Subscribe to Gizbot

அமெரிக்காவை அப்பட்டமாக காப்பியடிக்கும் ரஷ்யா..!

Written By:

பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் சிறந்த ஆயுதங்கள் பிரயோகிக்க ஒன்றை முந்தி ஒன்று போராடியது. குறிப்பாக, மிக் 25 , எப்-15, டு-95, பி 52, உடன் நீர்மூழ்கி கப்பல்கள், டாங்கிகள் என எதிரிகளை மனதிற்கொண்டு உறுதியாக வடிவமைக்கப்பட்டன.

அமெரிக்காவை அப்பட்டமாக காப்பியடிக்கும் ரஷ்யா.!

பனிப்போர் முடிவுக்கு வந்தபின்பு சோவியத் ஒன்றியம் பல முக்கிய பகுதிகளில் அமெரிக்காவுடன் மோதுவதற்கான தகுதியை இழந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு சோவியத் இராணுவ-தொழில்துறை சரிவு பெரிய சிக்கலை உருவெடுத்தது. இன்றுவரையிலாக ரஷ்ய இராணுவம் வல்லமைமிக்க ஒன்றாக இருக்கும் போதிலும் கூட, அது அமெரிக்க ஆயுதங்களுக்கு ஒற்று இருப்பதை நிறுத்திக் கொள்ளவே இல்லை என்பதே அதன் முக்கிய குறைபாடுகளில் ஒன்றாகும்.

அப்படியாக, ரஷ்யா வெளிப்படையாகவே அமெரிக்காவின் லீத்தல் வெப்பன்களை (உயிர்க்கொல்லி ஆயுதம்) சிலவற்றை பெற விரும்புகிறது. அது என்னனென்ன திறன்கள்..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லீத்தல் வெப்பன் #01

லீத்தல் வெப்பன் #01

ஐந்தாவது தலைமுறை பைட்டர்ஸ் (Fifth-Generation Fighters)

பற்றாக்குறை :

பற்றாக்குறை :

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சூகோய் பாக் எஃப்ஏ (Sukhoi PAK FA) ஆனது ரஷ்யா மற்றும் அமெரிக்க ஃப்ரண்ட்லைன் போர் விமானங்களுக்கு இடையே இருந்த பற்றாக்குறையை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காரணி :

காரணி :

ஆனால், இன்றோ வியத்தகு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார குறைவு போன்ற காரணிகளுக்காக போராடி வருகிறது.

எப்-22 ராப்டார் :

எப்-22 ராப்டார் :

மறுபக்கம் அமெரிக்காவோ வெற்றிகரமாக , எப்-22 ராப்டார் (F-22 Raptor) ஃப்ரண்ட்லைன் சேவையை படையுடன் ஒருங்கிணைத்துள்ளது.

ரஷ்யாவின் பைட்டர் :

ரஷ்யாவின் பைட்டர் :

ரஷ்யா வல்லமைமிக்க ஃபைட்டர்களை உருவாக்கியும், தொடர்ந்து உருவாக்க செயல்படும் போதிலும் கூட ரஷ்யாவின் ஒரு ஃபைட்டர் கூட அமெரிக்காவின் ராப்டார் உடன் ஒப்பிட முடியவில்லை.

ஒரு படி மேல் :

ஒரு படி மேல் :

ரஷ்யாவின் பாக் எஃப்ஏ அல்லது திறன்மிக்க ஃபைட்டர் விமானம் உருவாக்கப்படும் வரையிலாக அமெரிக்கா தான் இந்த போட்டியில் ஒரு படி மேல் தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

லீத்தல் வெப்பன் #02

லீத்தல் வெப்பன் #02

துல்லிய வழிகாட்டி ஆயுதங்கள் (Precision Guided Munitions)

துல்லியம் :

துல்லியம் :

ஜோர்ஜியா அல்லது உக்ரைன் போன்ற நாடுகளில் செய்ததை விட சிரியாவில் விரிவாக மேலும் துல்லியமாக இயக்கப்படும் வெடிமருந்துகளை ரஷ்யா பயன்படுத்திய போதும் அது அமெரிக்காவோடு ஒப்பிடும்போது பின்தங்கிதான் உள்ளது.

