பாக். எடுக்கும் முடிவிற்கு இந்தியாவின் பதிலடி இந்த 5 அதிநவீன ஆயுதம் தான்.!

|

அண்மையில் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலளித்த இந்திய விமானப்படை, இந்தியப் படைகளின் வலிமையைக் பாகிஸ்தானிற்குக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தீவிரவாத கூட்டத்திற்கு இந்தியப் படைகளின் வலிமையைத் தெரிவிக்கும் வகையில் தாக்குதலை நடத்தி இருந்தது.

பாக்.எடுக்கும் முடிவிற்கு இந்தியாவின் பதிலடி இந்த 5 அதிநவீன ஆயுதம்தான்

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் பற்றி நிறையவே பார்த்துவிட்டோம். பாகிஸ்தான் தற்போது செய்து வரும் காரியங்களுக்கு இந்தியாவின் பதிலடி, இந்தியாவின் ஆயுதக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 5 அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் தான்.

1. ரோஸ்டாம் டிரோன்ஸ் :

1. ரோஸ்டாம் டிரோன்ஸ் :

டி.ஆர்.டி.ஓ ரோஸ்டாம் டிரோன்ஸ் உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கா இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆளில்லா விமானம், வானத்திலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரோன்கள் தொடர்ந்து 24 மணிநேரம் வரை வானில் பறக்கும் வல்லமை கொண்டுள்ளது.

2. வருணாஸ்ரா டோர்பெடோ ஏவுகணை:

2. வருணாஸ்ரா டோர்பெடோ ஏவுகணை:

2018 ஆம் ஆண்டில் இந்திய கடற்படை உதவியுடன் இந்தியாவில் வருணாஸ்த்ரா டோர்பெடோ தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓவின் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தால் வருணாஸ்ரா ஆன்டி-சப்மரின் டோர்பெடோ உருவாக்கப்பட்டது.

சுமார் 1.25 டன்கள் எடையுள்ள டார்ப்பெடோ, 250 கி.கி. வெடிகுண்டுகளை மணிக்கு 40 கடல் மைல் வேகத்தில் ஆழ்கடலில் செல்லும் வல்லமை கொண்டது. ஆழ்கடலில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை மிக துல்லியமாக இலக்கு வைத்துத் தாக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புரட்சிகர ஆயுதத்தைத் தயாரிக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக டி.ஆர்.டி.ஓ. எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3. மாரீச் மேம்பட்ட டோர்பெடோ பாதுகாப்பு அமைப்பு:

3. மாரீச் மேம்பட்ட டோர்பெடோ பாதுகாப்பு அமைப்பு:

ஆழ்கடலில் வரும் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிவதற்கு இந்தியக் கடற்படையால் பயன்படுத்தப்படும் ஒரு மேம்பட்ட இயந்திரம் இந்த மாரீச் டோர்பெடோ ஏவுகணை. மாரீச் டோர்பெடோ இல் வழங்கப்பட்டுள்ள அமைப்பு, உளவரும் எதிரியின் ஏவுகணையைக் கண்டறிந்து, கடற்படைக் கப்பலிற்குப் பாதிப்பு இல்லாமல் கப்பலை நோக்கி வரும் ஏவுகணையின் திசையை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

4. ஆகாஷ் விமான ஏவுகணை:

4. ஆகாஷ் விமான ஏவுகணை:

டி.ஆர்.டி.ஓ ஆல் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை, ஒரு முழு-தானியங்கி மேற்பரப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் விமான ஏவுகணை மூலம் போர் விமானங்கள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஏர் டு சர்பேஸ் ஏவுகணைகளின் தாக்குதலைத் தடுக்கும் வல்லமை கொண்டது.

அதே நேரத்தில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பல திசைகளிலிருந்து வரும் இலக்குகளை அழிக்கும் வல்லமை ஆகாஷ் ஏவுகணைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5.பினாக்க மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்:

5.பினாக்க மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்:

இந்திய இராணுவத்தால் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு மேம்பட்ட ராக்கெட் லாஞ்சர் பினாக்க ஆகும். இந்த ராக்கெட் லாஞ்சர் அமைப்பு 75 கிமீ தூரத்தில் வரும் இலக்குகளை வெறும் நொடியில் அழித்துவிடும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றல் வெறும் 44 விநாடிகளில் 12 ராக்கெட்டுகளை அழித்து தொம்சம் செய்யும் வல்லமை கொண்டது.

கார்கில் போரின் போது மலைப் பகுதிகளில் உள்ள எதிரிகளை அழிக்க பின்னாக முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

மிரேஜ் 2000, பாகிஸ்தானின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது எப்படி?

மிரேஜ் 2000, பாகிஸ்தானின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது எப்படி?

மிரேஜ் 2000 என்பது பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் உருவாக்கிய ஒரு சூப்பர் உயர் தொழில்நுட்பம் போர் ஜெட் ஆகும். இந்த விமானம் ஒரு மல்டிரோல் (பல்வேறு பணிகளை செய்யும்), ஒற்றை-இயந்திரம் (சிங்கிள் என்ஜீன்) கொண்ட நான்காவது தலைமுறை ஜெட் ஆகும்.

 புத்திஜீவித போர் ஜெட்

புத்திஜீவித போர் ஜெட்

இந்த ஜெட் தான், இந்த மாதம் நடத்தப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்திய விமான படைகளால் பயன்படுத்தப்பட்ட ஜெட் ஆகும். "கவலை வேண்டாம் நிம்மதியாக உறங்குங்கள், ஏனெனில் பாகிஸ்தான் விமான படை விழிப்பில் இருக்கும் என்று பாகிஸ்தான் விமான படை ட்வீட் செய்த நள்ளிரவே இந்திய விமான படையின் மிராஜ் தனது கைவரிசையை காட்டி உள்ளது. இப்படியாக பாகிஸ்தான் விமான படையின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய இந்த புத்திஜீவித போர் ஜெட் பற்றிய சில உண்மைகளை தான் இங்கே தொகுத்து உள்ளோம்.

01. வடிவமைப்பு

01. வடிவமைப்பு

இந்த அதிநவீன பாதுகாப்பு விமானம் ஆனது மெஸ்ஸெர்-டவுட்டி மூலம் உருவாக்கப்பட்ட முறிவுடைய முக்கோண வகை தரையிறக்க கியர் (retractable tricycle type landing gear) பயன்படுத்துகிறது. இந்த வகை கியரில் டவுன் நோஸ்வீல்ஸ் (twin nosewheels) மற்றும் பிரதான கியரின் கீழ் ஒற்றை சக்கரமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமானம் ப்ளை-பை-வயர் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழும் வேலை செய்யும். அதாவது அரை தானியங்கி ஆக மற்றும் கணினியால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் அமைப்பின் கீழும் வேலை செய்யும்.

2. திறன்கள்

2. திறன்கள்

இந்த போர் ஜெட் சில மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஒற்றை / இரட்டை சீட்டர் விமானம் ஆனது எல்லா வானிலை அணுகுமுறைக்கு கீழும், குறைந்த உயரத்தில் அதே சமயம் அதிக வேகத்தில் பறக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மற்றும் லேசர் வழிகாட்டுதல் ஆயுதங்களை பயன்படுத்தி தானியங்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திறனையும் கொண்டு உள்ளது. மற்ற ஜெட்களில் இருந்து வேறுபடும் அம்சம் எது என்று பேசினால் - வானத்தில் இருந்து தரையில் இருக்கும் இலக்கையும், வானத்தில் இருந்து வானத்தில் இருக்கும் இலக்கையும் தாக்கும் இதன் மல்டிபிள் டார்கெட் அம்சத்தை கூறலாம்.

3. ஆயுத இயந்திரம் (Weapon mechanism)

3. ஆயுத இயந்திரம் (Weapon mechanism)

பாதுகாப்பு விமானத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று - அது ஆயுதங்களை எவ்வாறு கொண்டு வருகிறது என்பது தான். அதை வெப்பன் மெக்கானிசம் என்பார்கள். இந்த விடயத்தில் நமது மிரேஜ் 2000 மிகப்பெரிய கில்லாடி ஆகும். இதனால் மொத்தம் 9 ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். சிஸ்டம் பேலோடில் ஐந்து ஆயுதங்களையும் (ஏவுகணைகள்) மற்றும் அதன் இரண்டு இறக்கைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 2 ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறனை கொண்டது. இதன் ஒற்றை-இருக்கை பதிப்பில் இரண்டு உயர் வகை துப்பாக்கிகள் ஆன 30எம்எம் துப்பாக்கிகள் இருக்கிறது.

4. எதிர் நடவடிக்கைகள்

4. எதிர் நடவடிக்கைகள்

சுய பாதுகாப்பு என்று வரும் போது, ட்ஸால்ட்டின் (Dassault) மிராஜ் 2000 போர் விமானம் ஆனது பல எதிர்ப்பு மெக்கானிசம்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அதில் ஐசிஎம்எஸ் எம்கே2 (ICMS mk2) பெறுதல் மற்றும் ஏவுகணை கட்டளை தரவு இணைப்புகளை கண்டறிவதற்கான ஒரு சமிக்ஞை செயலாக்க முறையும் உள்ளடக்கம்.

5. இலக்கு

5. இலக்கு

இலக்குகள் மீது நிகழ்த்தப்படும் துல்லியத்தை பொறுத்தவரை மிரேஜ் 2000 போர் விமானம் ஆனது மிகவும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் "ஆயுதம் விநியோகம் மற்றும் வழிசெலுத்தல் அமைப்பு" (WDNS) கொண்டு எதிரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும். இதில் டிவி / சிடி சிஎல்டிபி லேசர் டிசைனேஷன் பாட் பொருத்தப்பட்டு உள்ளது. இது இரவு மற்றும் பகலில் என லேசர் வழிகாட்டுதலின் கீழ் ஆயுதங்களை செலுத்துவதற்கான திறனை இந்த போர் விமானத்திற்கு வழங்குகிறது. இந்த போர் விமானத்தின் ரேடார் ஆனது மொத்தம் 24 இலக்குகளை கண்டறியும் திறனை கொண்டது என்பதும், எட்டு மிக உயர்ந்த முன்னுரிமை அச்சுறுத்தல்களை ஸ்கேன் செய்யும் திறனை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
5 advanced weapon systems used by Indian Armed Forces : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X