Subscribe to Gizbot

'நரகத்தனமாக' மாறிய நல்ல கண்டுபிடிப்புகள்..!

Written By:

ஒரு பொருளை நல்ல முறையில் பயன்படுத்த 1000 பேர் இருந்தாலும் கூட, அதே பொருளை மிகவும் தீங்கான முறையில் பயன்படுத்த குறைந்த பட்சம் பத்து பேராவது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படியாக, நல்ல விடயங்களுக்காக, நல்ல அர்த்தங்களுக்காக பயன்படுத்த கண்டுப்பிடிக்கப்பட்ட பல பொருள்களும், தொழில்நுட்பங்களும் கொடுமையான தீமைகளுக்காகவும், அழிவிற்காகவும் பயன்படுத்தப்பட்டு உள்ளன, மேலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்..!

அதை பற்றிய அதிர்ச்சியான ஒரு தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
#07 கண்டுபிடிப்பு :

#1

ட்ரைநைட்ரோடோலூயின் - டிஎன்டி (Trinitrotoluene - TNT)

ஜோசப் வில்ப்ரன்ட் :

#2

1863-ஆம் ஆண்டு ஜெர்மானிய வேதியியலாளர் ஜோசப் வில்ப்ரன்ட் முதன்முதலில் டிஎன்டி-யை உருவாக்கிய நோக்கம் என்னவென்று தெரியுமா..? - தனது ஆடைகளில் ஒரு தேன் நிற மஞ்சள் சாயத்தை உருவாக்கவே டிஎன்டியை உருவாக்கினார்..!

 உணர்ச்சிமிக்கது அல்ல :

#3

டிஎன்டி உருவாக்கம் பெற்ற அடுத்த சில ஆண்டுகளுக்கு அது வெடிக்கும் தன்மை கொண்டது என்பதை யாருமே கண்டறியவில்லை, பின் சில ஆண்டுகளுக்கு பின்பு டிஎன்டி உணர்ச்சிமிக்கது அல்ல என்றும் வெடிக்க சிரமமான ஒன்று எனவும் பிரிட்டன் நம்பியது.

பலி :

#4

பின்பு டிஎன்டி வெடிப்பு சக்தியை உணர்ந்த உலக நாடுகள், முதலாம் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்தம் முழுக்க முடிந்த அளவிலான டிஎன்டி-யை பயன்படுத்தி மனித உயிர்களை பலி வாங்கியது.

 #06 கண்டுபிடிப்பு :

#5

ஈயங்கலந்த பெற்றோல் (Leaded Petrol)

தொழில்மயமாக்கம் :

#6

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொழில்மயமாக்கம் தான் மனித முன்னேற்றத்தை வரையறுக்கும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அந்த சமயத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு நிகழ்த்த முடியாத கண்டுபிடிப்புகள் அதிகம் வரவேற்கப்பட்டன.

ஆக்டேன் :

#7

அந்த காலக்கட்டத்தில், ஈயம் சார்ந்த கலவை பெட்ரோலுடன் கலந்த போது கார்களின் இயந்திரங்களின் ஆக்டேன் அளவை அதிகரிக்க மற்றும் குறைக்க உதவும் என கண்டறியப்பட்டது, விரைவில் அது கிட்டத்தட்ட உலகில் உள்ள அத்துணை கார்களிலும் பயன்படுத்தப்பட்டது.

வெகுஜன நச்சு :

#8

கார்கள் நன்றாக இயங்கும் மறுபக்கம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக லீட் கலந்த பெட்ரோல் ஆனது மிக மோசமான வெகுஜன நச்சை (worst mass poisoning) உருவாக்கம் செய்துள்ளது.

இந்தியா :

#9

இந்த நச்சு தன்மை நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பல சுகாதர பாதிப்புகள் ஏற்படுகின்றன, முக்கியமாக இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மூளை சார்ந்த பாதிப்புக்கு இதுதான் காரணமாக திகழ்கிறது.

பாதிப்புகள் :

#10

ஈய பெட்ரோலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன என்பது சரியான அளவிற்கு தெரியவில்லை என்றாலும் கூட அது விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

#05 கண்டுபிடிப்பு :

#11

தி இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (The Internet of Things - IOT)

இணையம் :

#12

இணைய உலகம் அல்லது பொருட்களின் இணையம் (Internet of Things - IoT) என்பது மின்னணுவியல், மென்பொருள், உணரிகள் மற்றும் இணைய அணுக்கம் பதிக்கப்பட்ட இயற்பொருட்களின் இணையமாகும்.

வசதி :

#13

இந்த இணைப்பு ஹாக்கர்களுக்கு மிகவும் வசதியான ஒன்றாய் மாறியது, வை-பை பாஸ்வேர்ட்தனை வைத்துக்கொண்டு கூட ஹாக் சம்பவங்கள் நிகழ்த்தும் அளவு வசதிகளை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் வழங்கியது, வழங்கி கொண்டிருக்கிறது.

