ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறித்து யாரும் அறியாத 7 விஷயங்கள்- நம்பமுடியாத உண்மைகள்!
நாசா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி நாசா நிறுவனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம். கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி அன்று பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.

75 ஆயிரம் கோடி
குறிப்பாக இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு
குறிப்பாக பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. குறிப்பாக இந்த புதிய தொலைநோக்கி, முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்குசக்தி மற்றும் திறன் கொண்டதாகும்.

ஹப்பிள் தொலைநோக்கியில் பல பிரச்னைகள்
விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்காக, 1990ல் நாசா அனுப்பிய 'ஹப்பிள்' என பெயரிடப்பட்ட தொலைநோக்கியில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை நாசா உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள்
அதேபோல் இதனுள் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் உபயோகத்தை பொறுத்து இந்த தொலைநோக்கி அதன் உத்தேசித்த ஆயுட்காலஅளவான 10 ஆண்டுகளை கடந்தும் விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் திறன் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

அப்சர்விங் பொசிஷன்
சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. அது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

தங்கக் கண்ணாடி
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது. அதன் அகலம் 21.32 அடி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக செயல்படுகிறது.

உலகம் தோன்றியது எப்படி
குறிப்பாக உலகம் தோன்றியது எப்படி என்று கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். இப்படி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த நட்சத்திரங்கள் குறித்து இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications