Home
Scitech

நம்பினால் நம்புங்கள் : இவர்களுக்கெல்லாம் 'இன்னொரு முகம்' இருக்கு..!

எல்லோருமே சாதனைமிக்க படைப்பாளியாகி விட முடியுமா என்ற கேள்விக்கு விடை கிடையாது. ஆனால் எல்லோருக்குள்ளும் படைப்புத்தன்மை இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை - நிச்சயமாக இருக்கிறது..!

சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்களை நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர்களை பற்றி துல்லிமாக தெரியாது. எடுத்துக்காட்டுக்கு ஆபிரகாம் லிங்கன் யார் என்று கேட்டால் அவர் ஒரு அரசியல்வாதி என்ற வார்த்தை தான் முதலில் வருமே தவிர படைப்பாளி என்று யாரும் கூற மாட்டார்கள், ஏனெனில் அவர் படைப்பாளி என்பது நம்மில் பெரும்பாலோனோர்களுக்கு தெரியாது.

சிலர் இந்தந்த படைப்புகளை நிகழ்த்தினார்கள் என்று கூறினால் உங்களால் நம்பவே முடியாது. அப்படியான படைப்புகளையும் 'நமக்கு நன்றாக பரிட்சயமான' படைப்பாளிகளையும் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம்..!

படைப்பாளி #1

படைப்பாளி #1

ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln)

நீராவிக்கப்பல் :

நீராவிக்கப்பல் :

டெட்ராய்ட் நதியில் ஓடும் வண்ணம் ஒரு நீராவிக்கப்பல் மாடலை வடிவமைத்தார் லிங்கன், ஆனால் அது பயன்பாட்டில் கொண்டுவர படவில்லை..!

படைப்பாளி #2

படைப்பாளி #2

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)

குளிர் சாதனப்பெட்டி :

குளிர் சாதனப்பெட்டி :

அறிவியல் கோட்பாடுகளை வகுத்த ஐன்ஸ்டீன் ஒரு சமையலறை கருவியை உருவாக்க முயன்றார், ஆம் 1926 ஆம் ஆண்டிலேயே குளிர் சாதனப்பெட்டிக்கான டிசைனை தொடங்கினார். ஆனால் அது புறக்கணிக்கப்பட்டது.

படைப்பாளி #3

படைப்பாளி #3

தாமஸ் பெயின் (Thomas Paine)

புகையில்லா மெழுகுவர்த்தி :

புகையில்லா மெழுகுவர்த்தி :

எழுத்தாளரும் மற்றும் அரசியல் மெய்யியலாளருமான தாமஸ் புகையில்லா மெழுகுவர்த்தி, ஆரம்ப கால நீராவி என்ஜின்கள் மற்றும் ஒரு அடர்ந்த சக்கரம், மஞ்சள் காய்ச்சலுக்கான காரணங்கள், இரும்பு பாலம் கட்டுவதறகான உற்சமாக திகழ்ந்தது போன்ற பல படைப்புத்தன்மைக்கு சொந்தக்காரர் ஆவார்.

படைப்பாளி #4

படைப்பாளி #4

ரூவால் டால் (Roald Dahl)

நரம்பியல் அறுவை தொழில்நுட்பம் :

நரம்பியல் அறுவை தொழில்நுட்பம் :

குழந்தைகள் புத்தக ஆசிரியரான ரூவால் டால், 1960-களில் ஒரு புதிய நரம்பியல் அறுவை தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்..!

படைப்பாளி #5

படைப்பாளி #5

ஹெடி லாமர் (Hedy Lamarr)

அதிர்வெண் துள்ளல் :

அதிர்வெண் துள்ளல் :

1930 மற்றும் 1940 களில் ஹாலிவுட்டை கலக்கிய நடிகையான ஹெடி லாமர் வெவ்வேறு சேனல்கள் இடையே சிக்னல் ஜம்ப் மூலம் ரேடியோ டிரான்ஸ்மிஷன் நடத்தும் அதிர்வெண் துள்ளலில் ஒரு புதிய முறை உருவாக்கத்தில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்.

படைப்பாளி #6

படைப்பாளி #6

ஹாரி ஹவ்டுனி (Harry Houdini)

டைவிங் உடை :

டைவிங் உடை :

மாயாஜால மாஸ்டர் ஆன ஹாரி ஹவ்டுனி, 1917-ல் காப்புரிமை மூலம் அவரது தனிப்பட்ட அறிவை வைத்து புதிய வகை ஆழ்கடல் டைவிங் உடை ஒன்றை வடிவமைத்தார். அந்த உடையை அணிந்தவர் மேற்பரப்பிற்கு திரும்ப வேண்டுமென்றால்நீருக்குள் இருந்தபடியே அதை எளிதாக கழட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

படைப்பாளி #7

படைப்பாளி #7

சார்லஸ் லின்ட்பெர்க் (Charles Lindbergh)

பயோமெக்கானிக்ஸ் :

பயோமெக்கானிக்ஸ் :

1927-ல் நியூயார்க் மற்றும் பாரிஸ் இடையில் தனி விமான போக்குவரத்தின் 'ஐகான்' ஆக திகழ்ந்த சார்லஸ் பயோமெக்கானிக்ஸ் துறையில் ஈடுபாடு கொண்டவர் ஆவார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நியூட்டனின் யாரும் அறிந்திராத ஒரு கண்டுபிடிப்பு, மூடி மறைக்கப்படுகிறதா..?


வின்ஸ்டன் சர்ச்சில் கட்டிக்காத்த ரகிசயம் அம்பலம்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
7 Historical Figures You Didn’t Know Were Inventors. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X