ஸ்பேம் :

#14

டிசம்பர் 2014-ல், 750,000 க்கும் மேற்பட்ட வை-பை சாதனங்களின், தொலைக்காட்சிகள், ஊடக சர்வர்கள் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் மூலம் ஹாக் செய்யப்பட்டன, மில்லியன் கணக்கான ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

#04 கண்டுபிடிப்பு :

#15

அணுக்கரு இணைவு (Nuclear Fusion)

ஆற்றல் :

#16

ஆரம்பகால அணுசக்தி வேலைகள் ஆனது, கிட்டத்தட்ட எந்தவிதமான கார்பன் உமிழ்வும் இல்லாமல், பொதுவான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தாவரங்களை விட அதிக ஆற்றல் கொண்டதாய், மற்றும் மிகவும் குறைவான கழிவுகள் கொண்டதாய், கதிர்வீச்சை தாங்கும் கலன்களில் மிகவும் மறைவான இடங்களில் வைத்து உற்பத்தி செய்யப்பட்டன.

தவறான பாதை :

#17

பின்பு, அணு சக்தி என்பது முற்றிலும் தலைகீழான தவறான பாதைக்குள் நுழைந்தது அதற்கு எடுத்துக்காட்டு தான் செர்னோபில் மற்றும் புகுஷிமா வெடிப்பு, ஹிரோஷிமா, நாகசாகி அணு குண்டு.

நிலை :

#18

இன்றைய தேதி வரையிலாக, உலக நாடுகள் முழுக்க பல ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது என்பது மீறி அணு சக்தி தான் ஒரு நாட்டின் சக்தியை நிரூபிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

 #03 கண்டுபிடிப்பு :

#19

ஒலிப்பெருக்கி (Loudspeaker)

பீட்டர் லௌரிட்ஸ் ஜென்சன் :

#20

1915-ஆம் ஆண்டு டேனிஷ் கண்டுபிடிப்பாளரான பீட்டர் லௌரிட்ஸ் ஜென்சன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அழகான ஒரு கருவி தான் - ஒலிப்பெருக்கி..!

ஓபரா இசை :

#21

சான் பிரான்சிஸ்கோவில் ஒரு பெரிய கூட்டதின் மத்தியில் சந்தோஷமான ஓபரா இசையை பெரிய சத்தத்தில் இசைக்க முதன்முதலில் ஒலிப்பெருக்கி பயன்படுத்தப்பட்டது, அதே ஒலிப்பெருக்கிகள் தான் ஜெர்மனியில் நாஜி கட்சி அதிகாரத்திற்கு வர ஒரு முக்கிய பங்கை வகித்தன.

ஆட்சி :

#22

ஜெர்மனியில் நாஜிக்கள் தங்கள் பிரச்சாரத்தை ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி நடத்த ஆரம்பித்தனர். அதன் பின் தான் நாஜிக்கள் அங்கு ஆதரவு பெற்று, பின்பு ஆட்சிக்கு வந்தது, இன அழிப்பை நிகழ்த்தியது.

#02 கண்டுபிடிப்பு :

#23

கூகுள் எர்த் (Google Earth)

காட்சி வரைபடங்கள் :

#24

கூகுளின் சக்திவாய்ந்த செயற்கைக்கோள், காட்சி வரைபடங்கள் நாம் உலகில் எங்கும், கண்கவர் மற்றும் விரிவான காட்சிகளை அணுக உதவுகிறது, அதற்கு கூகுளுக்கு பெரிய நன்றி சொல்லலாம்.

தீவிரவாதி :

#25

கூகுள் எர்த் வெகுஜன மக்களுக்கு உதவுவது போலவே, மறுபக்கம் தீங்கு விளைவிக்கும் தீவிரவாதிகளுக்கும் உதவிக்கொண்டே தான் இருக்கிறது என்பதும் நிதர்சனம் தான்.

#01 கண்டுபிடிப்பு :

#26

சைக்லோன் பி (Zyklon B)

பூச்சிக்கொல்லி :

#27

சைக்லோன் ஏ என்பது நீர் மற்றும் வெப்ப வெளிப்பாடு கொண்ட ஒரு ஹைட்ரஜன் சயனைடு வெளிக்கிடும் ஒரு பூச்சிக்கொல்லியாகும்.

நாஸி சித்திரவதை முகாம் :

#28

பின்பு அந்த பூச்சிக்கொல்லியானது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை கொல்ல உதவியது, அதாவது நாஸி சித்திரவதை முகாம்களில் கொலை செய்யும் ஒரு விஷ வாயுவாக ஜெர்மனியால் பயன்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க :

#29

ஹிட்லரின் நாஸி : கதவுகளுக்கு பின் நடந்த அருவருப்பான சோதனைகள்..!


விலகாத மர்மம் : அமிலியா எர்ஹர்ட்டின் கடைசி டிரான்ஸ்மிஷன்..!


ஹிட்லர் காதலியுடன் நலமாக வாழ்ந்தார் : சர்ச்சைக்குரிய ஆவணம் வெளியீடு..!

தமிழ் கிஸ்பாட் :

#30

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
7 Well-Meaning Inventions That Turned Evil. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot