மர்மம் விலகியது 4400 ஆண்டு பிரமீடு திறப்பு: குவிந்து கிடக்கும் புதையல்கள்.!

  எப்கிப் தலைநகர் கெய்ரோவில் 4400 ஆண்டு பழமையான பிரமீடு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

  மர்மம் விலகியது 4400 ஆண்டு பிரமீடு திறப்பு: குவிந்து கிடக்கும் புதையல்

  அங்கு குவிந்து கிடக்கும் புதையல், பொங்கிஷங்கள், மன்னர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் இருக்கின்றன.

  பழம் காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய வைரம், வைடூரியம், தங்கம், செம்பு உள்ளிட்டவைகளும் புதையுண்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  பிரமீடுகள் :

  இந்த அதிசய பிரமீடு கெய்ரோ நகரத்தின் மேற்கு பகுதியில் பத்து மைல் தொலைவில் உள்ளது. இதை கட்டுவதற்காக ஒரு மைல் நீளம், ஒரு மைல் அகலம் உடைய சதுர பூமியை சதுரப்படுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் இதன் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டிருப்பதாக சரித்திரம் கூறுகிறது.

  இதன் நான்கு மூலைகளும் மிகவும் சரியாக பூமிமட்டம் பார்த்தே கட்டப்பட்டிருக்கிறது. இதற்காக ஒரு சதுர மைலுக்கு பிரமீடை சுற்றிலும் குறுகிய அகலமுள்ள பள்ளம் தோண்டி, அந்த பள்ளத்தில் தண்ணீரை நிறைத்து நிலமட்டம் பார்த்து, ஒரு அங்குலம் கூட ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் சமப்படுத்திய பின்புதான், அங்கு அஸ்திவாரமே தோண்டி இருப்பதாக கூறுகிறார்கள்.

  4000 ஆண்டு முன் கட்டப்பட்டது:

  கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருந்திருக்க வேண்டும். கட்டட கலை நுட்பம் வடிவமைத்தல் முதலியவற்றில் இவர்கள் வல்லவர்களாக இருந்திருக்க வேண்டும்.

  இல்லையெனில் இவர்கள் எப்படி இவ்வளவு அற்புதமான கிஸா பிரமீடை உருவாக்கி இருக்க முடியும். இந்த கட்டுமானத்திற்கு மட்டும் 26 லட்சம் கருங்கல் பாறை கற்கள் உபயோகபடுத்தபட்டுருப்பதாக கூறப்படுகிறது.

  பிரமிக்கும் உலகம்:

  இதில் ஒவ்வொரு கல்லும் இரண்டு முதல் எழுபது டன் வரையுள்ள கற்களை சதுரமாகவோ அல்லது நீண்ட சதுரமாகவோ வெட்டி எடுத்து, அவற்றை ஒழுங்காக செதுக்கி சீர்படுத்தி ஒன்றின் மேல் ஒன்றாக பிரமீடு வடிவத்தில் 450 அடி உயரத்தில் கட்டி இருக்கிறார்கள். இதை பார்த்து உலகமே பிரமிக்கிறது.

  கற்கள் எல்லாம் நன்றாக செதுக்கப்பட்டு ஒரு அங்குலத்தில் நூறில் ஒரு பங்கு கூட இடைவெளி இல்லாது சேர்த்து வைத்திருக்கிறார்கள். இதன் உயரம் 450 அடி.
  அதாவது 45 மாடி கட்டிடத்தின் உயரம் இதன் உயரம் உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  450 அடி உயரம்:

  செங்குத்தாக நான்கு முக்கோணங்களை சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது மாதிரியே, இந்த பிரமீடின் தோற்றமும் அளவுகளும் இருக்கும்.

