விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை ஏ10 வார்தாக் ஏமாற்றும் தந்திரம் இதுதான்!

|

வான்வழிப் போரின்போது ஒருவிதமான தந்திரங்கள் அல்லது தவறான நகர்வுகள் பயன்படுத்தப்படுகிறதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம் எனில், ஏ -10 வார்தாக் அது எதிர்கொள்ளக்கூடிய வான் எதிர்ப்பு பாதுகாப்புகளை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதைப் பற்றிய இந்த செய்தி உங்களுக்கு நிச்சயமாக சுவாரஸ்யமானதாக இருக்கும்.

ஏ -10 தண்டர்போல்ட் II

ஏ -10 தண்டர்போல்ட் II வகை விமானங்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஏ -10 வார்தாக். அடிப்படையில் மிக மெதுவான விமானமான இந்த ஏ -10 வார்தாக் , எப்போதும் மிகவும் தாழ்வாக தரைக்கு நெருக்கமாக இயங்க வேண்டும்.

இந்த வரம்புகளின் காரணமாக

இந்த வரம்புகளின் காரணமாக, அதனை நோக்கி தரையிலிருந்து வரும் எந்தொரு தாக்குதலிலும் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. எனவே இதுபோன்ற தரைவழி துப்பாக்கி தாக்குதல்களில் இருந்து எவ்வாறு இந்த வகை விமானங்கள் தங்களை பாதுகாத்து கொள்கின்றன என வியப்பாக உள்ளதா?

ஏமாற்றுவதற்காக ஒரு ஸ்மார்ட் தந்திரத்தை பயன்படுத்துகிறது

ஏ -10 வார்தாக் டைட்டானியம் காக்பிட் மற்றும் பாதுகாக்கப்பட்ட என்ஜின்கள் மற்றும் தேன்கூடு போன்ற வெளிப்புற அமைப்பை கொண்டுள்ளதால், இதுபோன்ற எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளமுடியும். ஆனாலும் இது விமான எதிர்ப்பு பாதுகாப்பு(anti-air defenses) அம்சங்களை ஏமாற்றுவதற்காக ஒரு ஸ்மார்ட் தந்திரத்தை பயன்படுத்துகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைக்கு ஒரு கேன் கருப்பு வண்ணப்பூச்சு மட்டுமே செலவாகும்.

ஏ -10 விமானத்தின் காக்பிட்டின் அடியில்

ஏ -10 விமானத்தின் காக்பிட்டின் அடியில் உள்ள பகுதியில் கருப்பு நீள்வட்டம் வரையப்பட்டுள்ளது. அவ்வளவுதான் இந்த தந்திரம். இந்த எதிர்விளைவு முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் இது நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளது. எப்படி என்பதை இதோ விரிவாக கூறுகிறோம்! வர்ணம் பூசப்பட்ட கருப்பு நீள்வட்டம் தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு கூடாரத்தை ஒத்திருக்கிறது. இதன்காரணமாக விமானம் வலதுபுறம் திரும்பினால், விமானம் இடதுபுறம் திரும்புவது போல் தெரிகிறது. இதனால் விமான எதிர்ப்பு துப்பாக்கி இடதுபுறத்தை நோக்கி சுடும் போது விமானத்தை தவறவிடுகிறது.

எளிய மற்றும் பயனுள்ள தொழில்நுட்பமாகும்

இது நிச்சயமாக விமான எதிர்ப்பு பாதுகாப்புகளை ஏமாற்றும் ஒரு மேதாவியான, எளிய மற்றும் பயனுள்ள தொழில்நுட்பமாகும்.

Best Mobiles in India

English summary
10 Warthog Uses This Smart Trick To Deceive Anti Aircraft Guns : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X