தென்னாப்பிரிக்க கட்டிட இடிபாடுகளில் 200000 ஆண்டு டெஸ்லா தொழில்நுட்பம்!
ஆடம் நாள்காட்டியை ஆராய்ந்ததில் இந்த பகுதி கடல் மண்ணுக்கு அடியில் 30மீட்டர் ஆழத்தில் புதைபட்டிருந்தது வெளிபடுத்தப்பட்டுள்ளது. மனித இனம் தோன்றியதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அளவை காட்டிலும் இது பழமையானதாக
பழங்கால சுமேரியன் எழுத்துகள் மற்றும் வானில் இருந்து வந்ததாக நம்பப்படும் அன்னுனாகி கடவுள் ஆகியவை, தென்ஆப்பிரிக்காவில் உள்ள புனித தலங்களுக்கு தொடர் ஏற்படுத்துகின்றன.

ஆடம் நாள்காட்டியை ஆராய்ந்ததில் இந்த பகுதி கடல் மண்ணுக்கு அடியில் 30மீட்டர் ஆழத்தில் புதைபட்டிருந்தது வெளிபடுத்தப்பட்டுள்ளது. மனித இனம் தோன்றியதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அளவை காட்டிலும் இது பழமையானதாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்.

ஜிம்பாவே- திராவிட பகுதிகளில் ஆய்வு:
உலகின் பழமையான இடங்கள் என அறியப்படும் ஜிம்பாவே மற்றும் திராவிட பகுதிகளில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த கண்டுபிடிப்புகள், அன்னுனாகி பகுதியில் நடைபெற்ற பழங்கால பணிகள் பற்றி சுமேரியன் நூல்கள் கூறுவதை உறுதிபடுத்துகின்றன. ஆனால் அவையாவும் தென்ஆப்பிரிக்காவை பற்றி குறிப்பிடவில்லை.

பழமையான கட்டமைப்பு:
உலகின் மிகவும் பழமையான கட்டமைப்புகள் என கருதப்படுபவற்றில் கிசா பிரமீடு தான் 5000ஆண்டுகள் பழமையானது. பூமியில் உள்ள மிகவும் பழமையானது கட்டமைப்பு என கூறப்படும் மால்டா மெகாலிதிக் கோவில்கள் கிமு 3500 ஆண்டை சேர்ந்தவை என கார்பன் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது. மேலே கூறியவையே முதல் மேம்படுத்தப்பட்ட சமூகங்கள் என இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் மைக்கேல் டெல்லிங்கர் மற்றும் ஜோகன் ஹைன் இணைந்து தென்ஆப்பரிக்காவின் மொசாம்பிக்யூ அருகில் உள்ள பகுதி 2,00,000 ஆண்டுகள் பழமையானது என கண்டறிந்துள்ளனர்.

கட்டமைப்பு இணைக்கும் சாலை:
10000கிலோமீட்டர் பரந்துவிரிந்திருந்த பழங்கால நகரின் ஒருபகுதிதான் இது என தெரியவருகிறது. விவசாய பகுதிகளை உள்ளடக்கிய சிக்கலான வட்டவடிவ கட்டமைப்புகளை இணைக்கும் சாலைகள் போன்றவை இது நிச்சயம் மேம்பட்ட சமூகம் வாழ்ந்த இடம் என்பதை குறிக்கின்றன.

200000 ஆண்டு பழமையாது:
மெசபோடாமியா மற்றும் எகிப்தில் கண்டறியப்பட்டவை பெரும்பாலும் 6000 ஆண்டுகள் தான் பழமையானவை. அதேசமயம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த பழங்கால நகரில் சுவர்கள் டோலரைட் வகை கற்களால் கட்டப்பட்டுள்ளன. அந்த கற்களில் ஏற்பட்டுள்ள அரிப்பை வைத்து கணக்கிடும் போது, அந்த கட்டுமானமே 2,00,000 ஆண்டுகள் பழமையானது என தெரிகிறது. எனினும் இந்த கால அளவும் சர்ச்சையாகவே உள்ளது.

முதன் முதலாக கடவுள் வழிபாடு:
எகிப்தியர்கள் தான் முதன்முதலாக கடவுளை வழிபட துவங்கி, கோவில் சுவர்களில் கடவுள் உருவத்தை செதுக்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். ஆனால் எகிப்தியர்கள் தங்களது இந்த நம்பிக்கையை தென்ஆப்ரிக்காவிடம் தான் கற்றது போல தெரிகிறது.

சுமேரியன் கல்வெட்டு:
மேலும் 2,24,000 ஆண்டுகள் ஆண்ட அரசர்களின் பட்டியலும் சுமேரிய கல்வெட்டுகளில் காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக 10 மன்னர்கள் விவிலிய வெள்ளத்திற்கு முன்பே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அளவு பற்றி ஆராயவோ ஒப்புக்கொள்ளவோ தொல்லியலாளர்கள் விரும்பவில்லை என்கிறார் டெல்லிகர்.

பழங்கால நகரங்களில் கால அளவு:
மபூடுவில் உள்ள பழங்கால நகரங்களின் கால அளவு சுமேரியர்களின் ஆவணங்களுடனும் ஒத்துப்போகிறது.ஆனால் துருதிஷ்டவசமாக வரலாற்று ஆர்வலர்கள் முந்தைய ஆராய்ச்சிகளை விட்டு போக மனமில்லாமல் அதை நம்புகின்றனர் என்கிறார் மைக்கல்.


Click it and Unblock the Notifications