டைனோசர்களுக்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே 99% உயிரினங்கள் அழிந்தனவா?

|

மிகப்பெரிய அழிவு நிகழ்வின் காரணமாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து டைனோசர்களும் அழிந்துவிட்டன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கடந்த காலங்களில் குறைந்தபட்சம் மற்ற நான்கு நிகழ்வுகளுக்கான ஆதாரங்களை நாம் கண்டெடுத்துள்ளோம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. 2பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் அதுபோன்ற ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என அவற்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஸ்டேன்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்

ஸ்டேன்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்

ஸ்டேன்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நமது கிரகத்தின் வரலாற்றிலேயே மிகப்பழமையான இயற்கை பேரழிவுக்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஒற்றை செல் உயிரினங்கள் மட்டுமே இருந்திருக்க வாய்ப்புள்ளது. பழங்கால பாறைகளில் இருந்து கிடைத்த ஆதாரங்களின்படி, அப்போது பூமியிலிருந்த 99% அனைத்து உயிரினங்களும், டைனோசர்களை கொன்ற நிகழ்வைக் காட்டிலும் மிக கொடூரமான மிகப்பெரிய பேரழிவு நிகழ்வில் கொல்லப்பட்டுள்ளன என தெரிகிறது.

மிகப்பெரிய இயற்கை பேரழிவு

மிகப்பெரிய இயற்கை பேரழிவு

"பூமியின் உயிரியல் முழுவதும் நுண்ணுயிர்களால் நிரப்பப்பட்டிருந்தாலும், எது மிகப்பெரிய இயற்கை பேரழிவு என கருதப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. ஏனெனில் இது தொல்பொருள் படிமங்களில் பதிவாகாமல் இருந்திருக்கலாம்" என்கிறார் ஸ்டேன்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் மேல்கால்ம் ஹாட்ஸ்கிஸ்.

அமேசான்: ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!!அமேசான்: ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!!

விருந்து மற்றும் பஞ்சம்

விருந்து மற்றும் பஞ்சம்

"விருந்து மற்றும் பஞ்சம்" என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும், பூமியில் சிக்கலான உயிரினங்கள் தோன்றுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பான காலக்கட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பகுதி ஆக்ஸிஜன் தாதுக்கள் அல்லது கடலால் உட்கொள்ளப்பட்டதால், பூமியின் வளிமண்டலத்தில் குறைந்தளவு ஆக்ஸிஜனே இருந்தது.

சயனோபாக்டீரியா

சயனோபாக்டீரியா

இது ஒளிச்சேர்க்கை திறன் கொண்ட சிறிய கடல் உயிரினங்களான சயனோபாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த பாக்டீரியாக்கள் சூரிய ஒளியில் அபிவிருத்தி அடைந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யத் தொடங்கி வளிமண்டலத்திற்கு அனுப்பின.இது பெரிய ஆக்ஸிஜனேற்ற நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் உயிரினங்கள் செழிக்க உதவியதால், இந்த காலக்கட்டத்தை விருந்து என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பின்னர் அவைலத்தும் திடீரென ஒரு முடிவுக்கு வந்தது.

உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?

பாரிட் என்ற கனிமத்தைப் ஆராய்ந்தனர்

பாரிட் என்ற கனிமத்தைப் ஆராய்ந்தனர்

இது ஏன் நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்காக, ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கனடாவில் உள்ள தீவுகளில் காணப்படும் பாரிட் என்ற கனிமத்தைப் ஆராய்ந்தனர். அங்குள்ள நிலம் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பெரும்பாலும் மக்கள் காலடிபடாத இடமாக இருந்ததால், நமது கிரகத்தின் வரலாறு முழுவதும் ஆக்ஸிஜன் அளவைப் எவ்வாறு இருந்தது என ஆராய இது அவர்களுக்கு உதவக்கூடும்.

சுமார் 2.05 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

சுமார் 2.05 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

இந்த பாறைகளை ஆராய்ந்தில், சுமார் 2.05 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஸிஜன் உற்பத்தி அளவு வேகமாக வீழ்ச்சியடைந்து சுமார் 200 மடங்கு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. "இந்த வீழ்ச்சியால் உயிர்க்கோளத்திற்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் குறைந்த காரணத்தால், இது உயிரினங்களின் முடிவுக்கு வழிவகுத்தது மற்றும் நவீன பூமி மட்டங்களுடன் ஒப்பிடுகையில் 1 பில்லியன் ஆண்டு இடைவெளி தொடங்கியது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், இந்த கொடிய நிகழ்வு நமது கிரகத்தின் வரலாறு முழுவதும் அதிகளவு உச்சரிக்கப்படும் மாற்றங்களில் ஒன்றாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Did 99% of creatures go extinct billions of years before the dinosaurs?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X