518மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு!
இந்த கண்டுபிடிப்புகளில் 518 மில்லியன் ஆண்டு பழமையான கடல் உயிரினம் ஒன்றின் படிமமும் கிடைத்துள்ளது.
பிரிஸ்டல் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி குழு சமீபத்தில் சீனாவில் தொடர்ச்சியான திடுக்கிட வைக்கும் புதைபடிவங்களை கண்டுபிடித்தது. இந்த புதைபடிவங்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு டஜன் கணக்கான உயரினங்களின் மீது அனைவரது பார்வையையும் திருப்பியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை முன்னதாக விஞ்ஞான சமூகத்திற்கு புரியாத மர்மமாக இருந்தவை.

இந்த கண்டுபிடிப்புகளில் 518 மில்லியன் ஆண்டு பழமையான கடல் உயிரினம் ஒன்றின் படிமமும் கிடைத்துள்ளது. அதன் வாயின் அருகில் 18 கரங்கள் இருக்கின்றன. 'டாய்வா சான்க்யுயங்' என அழைக்கப்படும் அந்த உயிரினம், நவீன கோம்ப் ஜெல்லி போன்ற பல உடற்கூறியல் அம்சங்களை பகிர்ந்து கொண்டிருப்பதால் இது தொலைதூர உறவினராக இருக்கலாம்.

உயிரியலாளர் மற்றும் முன்னணி ஆராய்ச்சியாளரான ஜகோப் வின்டர் கூறுகையில் " நீண்ட வரலாற்றை சுருக்கமாக, நாம் புதைபடிவங்கள் மற்றும் சமகால மாதிரிக்கு இடையே உடற்கூறு ஒப்பீடுகள் செய்து அவற்றிலிருந்து ஜெல்லிகளின் முழு பரம்பரையையும் மீண்டும் புனரமைக்கமுடியும்" என்கிறார். கோம்ப் ஜெல்லிகள் தான் பூமியில் உருவாகிய முதல் உயிரினம் என்ற கருத்து நிலவுவதால், அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த புதைபடிவம் உண்மையில் கிடைத்திருப்பது பெரிய செய்தி.
இந்த கண்டுபிடிப்பு வினோதமான கோம்ப் ஜெல்லி இனங்களின் கணிசமான கவனத்தை திருப்பும் என நம்பும் வின்டர், "புதைபடிவங்களில் இருந்து இந்த வினோதமான கோம்ப் ஜெல்லிகள் எங்கிருந்து உருவாகின என கண்டுபிடிக்க இயலும். அவை மிகவும் புத்திசாலித்தனமான இடத்தில் இருந்து வந்தாலும் கூட, அது அவற்றின் விசித்திரமான தன்மை குறையாது" என்கிறார்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின் படி, பூமியில் முதன்முதலாக உருவான உயிரினங்களில் கோம்ப் ஜெல்லிகளும் ஒன்று. சீனாவின் யுன்னான் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு இது போன்ற எலும்புக்கூடு கட்டமைப்புகளுடன் இந்த புதைபடிவத்தை ஒப்பிட்டு, இவை அனைத்து ஒரே மூதாதையரிடமிருந்து உருவானதாக நிரூபித்துள்ளார்.

தென் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதிக்கு தெற்கில் இந்த படிமங்களை இந்த ஆய்வின் துணை ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஹவ் ஜிங்குவாங் கண்டுபிடித்தார்.இதுபோன்ற உயிரியல் படிம கண்டுபிடிப்பு இந்த குறிப்பிட்ட பிராந்தியத்தில் கண்டெடுக்கப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 30 ஆண்டுகளில் இங்கே நன்கு அறியப்பட்ட ஏராளமான படிமங்கள் வெளிப்படையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications