சத்தியமா நம்பமாட்டீங்க.! உலகில் இருக்கும் நம்ப முடியாத 25 அறிவியல் உண்மைகள்.!

|

நம்மைச் சுற்றிப் பல உயிர்கள் மற்றும் பல விதமான விசித்திர நிகழ்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. இதற்குப் பின்னணியில் பல அறிவியல் சார்ந்த உண்மைகள் மறைந்து தான் கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - பாகிஸ்தான் சோதனை: வடகொரியாவுக்கு வேதனை.!

சத்தியமா நம்பமாட்டீங்க!உலகில் இருக்கும் நம்பமுடியாத 25 அறிவியல் உண்மை!

இவற்றில் சில உண்மைகளை நாம் சொன்னாலும் நம்ப முடியாதா ஒன்றாகவே இருக்கிறது. அப்படி நாம் நம்ப முடியாத, சற்றும் யூகித்துக் கூட இருக்க முடியாத சில அறிவியல் உண்மைகளை இங்குப் பார்க்கலாம்.

இஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.!

#1 பாலைவன கிராஸ்லேண்ட் விப்டெய்ல் பல்லிகள்:

#1 பாலைவன கிராஸ்லேண்ட் விப்டெய்ல் பல்லிகள்:

பாலைவன கிராஸ்லேண்ட் விப்டெய்ல் பல்லிகள்(Aspidoscelis Uniparens lizards) அனைத்தும் பெண் பல்லிகளே, இந்த பல்லி வகையில் ஆண் இனமே இல்லை என்பது தான் உண்மை. ஓ ஒன்லி லேடீஸ் ஸ்பெஷல் போல.

#2 நார்தன் கார்டினல்ஸ்:

#2 நார்தன் கார்டினல்ஸ்:

நார்தன் கார்டினல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பறவை இனத்தில் பாதி ஆண் மற்றும் பாதி பெண்ணாக இருக்கும் பறவை வகையும் உள்ளது. இயல்பாக ஆண் பறவைகள் சிவப்பு நிறத்திலும் பெண் பறவைகள் காக்கி நிறத்தில் இருக்கும். பாதி ஆண் மற்றும் பாதி பெண்ணாக இருக்கும் பறவையின் உடல் பாதி சிவப்பு மற்றும் பாதி காக்கி நிறத்தில் இருக்கும் என்கிறது அறிவியல் உண்மை. சூப்பர் டீலக்ஸ் பாதிப்பா இருக்குமோ?

இரஷ்ய பொருளாதாரம் பற்றிய பிரம்மிக்கதக்க 13 உண்மைகள்!

#3 கழுதைப் புலி:

#3 கழுதைப் புலி:

கழுதைப் புலிகள் பார்ப்பதற்கு நாய்கள் போல் தோன்றினாலும், இவை நாய்களை விடப் பூனைகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதே உண்மை. அப்ப இது நாய் இல்லையா?

#4 கவுதமாலா எரிமலை:

#4 கவுதமாலா எரிமலை:

பல நூற்றாண்டுகளாக கவுதமாலா எரிமலை மணிக்கு ஒரு முறை தீப்பிழம்புகளை வெடித்துப் பீச்சிக்கொண்டிருக்கிறது என்கிறது அறிவியல் உண்மை. அடேங்கப்பா 100 வருஷமாவா...! ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை அலாரம் வச்ச மாதிரி வெடிக்குதாம்.

#5 பீட்டா மேண்ட்ரில்:

#5 பீட்டா மேண்ட்ரில்:

பீட்டா மேண்ட்ரில் குரங்குகள் சண்டையில் வெற்றியடைந்த பின் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. குறிப்பாக இவை சண்டையில் வெற்றி அடைந்த பின் மட்டுமே முகத்தில் அதிக நிறங்கள் தோன்றுகிறது என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. வீரண்யா இவன்.!

#6 நீரழிவு விஸ்கி:

#6 நீரழிவு விஸ்கி:

நீரழிவு உள்ளவர்களின் சிறுநீரில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி உங்களால் அருமையான விஸ்கி தயாரிக்க முடியுமென்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. நம்பி குடிக்கலாமா?

