Home
Scitech

செவ்வாயில் சுனாமி! 75 மைல் நீளமுள்ள பள்ளத்தாக்கை உருவாக்கியது...

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விண்கல்லின் தாக்குதலால் உண்டான தாக்கத்தின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு 'மெகா-சுனாமி’ உருவாகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது .

 வடக்கு சமவெளிப் பகுதியில்...

வடக்கு சமவெளிப் பகுதியில்...

செவ்வாய் கிரகத்தின் வடக்கு சமவெளிப் பகுதியில் உள்ள ஏராளமான பெரிய பள்ளத்தாக்குகளை பகுப்பாய்வு செய்த ஒரு புதிய ஆய்வில், நீண்டகாலத்திற்கு முன்பு கடல் இருந்த பகுதியில் தாக்குதல் நடந்த அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கிரவுண்ட் ஜீரோ-வாக இருக்கும்

கிரவுண்ட் ஜீரோ-வாக இருக்கும்

இதன் விளைவாக சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் எழுந்து சுற்றியுள்ள நிலப்பரப்பு முழுவதும் பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளன.

எந்த பகுதி கிரவுண்ட் ஜீரோ-வாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் , எப்படி 75 மைல் நீளமுள்ள லோமோனோசோவ் பள்ளத்தாக்கு பிரளயத்திற்கு காரணமான விண்கல்லால் உருவான அலைகளால் உருவானது மற்றும் சிறு நிலப்பரப்பு (Thumbnail Terrain) எனப்படும் ஒரு பகுதியின் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது.

 அசாதாரண நில தன்மையும் வலுசேர்த்தது

அசாதாரண நில தன்மையும் வலுசேர்த்தது

ஜியோபிசிகல் ரிசர்ச் ப்ளானெட்ஸ் ஜேர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வுகட்டுரையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான பிரெஞ்சு தேசிய மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு குழு, அரேபியா டெர்ரா என்று அழைக்கப்படும் பிராந்தியத்தின் வடக்கில் அமைந்துள்ள 10 பள்ளத்தாக்குகளை ஆராய்ந்தது.


இங்கு தான் சுனாமி இந்த நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என சந்தேகித்த விஞ்ஞானிகளுக்கு, தம்பிரிண்ட் டெர்ரைன் என அழைக்கப்படும் அசாதாரண நில தன்மையும் வலுசேர்த்தது.

 கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர்

கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர்

இங்குள்ள சேர்மானங்கள் எங்கிருந்து வந்தன என ஆராயும்போது தான், செவ்வாயின் வடக்கு நிலப்பரப்பினை சான்றுகள் சுட்டிக்காட்டுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகள் விட்டம், இடம் மற்றும் பூகோள தன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளத்தாக்குகளை ஆராய்ந்து அவை மெகா-சுனாமியுடன் ஒத்து போகின்றனவா என பார்த்தபோது, லோமோனோசோவ் பள்ளத்தாக்கு இந்த விளக்கத்திற்கு பொருத்தமாக தோன்றியது.

இந்த பள்ளத்தாக்கானது கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் (75 மைல்) பரந்து விரிந்துள்ள நிலையில், பரந்த ஆழமற்ற விளிம்பை கொண்டுள்ளது.

சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானது

சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானது

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது ஒரு மேலோட்டமான பெருங்கடலில் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கலாம் மற்றும் சரிந்த இடைநிறுத்தப்பட்ட நீர் குழிவில் இருந்து அரிப்பினால் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

இந்த பள்ளத்தாக்கு சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இதை தம்ப்பிரின்ட் டெர்ரைன் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

லோமோனோசோவ் பள்ளத்தாக்கு

லோமோனோசோவ் பள்ளத்தாக்கு

"பெரும்பாலும் லோமோனோசோவ் பள்ளத்தாக்கு கடலால் உருவாக்கப்பட்டிருக்கும் மற்றும் தம்ப்பிரிண்ட் டெர்ரைன் அலகுக்கு ஒத்த வயதிருக்கும் என வலுவாக உணர்த்துவதால், இது சுனாமியினால் உருவான பள்ளத்தாக்கு என்பதை வலியுறுத்துகிறது" என இக்குழு குறிப்பிட்டுள்ளது.


இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகம் பற்றிய நமது கடந்த கால புரிதலில் தண்ணீர் உள்ள கிரகமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மார்ஸ் எக்ஸ்பிரஸ்

மார்ஸ் எக்ஸ்பிரஸ்

3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் உள்பட பல நீர் ஆதாரங்கள் செவ்வாயில் இருந்தன என நாம் நினைத்த நிலையில், சமீபத்தில் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்பரப்பில் ஏராளமான மிகப்பெரிய நீர்நிலைகள் இருந்தன என இந்த ஆய்வு கூறுகிறது.


ESA இன் மார்ஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் தற்போதைய மற்றும் வருங்கால மிஷன்களில் இருந்து கிடைக்கும் தரவு முலம், விஞ்ஞானிகள் தண்ணீர் இருந்ததற்கான ஒரு தெளிவான காலவரிசையை பெற நம்பிக்கையுடன் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
A 75-mile-wide Martian crater may be 'ground zero' for a MEGA-TSUNAMI : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X