நிலவிற்கு ஏன் போகவில்லை, நிலவிற்கு மீண்டும் ஏன் போகவேண்டும்..?

|

தொலைதூர குள்ள கிரகங்கள், சிவப்பு கிரகத்தில் தண்ணீர், ஆழமான மிக மர்மமான கருப்பு ஓட்டைகள் மற்றும் ஈர்ப்பலை சான்றுகள் என பல்லாயிரம் ஒளியாண்டுகள் தாண்டிய அற்புத விண்வெளி கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் அற்புதமான காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்..!

ஆனால், பூமி கிரகத்தின் இயற்கையான செயற்கைகோள் என்று கூறப்படும் நிலவு முன்னொரு காலத்தில் போட்டி போட்டது போல் பெரிய விடயமாக பார்க்கப் படவில்லை..! பிந்தைய காலத்தில் நிலவிற்கு யாரும் போகவில்லை ஆர்வமும் காட்டவில்லை. அப்படியாக நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் டார்க் சீக்ரெட் என்ன..? போன்ற கேள்விக்கான விளக்கத்தை முன்பு பதிவு செய்திருந்தோம்..!

தற்போது மீண்டும் ஏன் நிலவிற்கு போக வேண்டும் என்பதற்கான 8 காரணங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

காரணம் #08

காரணம் #08

நிலவு பழையதாகி விடவில்லை இன்றும் நிலவு ஆர்வம் கிளப்பும் உற்சாகமூட்டும் ஒரு விண்வெளி பொருள் தான்..!

பிரதிபலிக்கப்படவில்லை :

பிரதிபலிக்கப்படவில்லை :

நிலவு மனித கலாச்சாரத்தின் ஒரு வலிமையான அடையாளமாக இருப்பினும் அது மனிதகுலத்தின் சிறந்த சாதனைகளில் ஒன்றாக பிரதிபலிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இணைப்பு :

இணைப்பு :

அதிகம் ஆராயப்பட்டால் தான் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களுக்கும் மனிதகுலத்திற்க்கும் உள்ள இணைப்பு இன்னும் வலுவாகும். ஆக நிலவிற்கு மீண்டும் கட்டாயம் மனிதர்கள் போக வேண்டும்.

காரணம் #07

காரணம் #07

நிலவை நாம் இன்னும் முழுதாய் கண்டுபிடித்து முடித்து விடவில்லை..!

80 மணி நேரம் :

80 மணி நேரம் :

மொத்தமாக சந்திர தரையில் சுமார் 80 மணி நேரம் மட்டுமே மனிதர்களால் கழிக்கப்பட்டுள்ளது. அதில் அப்பல்லோ 17 இறங்கிய குறிப்பிட்ட தளத்தை சுற்றி ஆய்வு செய்ய மட்டுமே 22 மணி நேரம் செலவு செய்யப்பட்டுள்ளது.

நேரடி :

நேரடி :

என்னதான் ஆளில்லா விண்கலங்கள் மற்றும் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் மூலம் நிலவின் தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும் கூட நேரடியாக மனிதர்களின் கண்களால் காணப்பட்டு கைகளால் ஆராய்ப்படுதல் என்பது தனித்துவமானது.

காரணம் #06

காரணம் #06

அடுத்த தலைமுறை தொழில்நுட்ப நோக்கம்..!

வளர்ச்சி நிலை :

வளர்ச்சி நிலை :

வெற்றி அடையுமா, அடையாதா என்ற உத்திரவாதம் இல்லாமல் பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்து விண்வெளிக்குள் தொலைதூரம் செல்லும் நோக்கத்தில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கு பதில் அருகாமை நிலவில் அதிநவீன வருங்கால தொழில்நுட்பத்தை சோதனை செய்தால் வளர்ச்சி நிலை வேகமாக உயரும்..!

காரணம் #05

காரணம் #05

நிலவின் அருமையான அழகான மேற்பரப்பு காட்சிகளை பதிவு செய்ய..!

ஒரு காரணம் :

ஒரு காரணம் :

நிலவின் மீது ஏகப்பட்ட சந்தேகம் மர்மம் நீடிக்க இதுவரையிலாக எடுக்கப்பட்ட நிலவின் மோசமான மங்கலான தெளிவில்லாத வீடியோ காட்சிகளும் ஒரு காரணம் தான்..!

எச்டி' வீடியோ :

எச்டி' வீடியோ :

அதுவொரு பக்கம் இருக்க பூமி வாசிகளின் மிக அழகான ஈர்ப்பு பொருளான நிலவின் இனிமையான 'எச்டி' வீடியோவை பதிவு செய்ய மீண்டும் மனிதர்கள் நிலவிற்கு செல்ல வேண்டும்.!

காரணம் #04 :

காரணம் #04 :

மனித இனத்தின் அடுத்த குடியிருப்பு என்பதற்காக.!

வேற்று கிரக காலணி :

வேற்று கிரக காலணி :

எப்படி பார்த்தாலும் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நம்மால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடியாது. ஆக நமக்கு முடிந்த நம்மால் முடிந்த வேற்று கிரக காலணிகளை நிலவில் அமைப்பது தான் சிறந்தது..!

காரணம் #03 :

காரணம் #03 :

நிலவை விட மிக சிறந்த பிட் ஸ்டாப் சூரிய குடும்பத்தில் நமக்கில்லை..!

விண்வெளி ஆராய்ச்சி முயற்சி :

விண்வெளி ஆராய்ச்சி முயற்சி :

'பிட் ஸ்டாப்' என்றால் சர்வீஸ் மற்றும் எரிபொருள் நிரப்பும் இடம் என்று பொருள் படும். நிலவில் பிட் ஸ்டாப் அமைப்பதின் மூலம் பிற விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகள் சிறப்பாக நடத்தப்படும்.

காரணம் #02 :

காரணம் #02 :

நிலவு ஒரு நல்ல பயிற்சி மைதானமாகும்..!

செயல்முறை :

செயல்முறை :

செவ்வாய், வீனஸ் போன்ற வேறு சூரிய மண்டல கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்புவது நீண்ட மற்றும் ஆபத்தான ஒரு செயல்முறையாகும். உடன் விண்வெளி வீரர்களுக்கு நம்பமுடியாத ஆபத்துகள் காத்திருக்கலாம்.

பாதுகாப்பான பயிற்சி தளம் :

பாதுகாப்பான பயிற்சி தளம் :

ஆனால், நிலவு அப்படியில்லை. நிலவு ஒரு பாதுகாப்பான பயிற்சி தளமாகும். பிற கிரகங்களை அடைவதற்கு முன் நிலவில் பயிற்சிகள் மேற்கொள்ளலாம்..!

காரணம் #01 :

காரணம் #01 :

சதியாலோசனை கோட்பாடுகளின் வாய்களை மூடுவதற்காக..!

நிலவில் மறுபடியும் காலடி :

நிலவில் மறுபடியும் காலடி :

எதைக்காட்டிலும் நிலவு மீது தான் ஏகப்பட்ட சதியாலோசனை கோட்பாடுகள் இருக்கிறது எனலாம். அவைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் மனிதர்கள் நிலவில் மறுபடியும் காலடி எடுத்து வைத்தால் மட்டுமே முடியும்..!

Best Mobiles in India

English summary
8 Reasons We Should Go Back To The Moon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X