151 வருடங்குளுக்கு பிறகு ஒரே இரவில் மூன்று நிலவுகள்; எப்போது.? எப்படி.?

|

நிலவை ரசிப்பதற்கு நீங்களொரு விண்வெளி பிரியராகவோ அல்லது ஆய்வாளராகோ இருக்க வேண்டிய அவசியமில்லை. பூமியெனும் கிரகத்தில் கண்கொண்டு பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நிலவில் மீதான காதல் மிக இயல்பாகவே நடக்கும்.

151 வருடங்குளுக்கு பிறகு ஒரே இரவில் மூன்று நிலவுகள்; எப்போது.? எப்படி?

பூமியின் இயற்கையான செயற்கைகோள் என்று அழைக்கப்படும் நிலவானது உண்மையில் இயற்கையானதல்ல, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிதக்கும் விண்வெளிபொருள் என்கிற சதியாலோசனை கோட்பாடுகளையெல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, நிலவின் மெய்யான அழகில் சற்று மூழ்கித்திளைக்க தயாராகுங்கள். ஏனெனில் ஜனவரி 31-ஆம் தேதியானது தொலைவில் இல்லை.

நம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும்.!

நம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும்.!

வருகிற ஜனவரி 31, 2018 ஆனது மிகவும் சிறப்பானதொரு தினமாகும். ஏனென்றால் அன்று இரவு சுமார் 151 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் ஒரு அறிய விண்வெளி நிகழ்வை நாம் நேரடியாக சந்தித்து, அதற்கான சாட்சிகளாகப்போகிறோம். இந்த மிக அரிதான சம்பவமானது நம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழுமென்பதை கருத்தில் கொள்ளவும்.

இந்தியாவில் காட்சிப்படுமா.?

இந்தியாவில் காட்சிப்படுமா.?

அதென்ன நிகழ்வு.? அது இந்தியாவில் காட்சிப்படுமா.? அந்த அறிய நிகழ்வை வெறும் கண்கள் கொண்டு காணலாமா.? போன்ற விவரங்களை பற்றி பேசும் முன்னர் சந்திர கிரகணம் என்றால் என்ன.? - என்கிற அடிப்படையை அறிந்துகொள்வோம்.

சந்திர கிரகணம் என்றால் என்ன.?

சந்திர கிரகணம் என்றால் என்ன.?

சந்திர கிரகணம் என்பது பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய மூன்று விண்வெளி பொருட்களும் சரியாக நேர்கோட்டில் சந்திக்கும் போது ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போது, நமது பூமி கிரகமானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூரணமாக நிற்பதின் விளைவாக ஏற்படும் பூமியின் நிழலானது, சந்திரனை மறைக்கும் அல்லது காணாமல் போக செய்யும்.

ஒரே இரவில் மூன்று நிலவுகள்.!

ஒரே இரவில் மூன்று நிலவுகள்.!

வருகிற ஜனவரி 31-ஆம் தேதியன்று நிகழும் சந்திர கிரகணத்தின் போது நாமொரு முழுமையான சந்திர கிரகணத்தை காண முடியும். அன்றைய சிறப்பு அது மட்டுமல்ல. அந்த இரவில் சந்திரன் மூன்று வெவ்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும்.

இந்தியாவிலும் தெரியும்.!

இந்தியாவிலும் தெரியும்.!

அதாவது ஒரு ப்ளூ மூன், ஒரு சூப்பர் மூன், ஒரு சூப்பர் பிளட் மூன் என்கிற மூன்று வகையான நிலவை ஒரே இரவில் காணலாம். எல்லாவற்றிக்கும் மேல இந்த அறிய விண்வெளி நிகழ்வானது இந்தியாவிலும் தெரியும். இரத்த நிலாக்களின் தோன்றலானது, பூமியின் அழிவு நாள் நெருங்குவதை குறிக்குமொரு நிகழ்வாகும் என்று நம்புமொறு கூட்டம் ஒருபுறம் இருக்கிறது. அதையெல்லாம் புறக்கணித்து இந்த அறிய நிகழ்வை ரசிக்க தவறாதீர்கள்.

Best Mobiles in India

English summary
3 Moons in one Night? Find Out What Will Happen on Jan 31st, 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X