வெறும் கண்ணில் வானத்தை பாருங்க: அணிவகுத்து நிற்கும் "4 கோள்கள்"- அப்படியே தெரியுது.,இந்த நேரத்தில் பாருங்க!

|

இந்த அரிதான கோள்கள் அணிவகுப்பு என்பது முதன்முறையல்ல. முன்னதாக சனி, வியாழன், செவ்வாய் மற்றும் வீனஸ் என கோள்கள் வரிசையாக 2020 இல் தென்பட்டது. இந்த நிகழ்வும் தொலைநோக்கி இல்லாமல் காணும் வகையில் இருந்தது.

வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி

வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி

வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி (Venus, Mars, Jupiter, Saturn) ஆகிய நான்கு கிரகங்கள் திகைப்பூட்டும் வகையில் அணிவகுப்பில் காணப்பட்டன. இந்த நிகழ்வு வானியலாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல் லைவ் சையின்ஸ் தகவலின்படி, ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் சந்திரன் உடன் நான்கு கிரகங்கள் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 முதல் இந்த வான நிகழ்வு உருவாக தொடங்கி இருக்கிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி மிகவும் தெளிவாகத் தெரிந்தது. வரும் குறிப்பிட்ட நாட்களுக்கு காலை 5 மணி முதல் காலை 6 மணி வரை இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் புதன் கிரகமும் இந்த கிரக அணிவகுப்பில் இணையும் என லைவ் சயின்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்

சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்

சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த கூட்டம் வடக்கு அரைக்கோளம் (Northern Hemisphere)-ல் அதிகம் தெரியும் எனவும் தெற்கு அரைக்கோளம் (Southern Hemisphere)-ல் மாதத்தின் ஒரு நேரத்தில் தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு மற்றும் செங்குத்தான கோணத்தில் காட்சியளிக்கும். லைவ் சயின்ஸ் அறிக்கைப்படி, ஏப்ரல் 23 முதல் 29 வரை நான்கு கிரகங்கள் உடன் சந்திரனும் தென்படும் என கூறப்படுகிறது. அதேபோல் சிகாகோவின் அட்லர் கோளரங்கத்தில் பொது கண்காணிப்பு இயக்குனரான மிச்செல் நிக்கோல்ஸ், கோள்கள் கிழக்கில் இருந்து தெற்கே அணிவகுத்து செல்வதாக இருக்கும் என அறிக்கை கூறுகிறது.

அணிவகுப்பில் உள்ள கோள்கள் எப்படி தெரியும்

அணிவகுப்பில் உள்ள கோள்கள் எப்படி தெரியும்

அணிவகுப்பில் உள்ள கோள்களை தெளிவாக மின்னும் குறைபாட்டின் மூலம் கண்டறியலாம். நட்சத்திரங்கள் மின்னும் படியாக தோன்றும், கோள்கள் பிரகாசமாக காட்சியளிக்கும் இதன்மூலம் கோள்களை கண்டறியலாம். ஜூன் மாதம் புதன் கிரகம் சேரும் போது ஐந்து கிரகங்களும் சீரமைப்பில் காட்சியளிக்கப்படும். இந்த அணிவகுப்பை பார்க்க விரும்பும் நபர்களுக்கு தொலைநோக்கி தேவையில்லை. வானம் மேகமூட்டம் இல்லாத சமயத்தில் கிரகங்கள் வரிசையாகவும் தெளிவாகவும் தெரியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் அரிதான நிகழ்வாகும்

அதேபோல் வீனஸ் கிரகம் இந்த நான்கு கிரகங்களிலும் மிகவும் பிரகாசமானதாக இருக்கும், இந்த கிரகம் வெள்ளை ஒளியில் மிகவும் பிரகாசமாக தெரியும். வியாழன் கிரகம் இரண்டாவது அளவு பிரகாசமாக இருக்கும், இதுவும் வெள்ளை நிறத்தில் பிரகாசிக்கும். பிற மூன்று கிரகங்களைவிட சனி கிரகம் மிகவும் மங்கலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகம் குறித்து அனைவரும் அறிந்ததே, எனவே அதன் நிறத்தின் காரணமாக இந்த கிரகம் மற்றவற்றில் இருந்து மிகவும் தனித்துவமான வேறுபாட்டைக் கொண்டிருக்கும். இந்த கிரகம் வெறும் கண்களால் பார்க்கும் போது பிரகாசமான ஆரஞ்ச் வண்ண புள்ளியாக தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு வழக்கமாக நிகழ்வது அல்ல, மிகவும் அரிதானவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்த மற்றொரு நிகழ்வு

ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்த மற்றொரு நிகழ்வு

பூமியின் மற்றொரு நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர். பூமியை நோக்கி ஒரு சிறுகோள் நமது கிரகத்திற்கு ஆபத்தான முறையில் நெருங்கி வருகிறது என்ற திடுக்கிடும் உண்மையை நாசா வெளியிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பூமியைப் பல சிறுகோள்கள் கடப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். இருப்பினும், சில நெருங்கிய சிறுகோள் அழைப்புகளையும் பூமி தொடர்ந்து சந்தித்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாகப் பெரிய சிறுகோள்கள் எதுவும் கிரகத்தைத் தாக்கி எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை.

சிறுகோள் தாக்குதல் பதிவு

சிறுகோள் தாக்குதல் பதிவு

இருப்பினும், சமீபத்தில் பூமிக்கு எதிரான ஒரு சிறுகோள் தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகோள் 2022 EB5 (Asteroid 2022 EB5) என்ற சிறுகோள் சமீபத்தில் பூமியைத் தாக்கி சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது மிகவும் சிறியதாக இருந்த காரணத்தினால் பெரியளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சிறுகோள் பூமியின் சுற்று வட்டத்திற்குள் நுழைத்து, கிரீன்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட கடற்கரையில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Pic Courtesy: NASA Jet Propulsion Laboratory

Best Mobiles in India

English summary
4 Planets and Moon Align this week in Early Morning Sky: Telescope is Not Need to Watch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X