300 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'காட்ஜில்லா ஷார்க்' கண்டுபிடிப்பு.. இணையத்தை மிரள வைத்த கதை..

|

300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த பழமையான புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்ஜில்லா ஷார்க் என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் உயிர் வளைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினத்திற்கு ஏன் காட்ஜில்லா ஷார்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தையும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சுவாரசியமான பதிவை இறுதி வரை தொடர்ந்து படியுங்கள். விஷயம் என்னவென்று உங்களுக்கே புரியும்.

காட்ஜில்லா தெரியும்.. 'காட்ஜில்லா ஷார்க்' பற்றி உங்களுக்கு தெரியுமா?

காட்ஜில்லா தெரியும்.. 'காட்ஜில்லா ஷார்க்' பற்றி உங்களுக்கு தெரியுமா?

'காட்ஜில்லா vs காங்' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்தே சமூக ஊடகங்களில் காட்ஜில்லா ஒரு பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது. காங் ரசிகர்களுக்கும், காட்ஜில்லா ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக மாறியுள்ளது என்று அனைவரும் பாராட்டும் வகையில் இத்திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அசுரன் பற்றிய தகவல்கள் முழுவதுமாக வெளிவருவதற்கு முன்பே, சமூக ஊடகங்கள் 'காட்ஜில்லா சுறா' பற்றி பெரிதும் பேசப்பட்டது.

ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்

ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்

ஆம், சரியாக சொன்னால் 2013 இல் காட்ஜில்லா ஷார்க் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியானது. அந்த செய்தி மீது மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. காரணம், விஞ்ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு அரிய உயிரினத்தின் தடயங்களைக் கண்டுபிடித்தனர். இந்த உயிரினம் 300 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டது. அதன் பற்கள் இது ஒரு புதிய இனமாக இருக்கலாம் என்பதற்கான முதல் அறிகுறியாகப் பார்க்கப்பட்டது. இப்படிப் பல திடுக்கிடும் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டே இருந்தது.

CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

300 மில்லியன் ஆண்டு பழமையான சுறா

300 மில்லியன் ஆண்டு பழமையான சுறா

காட்ஜில்லா திரைப்படங்களில் காணப்படுவது போல, கைஜுவின் செதில்களைப் போலத் தோற்றமளிக்கும் பற்கள் மற்றும் செதில்களால் இந்த 300 மில்லியன் ஆண்டு பழமையான சுறா காணப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு கைஜூ என்பது ஜப்பானிய வழியில் உருவாக்கப்பட்ட மான்ஸ்டர்கள். பெரிய உருவத்துடனும், அதிக பற்களுடன் முரட்டுத்தனமாகத் தாக்குதல் நடத்தும் அரக்க உயிரினங்களை ஜப்பானியர்கள் கைஜூ என்று குறிப்பிடுகின்றனர். காட்ஜில்லா உடன் ஒற்றிப்போகும் விஷயங்கள் காணப்பட்டதனால் இது 'காட்ஜில்லா ஷார்க்' என்று அழைக்கப்பட்டது.

2 மீட்டர் நீலம் கொண்ட புதிய உயிரினம்

2 மீட்டர் நீலம் கொண்ட புதிய உயிரினம்

சுறாவின் முதல் புதைபடிமத்தை அல்புகர்கியில் ஜான்-பால் ஹோட்நெட் கண்டுபிடித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் நியூ மெக்ஸிகோ இயற்கை வரலாறு மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தின் புல்லட்டின் ஒன்றில் சுறாவை ஒரு தனி இனமாக அடையாளம் காட்டியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. இது 6.7-அடி, அதாவது 2 மீட்டர் நீலம் கொண்ட உயிரினமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

ஹாஃப்மேன்ஸ் டிராகன் ஷார்க் என்ற பெயருக்கு என்ன காரணம்?

ஹாஃப்மேன்ஸ் டிராகன் ஷார்க் என்ற பெயருக்கு என்ன காரணம்?

இதற்கு விஞ்ஞானிகள் டிராக்கோப்ரிஸ்டிஸ் ஹாஃப்மனோரம் அல்லது ஹாஃப்மேன்ஸ் டிராகன் ஷார்க் என்று முறையான பெயரை வழங்கியுள்ளனர். புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்ட மன்சானோ மலைகளில் நிலத்தைச் சொந்தமாகக் கொண்ட நியூமேக்ஸிகோ குடும்பத்தின் நினைவாக இந்த பெயர் உள்ளது. கண்டுபிடித்தவரின் கூற்றுப்படி, இந்த பகுதி புதைபடிமங்களால் நிறைந்திருக்கிறது மற்றும் குவாரி மற்றும் வணிக ரீதியான தோண்டல் நடவடிக்கைகள் காரணமாக இது அணுக எளிதானதாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிட்டனகாந்த் வழியில் தோன்றிய சுறாவா?

390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிட்டனகாந்த் வழியில் தோன்றிய சுறாவா?

காட்ஜில்லா ஷார்க் என்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினத்தின் கீழ் தாடையில் 12 வரிசை பற்களைக் கொண்டிருந்துள்ளது. கீழே உள்ள பொருட்களை ஒளிரச் செய்யும் ஒரு கோண ஒளி நுட்பத்தைப் பயன்படுத்தி மட்டுமே அவற்றைக் காண முடியும் என்று ஹோட்நெட் கூறியுள்ளார். 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நவீனக் காலத்துச் சுறாக்கள் மற்றும் கதிர்களிலிருந்து பிரிந்த சிட்டனகாந்த் (ctenacanth) வழியில் தோன்றிய அதன் பரிணாம வளர்ச்சியின் மிக முழுமையான புதைபடிமங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
300 million-year-old Godzilla Shark discovered in 2013 news again Strikes the Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X