இந்திய வரலாற்றில் உள்நாட்டிலேயே காணப்பட்ட மறக்கமுடியாத ஏலியன் நிகழ்வுகள் இவை தான்!

|

ஏலியன்கள் என்று சொன்னாலே உடனடியாக நமது மனதில் ஒரு பெரிய தலையுடன் பெரிய கண்களை கொண்ட உருவம் வந்து போய் இருக்கும், இன்னும் சிலருக்குப் பறக்கும் தட்டு போன்ற விமானங்கள் கூட மனதிற்குள் சில வினாடிகள் வந்து போய் இருக்கும். உண்மையில் ஏலியன்கள் இருக்கிறது என்பதை நிரூபிக்க ஒரு கூட்டம் மிகவும் கடினமாக முயன்று வருகிறது. ஆனால், அரசாங்கம் இல்லை என்பதைப் பதிலாகக் கூறி மழுப்பிவருக்கிறது.

அமெரிக்கா ஒப்புக்கொண்ட உண்மை இது தான்

சமீபத்தில் அமெரிக்காவின் போர் படை ஏலியன் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறி, போர் படை வீரர்கள் வானில் அடையாளம் தெரியாத சில பறக்கும் பொருள்களைப் பார்த்துள்ளனர் என்று ஒப்புக்கொண்டது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் முதல் முறையாக அரசாங்கம் அடையாளம் தெரியாத மர்ம பொருள்கள் வானில் வளம் வருகிறது என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வரலாற்றில் ஏலியன் நிகழ்வுகளா?

இந்தியா வரலாற்றில் ஏலியன் நிகழ்வுகளா?

ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல், ஏலியன்கள் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் மட்டும் தான் தோன்றுமா? இந்தியாவில் எல்லாம் ஏலியன்கள் வந்திருக்க வாய்ப்பில்லையா? என்று கேள்வி கேட்டால், அதற்கான பதில் இந்திய வரலாற்றில் பலமுறைஉள்நாட்டிலேயே ஏலியன் நிகழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவே நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய உண்மையாகும். அப்படி இந்தியாவில் தோன்றிய மிக முக்கியமான ஏலியன் நிகழ்வுகளைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

1. மெட்டாலிக் சிகார் இன் ஸ்கை நிகழ்வு

1. மெட்டாலிக் சிகார் இன் ஸ்கை நிகழ்வு

இந்த சம்பவம் இந்தியாவில் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட யுஎஃப்ஒ(UFO) நிகழ்வுகளில் ஒன்றாகும். 1951 ஆம் ஆண்டு காலை 10:20 மணிக்கு, ஜார்ஜ் எஃப். ஃப்ளோட் என்ற தலைமை வான்வழி பொறியியலாளர் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களுடன், டெல்லி பறக்கும் கிளப் ஹேங்கர் அருகே வானத்தில் விசித்திரமான மெட்டாலிக் சிகார் போன்ற பறக்கும் பொருளைக் கண்டுள்ளனர்.

100 அடி நீளமுள்ள பறக்கும் பொருள்

100 அடி நீளமுள்ள பறக்கும் பொருள்

அடையாளம் தெரியாத பொருளின் 100 அடி நீளமுள்ள பொருள் என்றும், பிரிட்டிஷ் வாம்பயர் ஜெட் விமானத்தின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் நகர்ந்து வானில் மறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.!

2. ஒரு தற்செயலான போட்டோ கிளிக் நிகழ்வு

2. ஒரு தற்செயலான போட்டோ கிளிக் நிகழ்வு

கன்னூரில் உள்ள கடற்கரையில் எச்.டி.சி ஒன், மேஜர் செபாஸ்டியன் சக்கரியா என்பவர் தனது கேமராவை சும்மா கிளிக் செய்து சோதித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவர் கிளிக் செய்த ஸ்மார்ட்போன் புகைப்படத்தில் பறக்கும் தட்டு போலத் தோற்றமளிக்கும் ஒரு உருவத்தை அவர் அடையாளம் கண்டிருக்கிறார்.

பறக்கும் தட்டு

வானில் பறக்கும், பறக்கும் தட்டை இவர் படம்பிடித்துள்ளார் என்பது அவருக்குத் தெரியாத ஒன்றாக இருந்துள்ளது. இதில் வித்தியாசமான விஷயம் என்னவென்றால், ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட 3 படங்களில் முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்களில் யுஎஃப்ஒ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. எல்லோ ஸ்பியர்ஸ் நிகழ்வு

3. எல்லோ ஸ்பியர்ஸ் நிகழ்வு

ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்தில், இந்தியா-சீனா எல்லைக்கு அருகே இடுகையிடப்பட்ட இந்திய இராணுவம் சுமார் 100 க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒ நிகழ்வுகளை அடையாளம் கண்டுள்ளது. எல்லோ ஸ்பியர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மஞ்சள் விளக்கு போன்ற பறக்கும் பொருள்கள் சீன எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் பறந்தது என்று கூறப்பட்டுள்ளது.

