ஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.!
ஸ்டீபன் ஹாக்கிங் முதல் மணைவி ஜேன் ஹாக்கிங்-கை சில வருடங்களில் விவாகரத்தில் செய்தார், அடுத்து இரண்டாவதாக அவருக்குசேவை செய்த நர்ஸை- திருமணம் செய்தார் அவர் பெயர் எலைன் மேசன்.
ஸ்டீபன் ஹாக்கிங் - வெறும் கோட்பாடுகளையும், கருத்துப்படிவங்களையும், கணிப்புகளையும் மட்டும் உருவாக்கியவர் அல்ல, அறிவியலையும், அண்டத்தையும் சற்று அதீதமாய் புரிந்து கொண்டவரும் ஆவார்.

ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றோர் பெயர் என்னவென்றால் ஃபிராங்க் மற்றும் ஐசோபல், இவர் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டீன்
ஸ்டீபன் ஹாக்கிங் பள்ளி காலங்களில் அவருக்கு வைத்த நிக் நேம் என்னவென்றார் ஐன்ஸ்டீன், மேலும் அவருக்கு ஐன்ஸ்டீன் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பின்பு அல்பன்ஸ் உயர்நிலைப் பள்ளியில், அவர் பழைய தொலைபேசி சுவிட்ச்போர்டு, கடிகாரம் பாகங்கள், மற்றும் பல்வேறு தொழல்நுட்பம் சார்ந்த பொருட்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்
எனக் கூறப்படுகிறது, பின்பு இந்த சாதனங்களை பழுது பார்க்கும் ஆற்றலைக் கொண்டிருந்தார் ஹாக்கிங்.

ஏலியன்கள் இருப்பது உறுதி
ஸ்டீபன் ஹாக்கிங் 21-வது வயதில் மோட்டார் நியூரோன் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பல்வேறு சாதனை செய்துள்ளார். பின்பு 2010-ஆம் ஆண்டிலேயே ஏலியன்கள் இருப்பது உறுதி, மற்றும் அவைகள் பூமிக்கு நட்பு பாராட்டும் முறையில் நடந்து கொள்ளாது என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபன் ஹாக்கிங்;
ஸ்டீபன் ஹாக்கிங் முதல் மணைவி ஜேன் ஹாக்கிங்-கை சில வருடங்களில் விவாகரத்தில் செய்தார், அடுத்து இரண்டாவதாக அவருக்கு சேவை செய்த நர்ஸை- திருமணம் செய்தார் அவர் பெயர் எலைன் மேசன், இவரை 2006-ல் விவாகரத்து செய்தார் என்பது குறப்பிடத்தக்கது.

பெண்கள்:
உலகில் மிகவும் மர்மமான விஷயம் என்னவென்று கேட்டபோது, ஹாக்கிங் பதிலளித்தார்- அவர் கூறியது
பெண்கள்.

மர்மமான காயங்கள்:
ஒருமுறை ஸ்டீபன் ஹாக்கிங்;-ன் மகள் அவருடைய உடம்பில் பல மர்மமான காயங்கள் இருக்கிறது என்று காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார், பின்பு காவலர்கள் ஹாக்கிங்; இடம் வந்து அதைப் பற்றி விசாரித்தபோது, அதைப் பற்றி பதில் அளிக்கமால் மறுத்துவிட்டார். ஆனால் இந்த காயங்களுக்கு முழுக்காரணம் அவருடைய மணைவி என்று தகவல் வெளிவந்துள்ளது.

எச்சரிக்கை மணி
கடந்த 2018 மார்ச் 14 ஆம் தேதியன்று, இனி இந்த உலகத்திற்கான "எச்சரிக்கை மணி" ஒலிக்காது என்று வருத்தப்படும் அளவிற்கு ஒரு மரணம் நிகழ்ந்தது. அது, அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்-ன் (Stephen William Hawking) மரணமாகும்.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர்.!
ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சம், நமது பூமி கிரகத்தை போன்றே இருக்கும் பல கிரகங்களை கொண்டு இருப்பதாகக் கூறுகிறது. சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆய்வுக்கட்டுரையானது, பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கிறது.


Click it and Unblock the Notifications








