நாசா பற்றி இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

|

நாசா தொடர்ந்து பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும், ஆனால் இப்போது நாசா-வுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இஸ்ரோ பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வெற்றிபெற்றுள்ளது.

நாசா பற்றி இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

ஜூலை 29, 1958 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு சாதனைகளுக்குப் பெயர் பெற்ற நாசா, அதே அளவு சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.

வானூர்திகள் மற்றும் விண்வெளி

வானூர்திகள் மற்றும் விண்வெளி

1. நாசா தேசிய வானூர்திகள் மற்றும் விண்வெளி நிர்வாகத்திற்காக அதிகமாக உதவுகிறது.

2.1972 ஆம் ஆண்டு ஜூலை 23 இல் நாசா டயனௌநவ செயற்கைக்கோள் அனுப்பியது. இந்த செயற்கைக்கோள் பூமி வளங்கள்,பூமியை பூரணமாக புகைப்படம் எடுக்க பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3. 1958 இல் ஸ்பூட்னிக் 1 என்ற செயற்கைக்கோளை அனுப்பியது நாசா, ஸ்பூட்னிக் உலக கவனத்தை ஈர்த்தது மற்றும்

அமெரிக்காவுக்கு அதிக பெருமையை தேடித்தந்தது என்று தான் கூறவேண்டும். மேலும் இதுவே உலகின் முதல் செயற்கைகோள் என்று கூறப்படுகிறது.

 சோவியத் விண்வெளி  வீரர்கள்

சோவியத் விண்வெளி வீரர்கள்

4SR-71 பிளாக்பர்டு விமானம் நாசாவில் வேலை செய்த லாக்ஹீட் மார்டின் என்பவரால் உருவாக்கப்பட்டது, இது 1964-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5.விண்வெளியில் பயன்படுத்தும் பேனாவிற்காக நாசா மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது, மேலும் சோவியத் விண்வெளி வீரர்கள் பென்சில் பயன்படுத்தினர் என்பது புரளி ஆகும்.

6..1991 ஆம் ஆண்டு ஸ்பேஸ்வாட்ச் சார்பில் பூமியின் அருகாமையில் செயற்கை உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின் அந்தச் செயற்கை உடல் நாசாவின் வானியற்பியல் தரவு அமைப்பில் சாத்தியமான அன்னிய விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் உயிர்  தப்பினர்

விஞ்ஞானிகள் உயிர் தப்பினர்

7.அப்போலோ விண்வெளி வீரர்கள் வாழ்நாள் காப்பீடு பெறத் தகுதி பெறவில்லை. இருந்தும் விண்கலம் பூமியில் இருந்து கிளம்பும் முன் அவர்களிடம் காப்பீடு கையெழுத்து பெறப்பட்டது.

8.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கென்னடி மற்றும் நாசா தலைமையில் 1960-ம் ஆண்டு மனிதனை நிலவிற்கும் அனுப்பும் திட்டத்தை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

9.நாசாவால் சந்திரனுக்கு 1970 ஏப்ரல் 11 ஆம் திகதி செலுத்தப் பட்ட இவ்விண்கலம் 55 நிமிடங்கள் கழித்து அதன் எஞ்சின்கள் பழுதடைந்து வெடித்துச் சிதறிய பின்னரும் மிகவும் ஆச்சரியத்தக்க விதத்தில் இது பசுபிக் கடலில் இறங்கி அதில் பயணித்த விஞ்ஞானிகள் உயிர் தப்பினர். இவர்களை காப்பாற்ற நாசா எடுத்துக் கொண்ட சிரத்தை ஒரு சாதனை எனக் கருதப்படுகின்றது.

செவ்வாய்க் கிரகத்தில்

செவ்வாய்க் கிரகத்தில்

10.சர்வதேச விண்வெளி நிலையம் - (ISS- International Space Station - 1998) விண்வெளியில் தங்கி வானிலை ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாகக் கட்டம் கட்டமாக விண்ணில் நிறுவப் பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணி 1998 இல் ஆரம்பித்து 2010 இல் நிறைவுற்றது.

