Home
Scitech

நீங்க SINGLE-ஆ.? முதலில் இதை படிங்க; 5000 சிங்கிள்ஸ் பங்கேற்ற ஆய்வின் அதிர்ச்சிகரமான முடிவுகள்.!

அவர்களிடம் பலவகையான வினாக்கள் கேட்கப்பட்டு பதில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேள்விக்கு சுமார் 66% மக்கள் "ஆம்" என்று கூறியுள்ளனர். அதாவது தொலைபேசியால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது.

நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலியாக இருந்தாலும் சரி, நீங்கள் சீரிஸியாக பேசிக்கொண்டிருக்கும் போது உங்களை சற்றும் கவனிக்காமல் யாரவது மொபைலை நோண்டிக்கொண்டிருந்தால் அணுஉலை போல கொதிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

அதிலும் குறிப்பாக டேட்டிங் செய்யும் போதும் அல்லது பிரியமானவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் போதும், யாரவது ஒருவர் மொபைலை கையில் எடுத்தாலே சரியான எரிச்சல் உண்டாகும். இதற்கு நீங்கள் "ஆமாம்.. ஆமாம்.. கடுப்பாகும் தான்" என்று ஒற்றுக்கொண்டால் - சமீபத்தில் நிகழ்த்தப்பட்டதொரு ஆய்வின் 66% பேரில் நீங்களும் ஒருவர். ஆனால் அந்த 25% பேர் சொன்ன "மேட்டரை" எப்படி ஜீரணித்து கொள்வீர்கள் என்று தான் புரியவில்லை.!

நிச்சயமாக உதவும்.!

நிச்சயமாக உதவும்.!

அதென்ன ஆய்வு.? வேறென்னென்ன கேள்விகளுக்கான பதில்களை அந்த ஆய்வு வெளிப்படுத்தியது.? இது சிங்கிள்-ஆக இருக்கும் உங்களை மிங்கிள் ஆக மாற்றுமா.? அல்லது அதற்கு உதவுமா கேட்டால் - நிச்சயமாக உதவும்.!

பெண் அல்லது ஆண் நண்பர்கள் இல்லாதவர்கள்

பெண் அல்லது ஆண் நண்பர்கள் இல்லாதவர்கள்

இது டேட்டிங் தளமான மேட்.காம் நிகழ்த்தியதொரு ஆய்வாகும். "சிங்கிள்ஸ் இன் அமெரிக்கா" என்கிற இந்த படிப்பினையில் அமெரிக்காவில் உள்ள 5,000/-க்கும் மேற்பட்ட சிங்கிள்ஸ்'களிடம் (அதாவது காதலர்கள் அல்லது பெண் அல்லது ஆண் நண்பர்கள் இல்லாதவர்கள்) உட்படுத்தப்பட்டுள்ளன.

உறவுகளுக்குள் விரிசல்.?

உறவுகளுக்குள் விரிசல்.?

மற்றும் அவர்களிடம் பலவகையான வினாக்கள் கேட்கப்பட்டு பதில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேள்விக்கு சுமார் 66% மக்கள் "ஆம்" என்று கூறியுள்ளனர். அதாவது தொலைபேசியால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது என்பதை பெரும்பாலும் ஒற்றுக்கொண்டுள்ளனர்.

பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தாலே.!

பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தாலே.!

அந்த 66% பேரில் 58 சதவிகிதத்தினர் தங்கள் "டேட்" தொலைபேசியை மேஜை மீது வைப்பதை கூட வெறுக்கிறார்கள். இன்னும் ஒருபடி கீழே இறங்கினால், 41 சதவீதத்தினர் தங்களது "டேட்" அவரின் தொலைபேசியை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தாலே முரட்டுத்தனமாக மாறிவிடுவார்களாம்.

பண்புகளை எடை போடுவது!

பண்புகளை எடை போடுவது!

அதோடு முடிந்துவிடவில்லை இந்த ஆய்வு. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வைத்திருப்பவர்களையும் வம்பிழுத்துள்ளது. டேட்டிங் செய்யும் போது ஆண்ட்ராய்டு வாசிகள் ஐபோன் வைத்திருப்பவரை 15 மடங்கு அதிகமாக மதிப்பீடு (அதாவது ஆட்களை பார்த்தே அவர்களை பற்றிய பண்புகளை எடை போடுவது) செய்கின்றன.

பெண்கள் இன்னும் மோசமாம்.!

பெண்கள் இன்னும் மோசமாம்.!

மறுகையில் உள்ள ஆப்பிள் ரசிகர்கள் 21 மடங்கு அதிகமாக ஆண்ட்ராய்டு பயனாளர்களை மதிப்பிடுகின்றனர். இந்த மதிப்பீடு செய்யும் விடயத்தில் பெண்கள் இன்னும் மோசமாம். அதாவது 92% பெண்கள், தான் "டேட்" செய்யும் நபர் ஒரு பழைய மொபைலை வைத்திருந்தால் அவரை மிகவும் குறைவாக (மறுவார்த்தையில் தாழ்வாக) மதிப்பிடுகிறார்களாம்.

புண்ணியமில்லாத ஒன்றாகிவிடும்.!

புண்ணியமில்லாத ஒன்றாகிவிடும்.!

ஒட்டுமொத்தமாக 14 சதவிகித சிங்கிள்ஸ், ஒரு ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடைந்திருந்தால் அல்லது கிராக் ஆகி இருந்தால் அந்த டேட்டிங் புண்ணியமில்லாத ஒன்றாகிவிடும் என்று கூற, மற்றொரு 14% பேர்கள் போட்டோ கிளிக் செய்யும் போது ஏற்படும் சப்தம் மிகவும் எரிச்சலூட்டும் ஒன்றாகும் என்றும் கூறியுள்ளனர்.