  ஒரு சதுர மைல் பரப்பளவில் 450 அடி உயரத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான பிரமீடை கட்டினது மட்டும் அல்லாமல், அதற்கு மேல் வெள்ளை சுண்ணாம்பு பாறை கற்களை கொண்டு வந்து இந்த பிரமீடு முழுவதும் போர்வை போல் போர்த்தியும் இருக்கிறார்கள் என்றால் இவர்களது திறமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

  அமானுஷ்யம் நிறைந்தது:

  இந்த பிரமீடை கட்டுவதற்கு வானசாஸ்திரம், புவியியல் சாஸ்திரம் மற்றும் கட்டிடக்கலை, தொழில்நுட்பம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய அறிவு, பஞ்சபூதங்களின் தன்மை முதலியவற்றில் வல்லவர்களுடைய உதவி இல்லாமல் இதை கட்டி இருக்க முடியாது என்பது ஐரோப்பிய ஆராச்சியாளர்களின் கருத்தாகும்.

  மாபெரும் சக்தி :

  மேலும் பிரமீடின் உள்ளே இருந்து வான மண்டலத்தில் உள்ள நச்சத்திரங்கள், கிரக நிலைகளை கூட பார்க்கக் கூடிய வசதிகளை அனுசரித்து கட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  பிரமீடின் சக்திக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் இதுவரை ஒருமித்த கருத்து வரவில்லை.

  ஆனால் பிரமீடின் உள்ளே ஒரு மாபெரும் சக்தி இயங்குவதாக மட்டும் அனைத்து ஆராச்சியாளர்களும் ஒப்புக் கொள்ளகிறார்கள்.

  பாறைகளால் ஆனது:

  இங்கு கட்டப்பட்ட பிரமிடுகளிலேயே மிகவும் வியப்பிற்குரிய ஒன்று கய்சா ப்லாடீவ் ( GIZA PLATEAW ) . இதில் என்ன அப்படி சிறப்பு என்றால்

  .இவை உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. 26,00,000 பாறைகள்இதனை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஆரங்கள் மென்மையாகத் தேய்த்து துளியும்சந்து இல்லாமல் பொருத்தியிருக்கிறார்கள்.

  விசித்திரம் நிறைந்தது:

  மாவீரன் நெப்போலியன் அவர் காலத்தில் ஒருமுறை சொற்பொழிவின் போது இந்த பிரமீடு நானுறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இறுதிக் கணக்கின் படி இந்த பிரமீடு (890 ) எண்ணுற்று தொன்னுராம் ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் .

  செவ்வாய் கிரக பிரமிடுகள்:

  அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . எகிப்து நாட்டில் பிரமிடுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச்சிலை உண்டு.

  அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கின்றது.இதே போன்ற ஓர் உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாக சோவியத்விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

  நன்றி: வீடியோ Luxor Times

  4400 ஆண்டு பிரமீடு திறப்பு:

  இந்நிலையில் எகிப்தில் உள்ள 4400 ஆண்டு பழமையான திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு மர்மங்கள் நிறைந்து இருந்தாலும், தற்போது வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

  புதைந்து கிடக்கும் மர்மம்:

  பழங்கால மன்னராட்சியில், 3-ஆம் மன்னன் நெபெரிர்கரே ககய் (Neferirkare Kakai) காலத்தில் இந்த பிரமீடில் அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரையேனும் புதைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  எழுத்ததோவியங்கள்:

  அங்கு, வரைபடங்களால் ஆன எழுத்தோவியங்களும், சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. 5 சுரங்க வாயிற்குழி கதவுகளில் ஒன்று கூட இதுவரை திறக்கப்பட்டு களவாடப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  பொக்கிஷங்கள்:

  சீலிடப்படாத ஒன்றை மட்டும் திறந்தபோது குப்பைகள் மட்டுமே இருந்ததாகவும், எஞ்சியுள்ளவற்றில் பதப்படுத்தப்பட்ட உடல், இறந்தவர் பயன்படுத்திய ஆடை, அணிகலன், அறைகலன் உள்ளிட்ட பொக்கிஷங்களும் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

  கொட்டிக் கிடக்கும் புதையல்:

  மன்னர்கள் பயன்படுத்திய நகை, வைரம், வைடூரியம், தங்கம், செம்பு உள்ளிட்ட, ஆடை ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொக்கிஷங்கள் இருக்கும் என்று நம்படுகின்றது. இவைகள் கிடைத்தால், பிரமீடுகளின் மீது உள்ள மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  4400 year old tomb revealed in egypt and iT may have hidden treasure : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more