#7 போபியா நோய்:

#7 போபியா நோய்:

போபியா நோய் உங்களின் மூதாதையரிடம் வருகிறது. உங்களுக்குப் பூனையைக் கண்டால் பயம் என்றால், உங்களின் மூதாதையரில் யாரோ ஒருவரின் மரபணு உங்கள் உடம்பில் உள்ளது என்று அர்த்தம். அதுவும் அவர் பூனைகளுக்கு நிச்சயம் பயம் கொண்டவர் என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. அப்பாடி அப்ப நம்ம பயம் எதுவும் நம்மது இல்லை, நான்கூட என்னதோனு பயந்துட்டேன்.

#8 வெட்டுக்கிளி:

#8 வெட்டுக்கிளி:

வெட்டுக்கிளி பூச்சிகளுக்கு அவற்றின் காதுகள் அதன் வயிற்று பகுதியில் உள்ளதாம். அங்க போய்யாப்பா காது இருக்கு.

#9 சிறுத்தை சாரா:

#9 சிறுத்தை சாரா:

உலகில் வேகமாக ஓடக்கூடிய விலங்கு என்று பதிவு செய்யப்பட்டுள்ள விலங்கு சிறுத்தை இனம் தான், அதிலும் அதிவேகமாக ஓடக்கூடிய சிறுத்தை என்று சாரா கூறப்படுகிறது. சும்மா மின்னலா பறக்குமாம்.

விண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள்!

#10 கடல் சிற்பிகள்:

#10 கடல் சிற்பிகள்:

கடல் சிற்பிகளுக்கு அதன் வாய் அருகே சுமார் 200 கண்கள் உள்ளதாம். 200 கண்களா? அப்ப நல்ல நுணுக்கத்துடன் சிற்பிகள் பார்க்கும் போல.

5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்.!

#11 ரக்கூன்:

#11 ரக்கூன்:

ரக்கூன்கள் தங்கள் கைகளால் பார்க்கின்றன. உண்மையில், இவைகள் உணவைக் கண்டுபிடிப்பதற்காக தங்கள் தொடு உணர்வைப் பயன்படுத்துகின்றன. எனவே ராக்கூன்களுக்கு கைகளும் கண்ணாய் இருக்கிறது என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. தொட்டு பார்த்தா எல்லாம் தெரியும்.

#12 சார்லஸ் ஆஸ்போர்ன்:

#12 சார்லஸ் ஆஸ்போர்ன்:

சார்லஸ் ஆஸ்போர்ன் என்று அழைக்கப்படும் இவர் சுமார் 68 ஆண்டுகளாகத் தொடர்ந்து விக்கலில் விக்கிக்கொண்டே இருந்திருக்கிறார். விக்கல் நின்ற ஒரே ஆண்டில் மரணம் அடைந்துவிட்டார். வாழ்நாளில் அதிகப்படியா விக்கிய நபர் இவர் மட்டுமே என்று குறிப்பிடப்படுகிறது. விக்கல் வந்தால் உயிர் போயிடும்னு மருத்துவமனைக்கு போறவங்க மத்தியில் இப்படி ஒருத்தரா?

#13 சூறாவளி:

#13 சூறாவளி:

உலகிலேயே சதுர மைல் ஒன்றுக்கு அதிகம் சூறாவளிகள் ஏற்படும் ஒரே நாடு யுனைடெட் கிங்டம் மட்டுமே என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. ஒரு புயலுக்கே நம்ம ஊரு தலைகீழ் ஆகிடுச்சு.

#14 வயலின் போவ்:

#14 வயலின் போவ்:

வயலின் போவ்கள் குதிரை முடியைக் கொண்டு தயார் செய்யப்படுகிறதாம். இதிலிருந்து தான் இசை அழகாக உருவாக்கப்படுகிறதாம். இசை பல பரிணாமங்கள திரியுது, குதிரை முடியில இருந்து வந்துச்சே இது ஒரு இசை.

#15 ஆழ்கடலில் கூட ஆப்பிள் மூழ்காது:

#15 ஆழ்கடலில் கூட ஆப்பிள் மூழ்காது:

தண்ணீரில் ஆப்பிள்கள் மூழ்காததற்கு காரணம், ஆப்பிளில் 23% காற்று உள்ளதாம். அப்ப ஆப்பிள் மொபைல தண்ணீல போட்ட மிதக்குமா?

#16 பழ ஈ:

#16 பழ ஈ:

பழ ஈக்கள் தங்களின் கழிவுகளைப் பயன்படுத்தி எதிர் பாலின ஈக்களை ஈர்க்கின்றன என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. காதலுக்குக் கண்ணு இல்லைனு சொன்னது சரிதான் போல, அதுக்குனு ஈக்களுக்குக் கூடவா.