சேதம் :

சேதம் :

இவ்வகை திறன் மூலம் அமெரிக்க இராணுவம் ஏற்படுத்தும் சேதத்தை விட ரஷ்ய இராணுவ ஏற்படுத்தும் சேதம் குறைவானதாக இருக்க முடிவதை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சென்சார் பாட்ஸ் :

சென்சார் பாட்ஸ் :

மேலும், ரஷ்ய விமானங்கள் வழக்கமான மேற்கத்திய ஏர்-டு-லாண்ட் பயணங்களில் கொண்டுள்ள சென்சார் பாட்ஸ் (Sensor pods) இல்லாமல் தான் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வான்தாக்குதல்கள் :

வான்தாக்குதல்கள் :

இவ்வாறாக சில வழிகளில் ரஷியன் வான்தாக்குதல்கள், மேற்கத்திய வான்தாக்குதல்களை விட குறைந்த அளவு மற்றும் முயற்சியையே செய்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.

லீத்தல் வெப்பன் #03

லீத்தல் வெப்பன் #03

புலனாய்வு - கண்காணிப்பு - உளவுப்பணி மனப்பாங்கு (Intelligence-Surveillance-Reconnaissance Complex)

நீண்ட தூர ஏவுகணை :

நீண்ட தூர ஏவுகணை :

பனிப்போர் குணமடையும் ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத்தின் இராணுவம் நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை சார்ந்த திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவைகளை புரிந்து கொண்டது.

மேம்பட்ட கணினி :

மேம்பட்ட கணினி :

உடன் சோவியத்தின் மேம்பட்ட கணினி மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த விடயத்தில் அமெரிக்காவுடன் போட்டியிட தகுதியான தேசிய கண்டுபிடிப்பு அமைப்பு இல்லை என்பதையும் சோவியத் புரிந்து கொண்டு வைத்திருந்தது.

தேவை :

தேவை :

ரஷ்ய போர் குணாதிசயத்தில் உளவுத்துறை, தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு திறன்கள் இல்லை, உடன் கூடுதல் ட்ரோன்கள், இலகுரக தகவல் தொடர்பு சாதனங்கள், செயற்கைக்கோள் வழிகாட்டல் மற்றும் அதிவேக கணினிகள் ரஷ்ய ராணுவத்திற்கு தேவைப்படுகிறது.

லீத்தல் வெப்பன் #04

லீத்தல் வெப்பன் #04

நிலம், நீர் இரண்டிலும் போர் புரியும் ஆயுதங்கள் (Amphibious Warfare)

மிஸ்ட்ரல் :

மிஸ்ட்ரல் :

2010-ல் நீரிலும் நிலத்திலும் செயல்புரியும் நான்கு மிஸ்ட்ரல் வகுப்பு தாக்குதல் கப்பல்கள் பெறுவதற்கு பிரான்ஸ் உடன் ஒப்பந்தம் செய்தது ரஷ்யா.

வெளிப்படையான துளை :

வெளிப்படையான துளை :

முதல் இரண்டு கப்பல்களை பிரான்ஸ் கட்டமைக்க இரண்டாவது ஜோடி கப்பலை ரஷ்யாவின் உதவியுடன் பிரான்ஸ் கட்டமைத்தது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் ரஷ்யாவின் நிலம் நீர் இரண்டிலும் போர் திறன்களை கொண்ட ஆயுத சக்தியில் இருந்த வெளிப்படையான துளையை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் அக்கப்பல்கள் இருந்தன. ஆனால் அது நிகழவில்லை.

லீத்தல் வெப்பன் #05

லீத்தல் வெப்பன் #05

வல்லுநர் படை (Professional Force)

பிரச்சினைகள் :

பிரச்சினைகள் :

ரஷ்யா அதன் இராணுவத்தினை மேலும் செயல்திறன்மிக்கதாய் உருவாக்க விழைகிறது ஆனால் ரஷ்ய நாட்டின் கலாச்சார பிரச்சினைகள் மற்றும் நிதி கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களிலால் அது சாத்தியம் இல்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
5 Lethal American Weapons of War Russia Wished It Had. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot