28,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்மூத்-ன் செல்கள் ஆய்வு! அதிர்ச்சி முடிவுகள்..

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் அதன் உயிரியல் பொருட்கள் இன்னும் எப்படி இருக்கின்றன என்பதை அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இந்த மம்மூத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

|

சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட மம்மூத் என்ற ஒரு வகை யானை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியன் பனிக்கட்டிகளில் இருந்து தோண்டி வெளியே எடுக்கப்பட்டது. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிவை சந்தித்த உயிரினங்களின் மாதிரிகள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ள நிலையில், ஒப்பீட்டளவில் மிகவும் அழகுபடுத்தப்பட்ட இந்ந மாதிரியை கண்டுபிடித்தது ஒரு அதிர்ச்சியூட்டும் சாதனையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இது 28,000 ஆண்டுகள் பழமையானதாகும்.

28,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  மம்மூத்-ன் செல்கள் ஆய்வு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் அதன் உயிரியல் பொருட்கள் இன்னும் எப்படி இருக்கின்றன என்பதை அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இந்த மம்மூத்தை ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக வெளியான புதிய ஆய்வுமுடிவில், அந்த முயற்சியில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

28,000 ஆண்டுகள் பழமை

28,000 ஆண்டுகள் பழமை

28,000 ஆண்டுகள் பழமையான இந்த மாதிரியில் உள்ள செல்கள் எலியின் கருமுட்டையில் செலுத்தியபோது அவற்றில் "உயிரியல் நடவடிக்கைகளின் அறிகுறிகள்" காணப்பட்டன. கருப்பைகளில் காணப்படும் செல்கள் மரபணு பிரிவுக்குப் பின் ஒரு கருமுட்டையை உருவாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன .

செல் செயல்பாடு

செல் செயல்பாடு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் செல் செயல்பாடு இன்னும் நடக்கலாம் மற்றும் அதன் மூலம் சில பகுதிகள் மீண்டும் உருவாக்கப்படலாம் என்று இதன்மூலம் தெளிவாகிறது "என்கிறார் கெயின் பல்கலைக்கழகத்தின் ஜெனடிக் இன்ஜினியரிங் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளரான கீ மியாமோடோ. "இதுவரை பல ஆய்வுகள் வரைவு டி.என்.ஏ பகுப்பாய்வு மட்டுமே செய்தநிலையில், செல்கள் செயல்பாடு பற்றி எந்த ஆய்வும் கவனம் செலுத்தவில்லை" என்கிறார் அவர்.

சேதமடையாத கரு

சேதமடையாத கரு

மம்மூத்-ன் டி.என்.ஏ இன்னும் செயல்பட முடியுமா என்பதை கண்டறியும் செயல்முறை எவ்வளவு எளிதானதாக இல்லை. ஆராய்ச்சியாளர்கள் அந்த விலங்கின் காலில் இருந்து எலும்பு மஜ்ஜை மற்றும் தசை திசு மாதிரிகள் எடுத்து தொடங்கினர். அவற்றை ஆராய்ந்து சேதமடையாத கரு போன்ற கட்டமைப்பின் இருப்பை கண்டறிந்து பிரித்தெடுக்கப்பட்டது.

ஐந்து செல்கள்

ஐந்து செல்கள்

இந்த கரு செல்கள் எலியின் கருவுடன் இணைக்கப்பட்ட பின்னர், எலியின் புரதங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் சில மம்மூத் செல்களுக்கு கரு மறுசீரமைப்பிற்கான திறன் இருப்பது கண்டறியப்பட்டது. இறுதியாக, 28,000 ஆண்டு பழமையனா மம்மூத்-ன் அணுக்களை கட்டுப்படுத்த முடியும் என அறியப்பட்டது.

அதில் ஐந்து செல்கள் மிகவும் எதிர்பாராத மற்றும் உறுதியான முடிவுகளை காட்டியது. பொதுவாக செல் பிரிவிற்கு பின்னர் மட்டுமே ஏற்படும் செயல்பாடுகளுக்கான அறிகுறிகள் அவற்றில் தென்பட்டது.

 ஆய்வுகள்

ஆய்வுகள்

இந்த ஆய்வுகள் அடுத்த கட்டத்திற்கு சென்றால், "கடந்த காலத்தில் வாழ்ந்த யானைகள் மற்றும் யானைகள் எதிர்காலத்தில் வாழ சாத்தியமானவை , மரங்களை தரையில் சாய்த்து குளிர்ச்சியாக காற்று தரையை தொடவும், குளிர்காலத்தில் பனியை தாக்கவைக்கவும் அனுமதிக்கும். மேலும் அவை புல் வளரவும், கோடை காலத்தில் சூரிய ஒளி பிரதிபலிக்க உதவும்," என்கிறார் ஹார்வேர்டு மரபியல் ஆய்வாளர் ஜார்ஜ் சர்ச்.

Best Mobiles in India

English summary
28000-Year-Old Woolly Mammoth Cells Show Biological Signs Of Life: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X