சார், காசுக்கு ஈ-பாஸ் கிடைக்கும்! ஈ-பாஸ் வாங்கி கொடுப்பவர்களின் கதி இது தான்!

உண்மையில் இந்த பொருள்கள் என்ன?

உண்மையில் இந்த பொருள்கள் என்ன?

எல்லைக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் இதைச் சீன ட்ரோன்கள் அல்லது குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் என்று சந்தேகித்துள்ளனர். ஆனால், உண்மையில் இந்த பொருள்கள் என்ன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

4. சூரிய அஸ்தமன நிகழ்வு

4. சூரிய அஸ்தமன நிகழ்வு

லக்னோவில் வசிக்கும் அமித் திரிபாதி, சூரிய அஸ்தமனத்தின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென சூரியனுக்கு அருகில் வானத்தில் ஒரு மர்மமான பளபளப்பான பொருளைக் கண்டுள்ளார். சூரியன் மறையும் போது, ​​யுஎஃப்ஒ பொருள் சுழன்று வானத்தில் உயரத் தொடங்கியுள்ளது.

கேமராவில் அதிர்ஷ்டவசமாக கிளிக்

கேமராவில் அதிர்ஷ்டவசமாக கிளிக்

இந்த நிகழ்வை அமித் தனது கேமராவில் அதிர்ஷ்டவசமாக கிளிக் செய்திருக்கிறார். அவர் அதை முதலில் பார்த்த தருணத்திலிருந்து, யுஎஃப்ஒ 40 விநாடிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. பின்னர் அது திடீரென்று வானத்தில் மறைந்துவிட்டது. இதுபோன்ற பல நிகழ்வுகள் பூமியில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளது.

5. வானத்தில் 26,000 அடி உயரத்தில் நடந்த நிகழ்வு

5. வானத்தில் 26,000 அடி உயரத்தில் நடந்த நிகழ்வு

பைலட் மஹிமா சவுத்ரி தனது விமானத்தை சுமார் 26,000 அடி உயரத்தில் இயக்கிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்மப் பொருளை அவர் நேரில் கண்டிருக்கிறார். மஹிமாவின் விமானம் பறந்து கொண்டிருந்த திசையிலிருந்து 310 டிகிரியில் உயரத்தில் இந்த பறக்கும் ஏலியன் யுஎஃப்ஒவைக் கண்டுள்ளார்.

ஏடிசி மற்றும் டிசிஜிஏ ஏன் மௌனம்?

ஏடிசி மற்றும் டிசிஜிஏ ஏன் மௌனம்?

யுஎஃப்ஒ பொருள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலிருந்தது என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், புனே மிரர் மும்பை ஏடிசி மற்றும் டிசிஜிஏ ஆகியோரிடம் இதுபற்றி கருத்தைப் பெறச் சென்றபோது, ​​அவர்கள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித இனம் விரைவில் வேற்றுகிரகவாசியாக அடையாளம் காணப்படும்

மனித இனம் விரைவில் வேற்றுகிரகவாசியாக அடையாளம் காணப்படும்

இதுபோன்ற பல ஏலியன் நிகழ்வுகள் இந்தியாவிலும் பதிவாகியுள்ளது என்பதே உண்மையாகும். இது போன்ற நிகழ்வுகள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏலியன்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பவர்களுக்கு ஒன்று சொல்லியாகவேண்டும், செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி வைக்கும் அந்த தருணம் மனித இனம் அந்த கிரகத்தில் ஒரு வேற்றுகிரகவாசியாக தான் காலடி வைக்கும் என்பதை யாரும் மறக்கவேண்டாம்.

