எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டும் நம்மை நீர் சூலும்; ஏன்.? எதற்கு.? எப்படி.?

|

உலக வெப்பமயமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படப்போகும் அழிவுகள் பற்றிய தெளிவை மற்றும் கவலையை நீங்கள் கொண்டிருந்தால், நீங்கள் இன்னுமதிகமாய் கவலைகொள்ள கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆம், மிகவும் துரதிர்ஷ்டவசமாக,நாம் கணித்திருப்பதை விட மிக விரைவாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் சந்திக்கவுள்ளோம்.

அவ்விளைவுகளை புதிதாக வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் தரவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. அதென்ன விளைவுகள் மாட்ரிம் தரவுகள்.?

வேகமாக உயரும்

வேகமாக உயரும்

கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவில் உள்ள பனி தாள்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகுவதாக புதிய செயற்கைக்கோள் தரவுகள் காட்டுகிறது. அதன் விளைவாக கடல் மட்டங்களின் உயரமும் கணித்துள்ளதை விட வேகமாக உயரும்.

25 ஆண்டுகளின் செயற்கைக்கோள் தரவு

25 ஆண்டுகளின் செயற்கைக்கோள் தரவு

தற்போதைய விகிதத்தை பொறுத்தமட்டில், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் கடல்கள் சராசரியாக இரண்டு அடி உயரமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அளவீடுகள் கடந்த 25 ஆண்டுகளின் செயற்கைக்கோள் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் ஒரு பெரிய பிரச்சனையாகும்

நிச்சயம் ஒரு பெரிய பிரச்சனையாகும்

"இது ஒரு பெரிய பிரச்சனையாகும், ஏனெனில் கடல் மட்டம் உயர்தல் என்பது ஒரு நடுத்தரமான மதிப்பீடாக கருதப்பட்ட நிலைப்பாட்டில் அது இன்னும் வேகமாக மற்றும் அதிகமாக நிகழும் என்பது நிச்சயம் ஒரு பெரிய பிரச்சனையாகும்" என்று கொலராடோ பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளரான ஸ்டீவ் நேமெர் அவர் ஆய்வில் மேற்கோளிட்டுளார்.

கடலோர பகுதிகளில்

கடலோர பகுதிகளில்

கடல் மட்டத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் அரிப்பு போன்ற பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துமென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் அடுத்த 2100-ஆம் ஆண்டுகளில் தான் கடலோர பகுதிகளில் நடக்குமென்று நம்பப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில்

கடந்த 25 ஆண்டுகளில்

ஆனால் இப்போது அடுத்த 20 ஆண்டுகளுக்குள்ளேயே நடக்குமென்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. உலகின் வெப்பநிலை தான் கடல் மட்டங்களின் உயர்விற்கு பிரதான காரணமாகும். இது பனிப்பாறைகள் மற்றும் கடல் பனி ஆகிய இரண்டையும் உருக செய்கின்றது. கடந்த 25 ஆண்டுகளில் கடல் மட்டம் சுமார் 7.5 செமீ உயர்ந்துள்ளது.

நான்கில் மூன்று பங்கு

நான்கில் மூன்று பங்கு

இதற்கு சுமார் 55 சதவீகிதம் வெப்ப நீர் விரிவுபடுவதை காரணமாக கொண்டால் கூட மீதமுள்ள 45% ஆனதும் பனி உருக்கத்தினால் உருவானது தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் கடல் மட்டம் அதிகரிக்க - நான்கில் மூன்று பங்கு - காரணம், கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவில் உருகும் பனி தாள்கள் தான்.

சூடுபடுத்திக்கொண்டே இருக்கிறது

சூடுபடுத்திக்கொண்டே இருக்கிறது

நமது உலகளாவிய கடல் அளவுகள் 20 ஆம் நூற்றாண்டு வரையிலாக ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தது. பின்னர் தொழில்துறையின் விபரீதமான வளர்ச்சியானது ஒவ்வொரு வருடமும் டன் கணக்கிலான எரிபொருள்களை எரித்து, சுற்றுச்சூழலை சூடுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவுகளை நாம் அனைவருமே கூடிய விரைவில் சந்திப்போம்.

அதிசயங்கள் நீருக்கடியில் மூழ்க இருக்கிறது.!

அதிசயங்கள் நீருக்கடியில் மூழ்க இருக்கிறது.!

இன்னும் கடுமையான வார்த்தைகளில் கூறவேண்டுமெனில், விரைவில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களது தேடல்களையும், ஆய்வுகளையும் நீருக்கு அடியில் நிகழ்த்தும் காலம்கூட வரும். முக்கியமாக உலகின் சில குறிப்பிடத்தக்க அதிசயங்கள் எல்லாம்கூட விரைவில் நீருக்கடியில் மூழ்க இருக்கிறது. அதாவது உலகின் பெரிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் சிலவற்றை நாம் இழக்கப்போகிறோம்.

ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய்.!

ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய்.!

2000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த பண்டைய கால முக வடிவிலான சிற்பங்களானது ராப்பா நூயி என்ற தீவில் குடியேறிய பொலினேஷியத் மக்களால் கட்டமைக்கப்பட்டன. இந்த கல்லமைப்பு கொண்ட தீவானது ஏற்கனவே கடல் மட்ட உயர்வு மற்றும் கடற்கரை அரிப்பு போன்ற குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறிய தீவாகி விட்டது. தொடர்ந்து பெரிய மற்றும் வன்முறையான கடல் அலைகள் இந்த கல் தளங்கள் மீது மோதி அவைகளை சேதப்படுத்தினால், இந்த பண்டைக்கால சிலைகள் நிச்சயம் குலைந்து போய் கடலுக்குள் மூழ்கும்.

சிட்னி ஒப்பேரா மாளிகை

சிட்னி ஒப்பேரா மாளிகை

ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒப்பேரா ஹவுஸ் ஆனது உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் ஒரு புதிய நிலைப்பாட்டில் இருக்கலாம். ஆனால் அது ஏற்கனவே கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பது தான் நிதர்சனம். இந்த கட்டமைப்பு கடல் மட்டத்திற்கு மேல் 11 அடி என்ற நிலையில் உள்ளது மற்றும் உயரும் கடல் மற்றும் அதிகரிக்கும் உப்பு போன்றவைகளால் கட்டிடத்தின் அடியில் உள்ள ஆதரவு அமைப்பானது இல்லாதொழிக்கப்பட முடியும்.

எலிபண்டா குகைகள்

எலிபண்டா குகைகள்

இது இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் எலிபெண்டா தீவில் உள்ள ஒரு முக்கிய தொல்பொருள் தளமாகும். இந்திய கலையின் "மிக சரியான வெளிப்பாடுகள்" என்று இவ்விடம் நம்பப்படுகிறது மற்றும் யுனெஸ்கோவின் ஆய்வுப்படி இங்கிருக்கும் சிற்பங்களுக்கு சுமார் 1500 வயது இருக்க வேண்டும். இந்த குகைகள் ஏற்கனவே பருவ மழை, குப்பைகள், கிராஃபிட்டி (பொதுச் சுவற்றில் எழுதுவது) மற்றும் அருகிலுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் நேரம் சார்ந்த அழிவுகுணம் போன்ற அழுத்தங்களில் உள்ளது.

மொன்ட் செயின்ட்-மிச்செல்

மொன்ட் செயின்ட்-மிச்செல்

பிரான்ஸின் நார்மண்டியில் உள்ள பாறை தீவினால் தாங்கப்பட்ட ஒரு இடைக்கால நகரம் தான் மொன்ட் செயின்ட்-மைக்சேல். இது ஒரு சேற்று விரிகுடா மத்தியில் உள்ளதென்பதும், வெறும் 2.8 டிகிரி வெப்பமயமாதல் கூட மொன்ட் செயின்ட் மைக்சேல் நீருக்கடியில் அனுப்பி வைக்க போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெப்டிஸ் மேக்னா

லெப்டிஸ் மேக்னா

லிபியாவில் உள்ள லெப்டிஸ் மேக்னா துறைமுகமானது ரோமானிய பேரரசின் அரச ஆபரணங்களில் ஒன்றாக திகழ்ந்தது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், உலகின் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படும் ஒரு தொல்பொருள் தளமாகும். ஆனால் இந்த மதிப்பிற்குரிய துறைமுக நகரமானது வரவிருக்கும் நூற்றாண்டில் ஏற்பட இருக்கும் 3 அடி அல்லது அதற்கு மேற்பட்ட கடல் மட்ட உயர்வு காரணமாக மத்தியதரை கடலுக்குள் செல்லலாம்.

கொனார்க் சூரிய கோயில், இந்தியா

கொனார்க் சூரிய கோயில், இந்தியா

இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சூரிய கோயிலானது, கடல் மட்டத்தில் இருந்து 7 அடிக்கு மேல் உள்ளது. ஒரு கடும் பனி தகடு சரிவு நேர்ந்தால் இது நம்பமுடியாத வண்ணம் மூழ்கடிக்கப்படும்.

சுதந்திர தேவி சிலை

சுதந்திர தேவி சிலை

சுதந்திரம் பெற்ற 100-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்சு நாடு பரிசாக வழங்கிய இந்த சுதந்திர தேவி சிலையானது 130 ஆண்டுகளாய் நியூயார்க் துறைமுகத்தில் நிற்கிறது. நியூயார்க் நகர கடல் மட்ட உயர்வானது வெறும் மூன்று அடி அதிகரித்தால் கூட சுதந்திர தேவி சிலைக்கு சிக்கல் என்பது நிதர்சனம்.

Best Mobiles in India

English summary
25 Years Of Satellite Data Shows Worrying Trend, Global Sea Level's Rising Faster Than Expected. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X