சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

|

சோமாலியாவில் விழுந்த ஒரு விண்கல்லை (Somalia meteorite) இரண்டாக வெட்டிப்பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு, அதனுள் ஒன்றல்ல, மொத்தம் இரண்டு அதிர்ச்சிகள் காத்திருந்தது!

அதென்ன அதிர்ச்சி? அந்த விண்கல்லிற்குள் அப்படி என்ன இருந்தது? இதோ விவரங்கள்:

2 மீட்டர் அகலம்.. 14 டன் எடை!

2 மீட்டர் அகலம்.. 14 டன் எடை!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2020 ஆம் ஆண்டில், கிழக்கு ஆப்பிரிக்காவில் (East Africa) உள்ள சோமாலியாவில் சுமார் 14 டன் எடையுள்ள ஒரு விண்கல் விழுந்தது.

சுமார் 2 மீட்டர் அகலம் கொண்ட அந்த விண்கல் (Meteorite) ஆனது, இதுவரை பூமியில் வந்து விழுந்த 9-வது மிகப்பெரிய விண்வெளி பாறை ஆகும். அதை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தின் கீழ் விஞ்ஞானிகள் அதை வெட்டி உள்ளனர்!

எங்கிருந்து வருகிறது? 40 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத மர்ம ஒளி! ஒருவழியாக விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பதில்!எங்கிருந்து வருகிறது? 40 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத மர்ம ஒளி! ஒருவழியாக விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பதில்!

உள்ள காத்திருந்த

உள்ள காத்திருந்த "வேற்றுகிரக" சமாச்சாரம்!

சோமாலியாவில் விழுந்த விண்கல்லை வெட்டி ஆராய்ச்சி செய்த போது அதில் 2 "வேற்றுகிரக" தாதுக்கள் ("Alien" Minerals) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேற்றுகிரக என்றதுமே ஏலியன் உலகத்தில் இருந்து வந்த தாதுக்கள் / கனிமங்கள்என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

சோமாலிய விண்கல்லிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தாதுக்களும் / கனிமங்களுமே, இதுவரையிலாக பூமியில் கண்டுபிடிக்கப்படாத மினரல்கள் (New Minerals) ஆகும். எனவே தான் விஞ்ஞானிகள் அதை வேற்றுகிரக" தாதுக்கள் அல்லது கனிமங்கள் என்று குறிப்பிடுகின்றன!

உள்ளே அப்படி என்ன கனிமம் கிடைத்தது?

உள்ளே அப்படி என்ன கனிமம் கிடைத்தது?

சோமாலியாவில் விழுந்த விண்வெளி பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட 70-கிராம் துண்டானது, வகைப்படுத்தும் நோக்கத்தின் கீழ் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் (University of Alberta) விண்கல் சேகரிப்புக்கு அனுப்பப்பட்டது.

அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனைகளின் முடிவில், அதனுள் 2 புதிய தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த புதிய தாதுக்களுக்கு - எலாலைட் (Elaliite) மற்றும் எல்கின்ஸ்டன்டோனைட் (Elkinstantonite) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த விண்கல்லில் இருந்து சாத்தியமான மூன்றாவது கனிமத்தை கண்டுபிடிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. 2022 நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. 2022 நவ.3 இரவு நடந்தது என்ன?

பூமியில் வந்து விழும் விண்கற்களால் நமக்கு என்ன பலன்?

பூமியில் வந்து விழும் விண்கற்களால் நமக்கு என்ன பலன்?

விண்கற்கள் அது - பூமியில் கிடைக்கும் சாதாரண கற்களை போன்றது தான் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அளக்க முடியாத விண்வெளியில் இருந்து பூமியில் வந்து விழும் விண்கற்கள் ஆனது பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவான கோள்களில் ஒரு பகுதி ஆகும்.

அப்படியான விண்கற்களை ஆராய்வதன் வழியாக நம் சூரிய குடும்பத்தின் வரலாறு, ஆரம்ப நிலைகள் மற்றும் செயல்முறைகள் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்! இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நாமெல்லாம் எப்படி வந்தோம் என்பதை பற்றி அறிந்துகொள்ள முடியும்!

இதற்கு முன் பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல் எது?

இதற்கு முன் பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல் எது?

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை தாக்கிய ஒரு மிகப்பெரிய விண்வெளி பாறையை விண்கல் என்று கூறுவதை விட, அதை ஒரு சிறுகோள் என்றே கூறலாம்.

ஏனென்றால் அந்த விண்கல் மோதியதின் விளைவாக பூமியில் ஏற்பட்ட பள்ளத்தின் அளவு என்ன தெரியுமா? சுமார் 180 கிமீ ஆகும்! இதே விண்கல் தான் பூமியில் வாழ்ந்த டைனோசர்கள் ஆனது காணாமல் போனதற்கும் (அதாவது அழிந்து போனதற்கும்) காரணம்!

Photo Courtesy: Global Resources, University of Alberta

Best Mobiles in India

English summary
2 New Alien Minerals Discovered Inside The Somalia Meteorite That Fell Before 2 Years in East Africa

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X