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

வேற்றுகிரகவாசிகளின் இருப்பு பற்றி இன்னும் உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சதி கோட்பாட்டாளர், ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கூகிள் எர்த் சாட்டிலைட் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராட்சஸ ஏலியன் உருவம்

ராட்சஸ ஏலியன் உருவம்

கூகிள் எர்த் பயன்படுத்தி அண்டார்டிகாவில் சரிவுகளில் காணப்படும் ஒரு அன்னிய ராட்சத உருவத்தை அவர் அடையாளம் கண்டுள்ளார். கூகிள் எர்த் புகைப்படங்களை அவர் ஆதாரமாக தற்பொழுது வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள ஏலியன் உருவம் உண்மையில் இராட்சஸ தோற்றம் கொண்டது என்று அதன் அருகே காணப்படும் ரகசிய குகையின் வாசலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் உயரம் எவ்வளவு தெரியுமா?

இதன் உயரம் எவ்வளவு தெரியுமா?

ஏலியன் ஹண்டர் என்று அழைக்கப்படும் ஸ்காட் சி வேரிங் என்பவர் தான் இந்த நம்பமுடியாத தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துப்படி இந்த ஏலியன் உருவம் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்டது என்று கூறியுள்ளார். அதன் அருகே காணப்படும் குகையின் வாசல் சுமார் 22 மீட்டர் உயரம் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த உருவத்தின் உயரம் இதுதான் என்பதை நிரூபிக்கவும் அவரிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

உயரத்திற்கான ஆதாரம்

உயரத்திற்கான ஆதாரம்

Mr Warning என்ற தனது வலைப்பதிவில் ET தரவுத்தளத்தில் ஸ்காட் சி வேரிங் எழுதியுள்ளது, "நான் இன்று அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதியில் மாபெரும் உருவத்தைக் கண்டேன், அது ஒரு மாபெரும் நுழைவாயிலிலிருந்த ஒரு குகை திறப்பிற்கு அருகில் நின்றது" கூகிள் ரூலர் மூலம் இந்த உருவத்தின் உயரம் சுமார் 20 மீட்டர் என்பதும், குகையின் நுழைவாயில் 22 மீட்டர் உயரம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள்

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள்

இந்த அசாதாரணமான உயரத்தில் வேறு கிரகவாசிகளின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பு 4-5 மீட்டர் உயரமுள்ள வேற்றுகிரகவாசிகளின் அடையாளங்கள் ரஷ்யாவிலிருந்து வெளிவந்தன, மேலும் மனிதனைப் போன்ற உயிரினத்தின் பெரிய மண்டை ஓட்டுடன் கூடிய மாபெரும் எலும்புக்கூடுகளும் பல முறை வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட உறுதியான ஒரு ஆதாரம் இருக்க முடியாது

இதைவிட உறுதியான ஒரு ஆதாரம் இருக்க முடியாது

ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் செயற்கைக்கோளினால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள் புகைப்படம் என்பதால் இதில் போலியான தகவல்கள் இருப்பதற்குச் சாத்தியம் இல்லை என்று ஸ்காட் கூறியுள்ளார். செயற்கைக்கோள் என்பது எதைப்பற்றியும் கவலைப் படாமல் இருப்பதை இருந்தபடியே காட்டக்கூடியது, இதைவிட ஒரு உறுதியான ஆதாரம் இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நாசா சொன்ன பதில்

நாசா சொன்ன பதில்

இருப்பினும், இதை பற்றி நாசாவிடம் கேட்டபொழுது, கட்டமைப்பு மற்றும் பிற ஒத்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் பரேடோலியாவின்(pareidolia) விளைவுகள் மட்டுமே என்று நாசா கூறியுள்ளது. பரேடோலியா விளைவு என்பது, அவை இல்லாத ஒரு பொருளை இருக்கிறது என்று நம்ப வைக்கும் விளைவாகும். குறிப்பாக ஒரு இடத்தில் பார்க்கப்படும் பொருள் அல்லது வடிவங்களை நாம் பார்க்க நினைக்கும் பொருளாகவே நமது மூளை கண்களை ஏமாற்றும் ஒரு உளவியல் நிகழ்வாகும்.

நாசா மழுப்புகிறதா?

நாசா மழுப்புகிறதா?

இதன் பொருள் புகைப்படத்தில் உள்ள 'மாபெரும் உருவம்' மற்றும் 'குகையின் வாசல்' என்பது பனியின் பாறைகளின் அடையாளம் மட்டுமே என்று நாசா பதிலளித்துள்ளது. இதற்கு நாசா மழுப்புகிறது என்று ஸ்காட் தனது பக்கத்தில் கூறியுள்ளார். நாசா ஒப்புக் கொண்டால், இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் அன்னிய வெளிப்பாட்டைச் சமாளிக்கும் வலிமை மனிதக்குலத்திற்கு இருப்பதாகவும் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
5 Unbelievable UFO Sightings That Have Taken Place In Indian History : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X