இது திரைப்படக் காட்சி இல்லை: முதல் அடி எடுத்துவைக்கும் உலகின் மிகப்பெரிய ரோபோ- அடுத்த அறிவியல் முன்னேற்றம்!

|

60 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ரோபோ முதல் அடி எடுத்துவைக்கும் காட்சி குறித்து பார்க்கலாம்.

குண்டம் தொழிற்சாலையில் மிகப்பெரிய ரோபோ

குண்டம் தொழிற்சாலையில் மிகப்பெரிய ரோபோ

அவதார் எக்ஸ் ஆய்வகம் உணவகங்களில் ட்ரோன் சேவையகங்கள் கொண்டுவந்ததன் மூலம் ஜப்பானின் பல பகுதிகள் ரோபோடிக்ஸ் துறையை முழுமையாக ஏற்றுக்கொண்டு வருகின்றன. அதேபோல் அந்நாட்டின் சமீபத்திய தொழில்நுட்ப சாதனையை கொண்டு வந்துள்ளது. ஜனவரி 2020 முதல் குண்டம் தொழிற்சாலையில் யோகோகாமா உலகின் மிக உயரமான ரோபோவை உருவாக்கி வருகிறது.

உலகின் மிக உயரமான ரோபோ

உலகின் மிக உயரமான ரோபோ புகைப்படம் இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது. இந்த ரோபோவின் உயரம் 60 அடி ஆகும். பிரமாண்ட இயந்திரமாக இருக்கும் இந்த ரோபோ டோக்கியோவுக்கு தெற்கே இருக்கும் யோகோகாமா துறைமுகத்தில் உருவாக்க பணியில் இருக்கிறது.

தீவிரமாக நடக்கும் கட்டுமானப்பணி

தீவிரமாக நடக்கும் கட்டுமானப்பணி

கோவிட்-19 பரவல் காரணமாக உலகின் பல தொழில்கள் முடங்கிய நிலை ஏற்பட்டது. கோவிட்-19 பரவல் பல கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியது. இருப்பினும் குண்டம் ரோபோ உருவாக்க பணி முடிவடைவதற்கான முழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் 2020 இல் அறிமுகமாகும் இந்த பிரமாண்ட ரோபோ கால்களை தூக்கி வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

கதையின் கதாபாத்திரமான ரோபோட்

யோஷியுகி டொமினோ மற்றும் சன்ரைஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஜப்பானிய அறிவியல் கற்பனை கதாபாத்திரம் இது என கூறப்படுகிறது. முதன்முறையாக 1979 ஆம் ஆண்டில் மொபைல் சூட் குண்டம் என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் போர் போன்ற அமைப்பில் மாபெரும் ரோபோக்களை கதாபாத்திரமாக கொண்டிருந்தது.

கிரேன் மீது பொருத்தப்பட்டிருக்கும் ரோபோட்

கிரேன் மீது பொருத்தப்பட்டிருக்கும் ரோபோட்

குண்டம் 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், வீடியோ கேம்கள் உள்ளிட்டவைகளில் தோன்றியது. இதுகுறித்து மைக்கேல் ஓவர்ஸ்ட்ரீட் பதிவேற்றிய வீடியோகாட்சியில் தி குண்டம் ரோபோ கிரேன் மீது பொருத்தப்பட்டிருக்கும் வகையில் இருக்கிறது. இருப்பினும் கதாபாத்திரத்தை தாண்டி நிஜமாக இருக்கும் குண்டம் ரோபோ பல்வேறு பகுதிகளில் மாறிஇருக்கிறது.

முழுவிவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

முழுவிவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

குண்டம் ரோபோ குறித்த மேற்பார்லையில் சண்டையிடும் வகையில் இந்த ரோபோ இன்னும் தயாராகவில்லை. இந்த காட்சியில் ரோபோ முழுமையாக முடிவடைந்த வண்ணம் இருக்கிறது. மனிதர்களை போன்றே இந்த ரோபோ கால் மூட்டுப்பகுதியை உயர்த்தி அடியெடுத்து வைக்கும் வகையில் இருக்கிறது. இந்த ரோபோவின் செயல்பாடு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: mymodernmet.com

Pic, Video Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
60 Feet Tall Real Gundam Robot Took its First Step in Japan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X