தனக்கு தானே 'ஹேப்பி பர்த் டே' பாடிக்கொள்ளும் க்யூரியாசிட்டி ரோவர்..!

|

ஆகஸ்ட் 5-ஆம் தேதி - நேற்றோடு, நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் தூசி நிறைந்த மேற்பரப்பை அடைந்து 4 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. செவ்வாய் என்ற சிவப்பு கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தின் வழியாக, நுழையுமா நுழையாத என்று நாசாவின் நகங்களையெல்லாம் க்யூரியாசிட்டி கடிக்க வைத்த தினம் கடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தனக்கு தானே 'ஹேப்பி பர்த் டே' பாடிக்கொள்ளும்  க்யூரியாசிட்டி ரோவர்..!

கார் அளவிலான "சக்கரங்கள் கொண்ட ஆய்வகமான" க்யூரியாசிட்டி ரோவர் ஆனது இதுவரியிலாக வெற்றிகரமாக 8.4-க்கும் மேற்பட்ட மைல்கள் ( 13.5 கிலோ மீட்டர் ) பயணம் செய்து, அதன் வழியில் வந்த பாறைகளை பகுப்பாய்வு செய்தல், புகைப்படங்கள் எடுத்தல் மாதிரிகளை சேகரித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

தனக்கு தானே 'ஹேப்பி பர்த் டே' பாடிக்கொள்ளும்  க்யூரியாசிட்டி ரோவர்..!

சமீபத்திய மென்பொருள் மேம்பாடுகள் மூலம் லேசர் பீம் செலுத்தி தன்னிச்சையாக பாறைகளை ஆய்வு செய்யும் வல்லமை க்யூரியாசிட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. கேல் பள்ளம், செவ்வாயின் தாழ்வான பகுதி, கடந்த கால ங்களில் வாழ்க்கை நடைபெற்று உள்ளதா போன்ற ஆய்வுகளில் சுமார் 1421-க்கும் மேற்பட்ட சோல்களை (Sols) அதாவது செவ்வாய் நாட்களை ரோவர் கடந்துள்ளது.

தனக்கு தானே 'ஹேப்பி பர்த் டே' பாடிக்கொள்ளும்  க்யூரியாசிட்டி ரோவர்..!

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நிகழ்ந்ததா என்பதற்கான உறுதியான விடயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் கூட யெல்லோநைப் பே (Yellowknife Bay) படிவுகளில் ஒரு பண்டைய நன்னீர் ஏரி சான்றுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், கேல் பள்ளம் மத்தியில் உள்ள மவுண்ட் ஷார்ப் என்ற மூன்று மைல் (ஐந்து கிலோமீட்டர்கள்) உயர்ந்த அடுக்கு பாறை மலை ஒன்று குறித்த ஆய்வாய் க்யூரியாசிட்டி நிகழ்த்தி வருகிறது.

தனக்கு தானே 'ஹேப்பி பர்த் டே' பாடிக்கொள்ளும்  க்யூரியாசிட்டி ரோவர்..!

நான்கு வருடங்கள் கடந்த பிறகும், ஒரு சமீபத்திய மென்பொருள் பீதி எழுந்த போதிலும் கூட ரோவர் ஆரோக்கியமாக உள்ளது என்பதும் மேலும் தொடர்நது அது ஆய்வுகளை நிகழ்த்த இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

வீடியோ : மணிக்கு 1.3 மில்லியன் மைல்கள் வேகத்தில் சூரியனுக்குள் புகுந்த 'கொமெட்'..!
நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?
அன்டார்டிகாவில் ஏலியன் 'பிரமிட்'!

Best Mobiles in India

English summary
4 Years on Mars: Curiosity's Incredible Journey. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X