Home
Scitech

விஞ்ஞானத்தால் கூட விளக்க முடியாத 9 மர்மான நிகழ்வுகள்!

ஆனால் ஏன் கொட்டாவி நிகழ்கிறது என்பதற்கான துல்லியமான காரணம் இன்னமும் உறுதியாக தெரியவில்லை.

சாமி என்ன சொல்கிறது என்பதை விட சயின்ஸ் என்ன சொல்கிறது என்பது தான் தர்க்கமாக எடுத்துக்கொள்ளப்படும் இந்த அதிநவீன காலத்தில், சயின்ஸ் கூட சைலன்ட் ஆக இருக்கும் சில மர்மமான சமாச்சாரங்கள் உள்ளன. அவைகளில் ஒன்பது விடயங்களை தேர்ந்து எடுத்து இங்கே தொகுத்து உள்ளோம். சரி, சாமி - சயின்ஸ் என்று சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக விடயத்திற்குள் வருவோம்!

01. மனிதர்கள் கொட்டாவி விடுவது ஏன்?

01. மனிதர்கள் கொட்டாவி விடுவது ஏன்?

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடிய ஒன்று - கொட்டாவி. ஆனால் ஏன் கொட்டாவி நிகழ்கிறது என்பதற்கான துல்லியமான காரணம் இன்னமும் உறுதியாக தெரியவில்லை. சமீபத்திய ஆய்வின் படி, கொட்டாவி என்பது மூளையைச் சுத்தப்படுத்தும் ஒரு தெர்மோர்முல்யூரிட்டி நடத்தை எனும் கருத்தை நோக்கி நகர்ந்துள்ளது, ஆனால் அதன் உண்மையான உயிரியல் செயல்பாடு இன்னும் தெளிவாக இல்லை. குரங்கில் இருந்து பிறந்த மனிதன், அதனிடம் இருந்து இந்த கொட்டாவி பழக்கத்தை பெற்று இருக்கலாமே என்றால் அதற்கும் வழியில்லை என்கிறது ஒரு ஆய்வு. அதாவது மனிதனை பார்த்து தான் சிம்பன்சிகள் கொட்டாவி விட கற்றுக்கொண்டன என்கிறது அந்த ஆய்வு.

 02. இந்த காளான் டெக்சாஸ் மற்றும் ஜப்பானில் மட்டுமே வளர்வது ஏன்?

02. இந்த காளான் டெக்சாஸ் மற்றும் ஜப்பானில் மட்டுமே வளர்வது ஏன்?

கொரியோயிடிஸ் கீஸ்டர் (Chorioactis geaster) எனும் காளானிய இனம் ஆனது டெக்சாஸ் மற்றும் ஜப்பானில் மட்டுமே காணப்படுகிறது. இந்த இரு இடங்களும் ஒரே லேட்டிட்யூட்யில் (நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு) உள்ளன, ஆனால் அதற்கு மாறாக வேறு எந்தவொரு காரணத்தினால் இந்த காளான்கள் இந்த இரண்டு புள்ளிகளில் மட்டும் வளர்கின்றன என்பது இன்று வரை புரியாத புதிர் தான். 2004 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வானது, இந்த காளான்களின் 'டி.என்.ஏ' ஆனது சுமார் 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு வரிசைகளாக பிரிக்கப்பட்டது என்று பரிந்துரைத்தது - அதற்கு மேல் தெளிவான விளக்கம் ஏதுமில்லை.

03. சனிகோளின் வட துருவத்தில் அறுகோண வடிவ புயல் உண்டாவது எப்படி? ஏன்?

03. சனிகோளின் வட துருவத்தில் அறுகோண வடிவ புயல் உண்டாவது எப்படி? ஏன்?

ஆம், சனி கிரகத்தின் வட துருவத்தில் ஒரு அறுகோண (ஹெக்ஸகன்) வடிவிலான புயல் உருவானது. ஒருமுறை அல்ல, கடந்த பல ஆண்டுகளாக இந்த புயல் உருவாகி வருகிறது. அது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் காசினி விண்கலத்தால் பல ஆண்டுகளாக புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட இதன் வடிவம் இன்று வரையிலான மர்மமானதாக இருக்கிறது. மேலுமொரு குழப்பமான விடயம் என்னவென்றால், விசித்திரமான வடிவில் உருவாகும் இந்த சனிக்கோள் புயல் ஆனது நிறத்தை மாற்றும் தன்மையையும் கொண்டு உள்ளது. ஆம் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக டர்க்கைஸ் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி உள்ளது.