#17 மோல் எலிகள்:

#17 மோல் எலிகள்:

ஒரே ஒரு ஒற்றை ராணியுடன் மட்டுமே அதன் காலனியில் உள்ள அனைத்து ஆண் மோல் எலிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. சொல்லறதுக்கு ஒண்ணுமில்லைங்க #metoo.

#18 ஆரஞ்சு:

#18 ஆரஞ்சு:

ஆரஞ்சு நிறம் கண்டுபிடிக்கப்பட்டதுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே ஆரஞ்சு பழம் இருந்திருக்கிறது என்கிறது அறிவியல் உண்மை. கோழி முதலில் வந்ததா? இல்லை முட்டை முதலில் வந்ததா என்ற கதை தான் இன்னும் பலருக்கும்.

#19 ஹார்னெட் ஸ்கிரீசிங்:

#19 ஹார்னெட் ஸ்கிரீசிங்:

ஹார்னெட் ஸ்கிரீசிங் என்ற இந்த பறவை இனம், அவற்றின் குரலை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதாம். கண்டிப்பா கேட்க முயற்சிக்க வேண்டாம் என்கிறது அறிவியல் உண்மை.

#20 போலார் கரடிகள்:

#20 போலார் கரடிகள்:

போலார் கரடிகள் கேனிபல்ஸ் என்ற அதிர்ச்சி உண்மையை என்னால் நம்ப முடியவில்லை. தன் இனத்தையே வேட்டையாடி உணவாக உண்ணும் உயிர்களை கேனிபல்ஸ் என்று அழைப்பார்கள். உணவு தட்டுப்பாடு காரணமாக பணிகரடிகள் கேனிபல்ஸ்சாக மாறியதாக அறிவியல் உண்மை கூறுகிறது.

#21 நிலாவில குப்பை போட்டது யாரு? அது நம்ம நீல் ஆம்ஸ்ட்ராங்கு:

#21 நிலாவில குப்பை போட்டது யாரு? அது நம்ம நீல் ஆம்ஸ்ட்ராங்கு:

பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் இருவரும் நிலவின் மேற்பரப்பில் சுமார் நூற்றுக்கணக்கான குப்பை கழிவுகளை விட்டுவிட்டு பூமிக்குத் திரும்பி உள்ளனர் என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. நிலவுளையும் குப்பை கொட்டினது நம்ம பயலுங்க தான்பா.

#22 ஆல்ப்ஸ் மலைகள்:

#22 ஆல்ப்ஸ் மலைகள்:

டைனோசர்கள் அழிந்த பின் தான் உயரமான ஆல்ப்ஸ் மலைகள் உருவாகியுள்ளதாம். இவ்வளவு பெரிய மலை இப்போதுதான் உருவச்சா? என்ன வேகமாக வளர்ந்து இருக்கு பாருங்க.

#23 கடலின் ஆழம்:

#23 கடலின் ஆழம்:

பதினொரு ஈபிள் டவர்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் கடலின் ஆழம் வந்துவிடும் என்கிறது அறிவியல் உண்மை. கடலின் ஆழம் 3,682.2 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

#24 மனிதக் குரங்குக்கு பாட்டு கேக்காதா:

#24 மனிதக் குரங்குக்கு பாட்டு கேக்காதா:

கிரேட் மனித குரங்குகள் இருவகைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைப் பகுத்தறியத் தகுதியானவை அல்ல என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. அப்போ குரங்கு படத்துல பாட்டுக் கேட்டு, ஸ்டேப் போட்டு ஆடுனது எல்லாம் பொய்யா கோபால்.

#25 கொடூரமான ஈக்கள்:

#25 கொடூரமான ஈக்கள்:

உலகில் மிகவும் ஆபத்தான விலங்குகள் எது என்று யாரும் கேட்டால், சிங்கம் இல்ல இல்ல டைனோசர் என்று உங்கள் மூளை யோசிக்கும். ரொம்ப யோசிக்காதீங்க உலகில் மிகவும் ஆபத்தான விலங்கு ஈக்கள் தான் என்று அறிவியல் உண்மை தெரிவிக்கிறது. ஈடா ஈடா ஈடா... அடுத்து ஈய பார்த்தா ஓடிடுங்க.

Most Read Articles
Best Mobiles in India

English summary
25 Ridiculous Science Facts That We Illustrated : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X