ஏமாற்றினால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும்.!

ஏமாற்றினால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும்.!

ஸ்மார்ட்போன் பழக்கங்கள் தவிர்த்து பாலியல் உறவுகள் சார்ந்த கேள்வியொன்றில் நான்கில் ஒரு சிங்கிள் (அதாவது 25% பேர்), வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பம் உள்ளதாக கூறியுள்ளனர்.

ஒரு காரணமும் சொல்கின்றனர்.!

ஒரு காரணமும் சொல்கின்றனர்.!

அந்த 25% பேரில் பாதி சதவிகிதத்தினர் இதுபோன்றதொரு ரோபோட் உடன் செக்ஸ் வைத்து கொள்வதற்கு ஒரு காரணமும் சொல்கின்றனர். ஒருவேளை தங்களின் துணை அவர்களை ஏமாற்றினால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும் என்பதே அந்த காரணம்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.!

இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.!

என்ன.? இயந்திரங்களுடன் உறவா.? என்று ஷாக் ஆக வேண்டாம். செக்ஸ் டாய்ஸ் ஆனது இன்று செக்ஸ் ரோபோட்ஸ்களாக வளர்ச்சியடைந்து நிற்கிறது என்பதே நிதர்சனம். பெண் வடிவிலான பல செக்ஸ் ரோபோட்களை "சந்தித்த" அல்லது கேள்விப்பட்ட நாம் இந்த 2017-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் நிறைந்த ஆண் பாலியல் ரோபோக்களை சந்தையில் காணவுள்ளோம்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
ஜீரணித்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.!

ஜீரணித்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.!

ஆம், உங்கள் கற்பனைகளை பறக்க விடுங்கள். நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அவைகள் அனைத்துமே நடக்கவுள்ளது. ஆரம்ப கால செக்ஸ் டாய்ஸ் உருவாக்கம் பெற்றதே பெண்களுக்காக தான் என்பதை ஏற்றுக் கொள்பவர்களால் இந்த விடயத்தை ஜீரணித்து கொள்ள முடியும், ஏனையோர்கள் சற்று பாவம் தான்.

ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்

ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன் கொண்ட ஹார்மனி ஏஐ ஆப் (எனது மெய்நிகர் காதலி) மற்றும் பெண் வடிவிலான ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்களை தொடர்ந்து 'மேல் செக்ஸ் ரோபோட்'கள் ரெடியாகிறது. கலிபோர்னியா அடிப்படையிலான ரியல்போட்டிக்ஸ் (Realbotix) நிறுவனமானது ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்களை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளது. இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த 2017-ஆம் ஆண்டே இவைகள் சந்தைகளை தாக்கவுள்ளது என்பது தான்.

தேவைகளை பூர்த்தி செய்யும்

தேவைகளை பூர்த்தி செய்யும்

ஏற்கனவே உருவாக்கம் பெற்றுள்ள ஹார்மனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை, ஒரு ரோபோ ஹெட் சிஸ்டத்துடன் இணைப்பதின் வாயிலாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளுமையை ரியல்போட்டிக்ஸ் உருவாக்கவுள்ளது. அது பேசுவது, நடப்பது மட்டுமின்றி பாலியல் ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்

மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்

தற்போது வரையிலாக பெண் அவதாரங்களில் மட்டுமே கிடைக்கும் ப்ரீலோடட் செய்யப்பட்ட ஹார்மனி ஆப் ரோபோ தலைகளானது அதன் தனிப்பயனாக்கங்களின் அளவைப் பொறுத்து 15,000 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு விற்பனையாகிறது. அந்த ரோபோக்கள், ஹார்மோனி ஏஐ மூலம் இயங்கும் மற்றும் அவைகளை ஒரு மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்.

பிளக் மற்றும் பிளே டிவைஸ்

பிளக் மற்றும் பிளே டிவைஸ்

குறிப்பிட்ட பயன்பாட்டை கொண்டு பயனர்கள் தங்களின் விருப்பத்தின்கீழ் செக்ஸ் ரோபோட்ஸ்களை தனிப்பயனாக்கலாம் என்பதும் தற்போது தயாராகும் ஆண் செக்ஸ் ரோபோட்களானது பயோனிக் ஆணுறுப்பு கொண்டு வடிவமைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஐ திறன்கொண்டு இயங்கும் இந்த ஆண் ரோபோக்கள் ஆனது ஒரு பிளக் மற்றும் பிளே டிவைஸ் கொண்டிருக்குமென்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.

'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்

'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்

"பிளே டிவைஸ் இடம்பெறும் என்பதின் பொருள் பயனர்கள் விரும்பும் வரை செல்லலாம் என்பதேயாகும். கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு, ஆண் ரோபாட்டின் 'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கும் சுதந்திரமும் வழங்கப்படும்" என்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெக்முல்லன் கூறியுள்ளார்.

இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி

இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி

கடந்த ஆண்டு ஜெர்மனியில், உலகின் முதல் செக்ஸ் பொம்மைகளுக்கான பாலியல் தொழில் திறந்துவிடப்ப்பட்டதென்பதும், மறுகையில் பாலியல் பொம்மைகளை வாடகைக்கு விடும் சீன பயன்பாடு ஒன்றானது இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் படிக்க தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
66% Of People Hate Phone Distraction On Dates, And 25% Are OK With Having Sex With A Robot. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X