04. தனித்து வாழும் குணத்தை மாற்றிக்கொண்ட ஹம்ப்பேக் திமிங்கலங்கள், ஏன்?

04. தனித்து வாழும் குணத்தை மாற்றிக்கொண்ட ஹம்ப்பேக் திமிங்கலங்கள், ஏன்?

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம். இது குரங்குகள் மரம் ஏறுவதை மறந்து போவதற்கு சமம். ஆம் ஆதிகாலத்தில் இருந்தே தனித்து வாழும் இயல்பை கொண்ட இந்த பழங்கால உயிரினத்தின் இயல்பு ஏன் மாறியது என்று விஞ்ஞானிகளால் உறுதியாக கூற முடியவில்லை. தற்போது இவைகள் 20 முதல் 200 வரையிலாக, கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

05. ரஷ்யாவின்

05. ரஷ்யாவின் "நடமாடும் வனப்பகுதி"யில் உள்ள வளைந்த மரங்களுக்கு எந்த விளக்கமும் இல்லை.!

ரஷ்யாவில் உள்ள களிமின்கிராட் பகுதி ஆனது "டான்சிங் ஃபாரஸ்ட்" என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த 1960 களில் நடப்பட்ட பைன் மரங்கள் "ஒரே மாதிரியாக" வளைந்து காணப்படுகின்றனர். அட்லஸ் ஒப்ஸ்குரா மற்றும் சில கோட்பாடுகளின் படி, கடுமையான காற்று, நிலையற்ற மண் போன்ற காரணத்தால் தான் இவைகள் வளைந்து காண்டப்படுகின்றனர் என்றாலும் கூட, நம்புபடி இல்லையே!

06. டார்க் மேட்டர் என்றால் என்ன?

06. டார்க் மேட்டர் என்றால் என்ன?

ஒரு பொருள் (மேட்டர்) என்பது புரோட்டான்கள், நியூட்ரான்கள், மற்றும் எலக்ட்ரான்கள் ஆகியவற்றால் செய்யப்படுகிறது, ஆனால் கருப்பொருள் (டார்க் மேட்டர்) எதனால் ஆனது என்பது இன்னமும் ஒரு மர்மமாகவே உள்ளது. இத்தனைக்கும் பிரபஞ்சத்தின் சுமார் 85 சதவிகிதத்தை எதுவென்று கண்டுபிடிக்க முடியாத டார்க் மேட்டர் தான் நிரப்பி உள்ளது, சத்திய சோதனை!

07. பூனைகளின்

07. பூனைகளின் "பர்" சத்தம்!

நீண்ட காலமாக, பூனைகளின் பர்ரிங் மெக்கானிஸத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. பர்ரிங் என்பது பூனை எழுப்பும் ஒரு வகையான சப்தம் ஆகும்.

08. ஒவ்வொரு வினாடியும் விண்வெளியில் இருந்து கிடைக்கும் புரிந்துகொள்ள முடியாத சிக்னல்கள்!

08. ஒவ்வொரு வினாடியும் விண்வெளியில் இருந்து கிடைக்கும் புரிந்துகொள்ள முடியாத சிக்னல்கள்!

ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்ஸ், (FRBs), சுருக்கமாக, ரேடியோ ஒளியின் பிரகாசமான உமிழ்வுகள், 500 மில்லியனுக்கும் அதிகமான சூரிய மின்சக்திக்கு தேவையான ஆற்றலை வெளியிடுகின்றன. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு வினாடியும் நடப்பதாக வானியலாளர்கள் நம்புகிறார்கள், ஆனால் அதில் வெறும் 30 சிக்னல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவைகள் என்ன? - யாருக்கும் தெரியாது.

09.

09. "வேற்றுகிரகத்தை" சேர்ந்த சைபீரிய பள்ளம்!

சுமார் 520-அடி அகலம் மற்றும் 139 அடி உயரம் உள்ள இந்த மாபெரும் (உடைந்த சுண்ணாம்பு) பள்ளதிற்கு பெயர் உண்டு (பான்தோம்) ஆனால் விளக்கம் இல்லை. சில உள்ளூர்வாசிகள் இதை "தி ஈகிள்'ஸ் நெஸ்ட்" என்று அழைக்கின்றனர், மேலும் அந்த பகுதி இறப்புடன் தொடர்புபடுவதாகவும், இதன் அருகே விளங்கினத்தின் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றனது.

More from GizBot

Best Mobiles in India

English summary
9 phenomena that science still can't explain: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X