11.செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய முதல் விண்வண்டி பாத்ஃபைன்டர் - (Pathfinder 1996-1997) வேற்றுக் கிரகம் ஒன்றில் மோதாமல் பாதுகாப்பாகத் தரையிறங்கி ஆய்வு செய்து படங்கள் அனுப்பிய முதலாவது விண் உபகரணம் (விண்வண்டி) பாத்ஃபைன்டர் ஆகும். 1996 ஆம் ஆண்டு பூமியிலிருந்து புறப்பட்டு 309 மில்லியன் மைல்கல் பயணித்து 1997 இல் இது செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடைந்தது. இவ் விண்வண்டியின் ஆராய்ச்சியின் பயனாக வானியலாளர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டுக்குள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

12.நாசாவின் STS 127 மிஷனில் 13 வீரர்கள் 2009இல் எண்டவர் கலத்தில் இருந்தனர்! 2009 ஜூலையில் எண்டவர் கலம் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் பொருத்தப்பட்டது. அதில் உள்ள 7 பேர்கள் லேபுக்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே 6 பேர்கள் இருந்தனர். ஒரே சமயத்தில் 13 பேர்கள் இருந்தது ஒரு பெரிய ரிகார்டாகும்!

ஆப்பர்சூனிட்டி

ஆப்பர்சூனிட்டி

13.அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரோபோவுடன் கூடிய ஆப்பர்சூனிட்டி விண்வெளி வாகனத்தை அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு மேற்கொள்ள இது அனுப்பபட்டது. நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் ஆப்பர்சூனிட்டி அதிக தூரம் பயணம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

14.கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சனிக்கோள் குறித்து பல்வேறு தகவல்களை வழங்கியது நாசாவின் காசினி விண்கலம். சனிக்கோளில் இருந்து சுமார் 6,20,000 மைல் தொலைவில் இருந்து அதிக புகைப்படங்களை எடுத்துள்ளது காசினி விண்கலம்.

15. 2030 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல நாசா இலக்கு நிர்ணயித்திருக்கின்றது

அமெரிக்காவின்  நிதியில் ..

அமெரிக்காவின் நிதியில் ..

16.ஸ்டார் டிரெக் போன்ற ராப் டிரைவ் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நாசா ஈட்டுப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய குடும்பத்தின் மிக அருகாமையில் இருக்கும் ஆல்பா செண்டாரி விண்மீனிற்கு இரண்டு வாரங்களில் செல்ல முடியும்.

17.1997 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த நிதியில் சுமார் 20 சதவீதம் நாசாவிற்காக ஒதுக்கப்படுவதாக அமெரிக்கர்கள் நினைத்திருந்தது தெரியவந்தது. உண்மையில் ஒவ்வொரு டாலருக்கும் நாசாவிற்கு வெறும் $0.005 சென்ட்கள் மட்டுமே

வழங்கப்பட்டது.

18.பூமியில் இருந்து சுமார் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் 'வாட்டர் வொல்டு' நீர் உலகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இவ்வுலகில் சூடான பனிக்கட்டி மற்றும் சூப்பர்ஃப்ளியூட் நீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது

‘பார்கர்’

‘பார்கர்’

19.சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஆகஸ்ட் மாதம் ‘பார்கர்' என்ற விண்கலத்தை ஏவியது. இது நேற்று முன்தினம் சூரியனை நெருங்கியது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1976ம் ஆண்டு ஏப்ரலில் ஜெர்மன்-அமெரிக்கா தயாரிப்பான ‘ஹீலியஸ்-2' என்ற

விண்கலம்தான் சூரியனை நெருங்கி ஆய்வு செய்த முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

20.சூரிய வெப்ப அலையில் இருந்து பூமியை பாதுகாப்பது குறித்து அடுத்த 7 ஆண்டுகள் பார்கர் ஆய்வு செய்யும்.

21.அமெரிக்க அதிபர் ஓபாமா அறிவித்த ஒரு திட்டம்இ பெரும் விண்கற்பாறைக்கு மனிதன் இறங்கி ஆராய்ச்சி செய்வது.

இதை 2021ற்குள்ளாக செயற்படுத்த நாசா திட்டம் வைத்துள்ளது. இது பல சவால்களை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆர்ம்ஸ்டிராங்

ஆர்ம்ஸ்டிராங்

22.1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது.

23.முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே !

24.நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத்

தயாரிப்பது.

25.புளூட்டோ கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நியூ ஹரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
30 NASA Facts That Are Literally Out of This World: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more