்வெளி சட்டத்தின் கீழ் 107 நாடுகளும் எக்ஸ்ட்ராடெர்ரஸ்டிரியல்ஸ் அதாவது வேற்றுகிரக வாசிகளிடமிருந்து நமது கிரகத்தை பாதுகாப்பது சார்ந்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
A 9-year-old boy applies for a job as planetary protection officer. NASA responds. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot