75 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு: ஒரு ஆச்சரிய தகவல்

|

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் டைனோசர்கள் ஒரு காலத்தில் நம் உலகை ஆண்டன என்பதுநம் அனைவருக்கும் தெரியும். மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் நம் பூமியில் இருந்து மறைந்துபோன வித்தியாசமான உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்து தங்களால் முடிந்த அனைத்தையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆராய்ச்சி குழு ஒரு கண்டுபிடிப்பில்

இப்போது, ஒரு ஆராய்ச்சி குழு ஒரு கண்டுபிடிப்பில் தடுமாறியுள்ளதை நாம் பார்க்கும் போது ஒரு உயிரினம் முற்றிலும் வித்தியாசமாக மிகப்பெரிய உயிரினங்களாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு டைனோசரின் மண்டை ஓடுகளில் டி.என்.ஏ இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இது எப்போதும் போல் நடப்பது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் நிச்சயமாக அது தவறு. இந்த டி.என்.ஏ 5.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ளது என்பது தற்போது அறியப்பட்டது.

அப்பவே சொன்ன பில்கேட்ஸ்., முன்னரே வீட்டு அடித்தளத்தில் உணவை சேமித்த பில்கேட்ஸ் மனைவி!அப்பவே சொன்ன பில்கேட்ஸ்., முன்னரே வீட்டு அடித்தளத்தில் உணவை சேமித்த பில்கேட்ஸ் மனைவி!

ண்டுபிடிப்பை தொல்பொருள்

இந்த அற்புதமான கண்டுபிடிப்பை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மேரி ஸ்விட்சர் என்பவர் கண்டுபிடித்துள்ளார். டி.என்.ஏ உள்ள மண்டை ஓடுகள் இதுவரை கண்டறியப்படாத முற்றிலும் வித்தியாசமான டைனோசருக்கு சொந்தமானது என்று கூறுகிறார். அமெரிக்காவின் மொன்டானா அருகே இந்த மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவை சுமார் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன என்றும் இதற்கு முந்தைய மதிப்பீடுகளை விட கிட்டத்தட்ட 15 மடங்கு பின்னோக்கியது என்றும் கூறுகின்றனர்.

 கூற்றுப்படி, மண்டை ஓடுகள் நன்கு பாதுகாக்கப்பட்ட செல்களைக்

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மண்டை ஓடுகள் நன்கு பாதுகாக்கப்பட்ட செல்களைக் கொண்டிருந்ததாகவும், இந்த மண்டை ஓட்டை இன்னும் ஆழமாக பரிசோதித்தபோது, மண்டை ஓட்டின் குருத்தெலும்புகளின் மேற்பரப்பில் வட்டக் கட்டமைப்புகள் இருந்ததாகவும், அவற்றில் சில ஒன்றாக இணைக்கப்பட்டிருந்ததாகவும், மற்றவை தனித்தனியாக இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர் மேரி ஸ்விட்சர் கூறுகிறார். மேலும் இந்த டைனோசரில் அசல் குருத்தெலும்பு புரதங்களின் எச்சங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

சீன அறிவியல் அகாடமியின்

சீன அறிவியல் அகாடமியின் ஆய்வின் மற்றொரு தொல்பொருள் ஆய்வாளரான அலிடா பெய்லூல் என்பவர் இதுகுறித்து கூறியபோது, "இந்த புதிய அற்புதமான முடிவுகள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதன் செல்கள் மற்றும் அவற்றின் சில உயிர் அணுக்கள் இன்னும் ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த டி.என்.ஏவை இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர், மேலும் இந்த ஆய்வு பண்டைய டி.என்.ஏவில் பணிபுரியும் விஞ்ஞானிகளை தற்போதைய வரம்புகளைத் தள்ளவும் புதிய முறைகளைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அலிடா கூறியுள்ளார்.

புரட்சிகரமானது என்றாலும்

இந்த கண்டுபிடிப்பு புரட்சிகரமானது என்றாலும், அது துல்லியமாக இல்லை என்று சிலர் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த காலத்திலும், இதேபோன்ற கண்டுபிடிப்புகள் இருந்ததாகவும், இவ்வளவு காலமாக எஞ்சியிருக்கும் டைனோசர்களின் டி.என்.ஏ மூலம் எதையும் கண்டுபிடிக்க முடியாது என்றும் சிலர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற ஒரு

இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பை இதுவரை சமீபத்தில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யார்க் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் மாத்யூ காலின்ஸ் என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'இந்த கண்டுபிடிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இது மிகச் சிறந்த வேலை, என்னால் இதுகுறித்து மேலும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
75 Million Year Old DNA Of A Dinosaurs May Have Been Found: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X