சாட்சிகளோடு நிரூபனமான 6 நம்பமுடியாத துரோகங்களும், உண்மைகளும்.!

  சதியாலோசனை கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ அல்லது ஒரு நாட்டின் அரசாங்கமோ ஒரு விடயத்தை மிகவும் திட்டமிட்டு நடத்தி அதை மிகவும் ரகசியமாகவே பாதுகாத்து வைத்திருக்கும் நிகழ்வுகள் அல்லது விடயங்களாகும்.

  சாட்சிகளோடு நிரூபனமான 6 நம்பமுடியாத துரோகங்களும், உண்மைகளும்.!

  நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு நிலைப்பாட்டில் ஏதோவொரு சதியாலோசனை கோட்பாட்டை அறியாமல் கடந்து வந்திருப்போம் அல்லது அறிந்தும் அதை நம்பாமல் இருந்திருப்போம். ஆனால் அவைகள் ஒருகட்டத்தில் உண்மையென நிரூபிக்கப்பட அதை நம்பியே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவோம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  நம்பட்ட, நம்புவதற்கு மறுக்கப்பட்ட 6 கோட்பாடுகள்

  சில காரணங்களால் 2017ஆம் ஆண்டானது மிகவும் வெளிப்படையான ஒரு ஆண்டாகும். ஏனெனில் சதியாலோசனை கோட்பாடுகள் என்று நம்பிவந்த, ஒருவேளை இருக்கலாமென நம்பட்ட, நம்புவதற்கு மறுக்கப்பட்ட 6 கோட்பாடுகள் இந்தாண்டு உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது. அவைகள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.

  கோட்பாடு 01: வானிலை மாதிரியாக்கம் என்பது சாத்தியமே.!

  வெதர் மாட்டிங் (Weather modding) என்பது வேண்டுமென்றே வானிலையை வலுவிழக்க அல்லது மாற்றும் ஒரு செயலாகும். இம்மாதிரியான வானிலை மாற்றத்தின் மிக பொதுவான வடிவம் - மழையை அல்லது பனியை அதிகரிப்பது தான். இதன் விளைவாக உள்ளூர் நீர் வழங்கலை அதிகரிக்கலாம்.

  பேசுவதற்கு சர்ச்சைக்குரியது

  கடுமையான வெயில் அல்லது சேதத்தை ஏற்படுத்தும் சூறாவளி போன்ற அபாயகரமான வானிலைகள் ஏற்படுவதை தவிர்க்கவும், தடுக்கவும் கூட இந்த வானிலை மாதிரியாக்கம் உதவும். இது சாத்தியம் இல்லை என்றும், இதுவொரு சதியாலோசனை கோட்பாடு என்றும் கடந்த 2017-ஆம் ஆண்டு வரை நம்பப்பட்டது. ஆனால் இது முற்றிலும் சாத்தியமே என்று பலமுறை நிரூபித்து கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் கூட, இன்றும் இது பேசுவதற்கு சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பாகவே கருதப்படுகிறது.

  கோட்பாடு 02: வைட்டமின் சி-யினால் புற்றுநோயை எதிர்த்து போராட முடியும்.

  லோவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வக எலிகளில் வைட்டமின் சி பயன்படுத்தி புற்றுநோய் பாதிப்புமிக்க எலும்பை குணமாக்கி வெற்றி கண்டுள்ளனர்.

  வியாபார பின்னணி

  இந்த செயல்பாட்டில் சாதாரண செல்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்படி புற்றுநோய்க்கு எதிராக போராட வைட்டமின் சி-யை பயன்படுத்த நிறைய சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளது. இருப்பினும் கூட இது ஏன் இன்றளவும் மறைக்கப்படுகிறது.? மறுக்கப்படுகிறது.? ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.? இதன் வியாபார பின்னணி என்ன என்பதை மற்றொரு சதியாலோசனை கோட்பாடு தான் பதில் கூறவேண்டும்.

  கோட்பாடு 03: சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா உதவுகிறது.

  ஒருவழியாக பிபிசி நம் அனைவருக்குள்ளும் இருந்த ஒரு மாபெரும் சந்தேகத்தை தீர்த்தது. அதாவது, ஆயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் சிரியப் பாதுகாப்பு படைகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு தெரிந்தே உதவி செய்துள்ளது, ஆதரவு அளித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

  சட்டவிரோதமாக வழங்கப்பட்டது

  2017-ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையானது, இஸ்லாமய அரசு பயன்படுத்திய ஆயுதங்களில் 97 சதவிகிதம் அமெரிக்காவினால் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக அறிவிக்கிறது. ஆக உலக அரசியலை விரும்பும் மக்களே நீங்கள் உணரக்கூடிய விடயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது.

  கோட்பாடு 04: போதைமருந்துகளை சிஐஏ கடத்துகிறது.!

  ஹிஸ்டரி சேனல் - "போதைமருந்துகள் மீதான அமெரிக்காவின் போர்" என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் சிஐஏ, அதாவது அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையானது எப்படி போதைப்பொருளை கடத்துகிறது மற்றும் எப்படி அதை பிடிபடாமல் செய்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

  கோட்பாடு 05: மனிதனும் ஒரு பரிசோதனை எலி தான்.!

  ஆம். பொதுமக்களை குயூனியா பன்றிகள் / ஆய்வக எலிகள் போல பயன்படுத்துவதற்கு இபிஏ (ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்; United States Environmental Protection Agency-EPA) அனுமதிக்கிறது.

  இரசாயன நிறுவனங்களுடன் சதி

  நீண்ட காலமாக நிரூபிக்கப்படாத இது கடந்த ஆகஸ்டு மாதத்தில் வெளியான 20,000 ஆவணங்களின் வழியாக அம்பலமானது. அந்த ஆவணங்கள் பொதுமக்களுக்கு நச்சுப் பொருள்களை வெளியிட பல்வேறு இரசாயன நிறுவனங்களுடன் சதி செய்துள்ளது நிரூபிக்கப்பட்டது.

  சற்றும் பொருட்படுத்தாமல் விற்பனை

  இந்த ஆவணங்களின் வழியே இபிஏ-வின் மோசடி மட்டும் வெளியாகவில்லை, பொது மக்களை காப்பாற்றுவதற்கு வேலை செய்வதை விட, இபிஏ ஆனது இரசாயன நிறுவனங்களுடன் இரகசிய சந்திப்புகளை நடத்துவதோடு, அவர்களது தயாரிப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் விற்பனை செய்ததும் வெளிப்பட்டுள்ளது

  கோட்பாடு 06: பெடரல் ரிசர்வ் வங்கி அமெரிக்க உளவுத்துறையின் ஒரு பகுதி.!

  பெடரல் ரிசர்வ் வங்கியில் உள்ள இரகசியக் கணக்குகளை அமெரிக்க கருவூலம் மற்றும் பிற துறைகளினால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ராய்ட்டர்ஸ் அறிக்கை அம்பலப்படுத்தியது. அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒரு கருப்பு ஆடு இருந்தால் பரவாயில்லை. அரசாங்கமே ஒரு கருப்பு ஆடாக இருந்தால் என்ன செய்வது.?

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  6 Conspiracy Theories That Turned to Fact in 2017. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more