ISRO-வின் தரமான செய்கை! திறந்த வாயை இன்னும் மூடாத எலான் மஸ்க் "தம்பிகள்"!

|

சந்தேகத்திற்கு இடமின்றி நம்மில் பலருக்கும் - குறிப்பாக இளைஞர்களுக்கு மத்தியில் - எலான் மஸ்க், ஒரு பெரிய இன்ஸ்ப்ரேஷன் ஆவார்; அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!

ஆனால் சமீப காலமாக, எலான் மஸ்க்கின் சில நடவடிக்கைகள் அவரின் ரசிகர்களை கூட கடுப்பேற்றி வருகிறது என்றே கூறலாம்!

ட்விட்டரில் செய்த வேலைகள்!

ட்விட்டரில் செய்த வேலைகள்!

குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் செய்த "வேலைகள்" இருக்கிறதே.. கொஞ்சமா.. நஞ்சமா?

"என்னப்பா இந்த மனுஷன் இப்படியெல்லாம் பண்ணுறான்? இதெல்லாம் ரொம்ப மோசம்!" என்று கூறும்படியே இருந்தன!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

அப்போதும் கூட

அப்போதும் கூட "அண்ணனின் விழுதுகள்" மஸ்க்கை தாங்கி பிடித்தனர்!

ஆனாலும்.. அந்த நேரத்திலும் கூட, "அண்ணன் எவ்வழியோ,,. தம்பிகளும் அவ்வழியே!" என்று கூறும் எலான் மஸ்க்கின் தீவிரமான 'ஃபாலோவர்ஸ்' இருக்கிறார்கள் அல்லவா?

அவர்களெல்லாம் மஸ்க்கை தாங்கி பிடித்தனர் என்றே கூறலாம்; தற்போது வரை அவர் என்ன செய்தாலும் அதை ஆதரித்த வண்ணமே உள்ளனர்; அவர் தான் முன்னோடி என்று போற்றியும் வருகின்றனர்!

ஆனால் இப்போது அந்த தம்பிகள்?

ஆனால் இப்போது அந்த தம்பிகள்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் (ISRO) சமீபத்திய நடவடிக்கை ஒன்றை பார்த்து, எலான் மஸ்க்கின் தீவிர ஆதரவாளர்கள் சற்றே ஷாக் ஆகி உள்ளனர்!

இஸ்ரோ, அப்படி என்ன செய்துள்ளது? இஸ்ரோவின் நடவடிக்கை எப்படி எலான் மஸ்க்கின் ஆதரவாளர்களை வாய் பிளக்க வைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனிமேல் தான் உண்மையான ஆட்டமே இருக்கு!சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனிமேல் தான் உண்மையான ஆட்டமே இருக்கு!

இஸ்ரோவின் தரமான செய்கை!

இஸ்ரோவின் தரமான செய்கை!

ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா (Hughes Communications India - HCI) என்கிற நிறுவனம் இந்தியாவின் முதல் வணிகரீதியான ஹை-த்ரோபுட் சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவையை (High-throughput satellite (HTS) broadband service) அறிமுகப்படுத்தியுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், செயற்கைகோள் வழியிலான பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அடித்தளம் போட்டு கொடுத்து, உதவி செய்வது யார் தெரியுமா?

வேறு யாராக இருக்க முடியும் - நம்ம இஸ்ரோ தான்!

வேறு யாராக இருக்க முடியும் - நம்ம இஸ்ரோ தான்!

ஹியூஸ் நிறுவனத்தின் இந்த புதிய சேவை ஆனது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜிசாட்-11 (GSAT-11) மற்றும் ஜிசாட்-29 (GSAT-29) செயற்கைக்கோள்களையே நம்பி உள்ளது.

இந்த இரண்டு சாட்டிலைட்களை பயன்படுத்தியே, ஹியூஸ் நிறுவனம் அதன் எச்டிஎஸ் பிராட்பேண்ட் சேவையை வழங்கும்!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

இந்த இடத்தில் தான் எலான் மஸ்க்கின்

இந்த இடத்தில் தான் எலான் மஸ்க்கின் "தம்பிகள்" உள்ளே வருவார்கள்!

ஏனென்றால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனமும் கூட "இதேபோன்ற" சேவையை வழங்குகிறது. அது ஸ்டார்லிங்க் (Starlink) ஆகும்!

ஸ்டார்லிங்க் திட்டத்தை பொறுத்தவரைக்கும் எலான் மஸ்க் நிச்சயம் ஒரு முன்னோடி தான். ஆனால் அவரை தவிர வேறு யாராலுமே இதை சாத்தியமாக்க முடியாது என்று "முட்டுக்கொடுத்த" சிலருக்கு, இஸ்ரோ வழியிலான எச்டிஎஸ் பிராட்பேண்ட் சேவை சற்றே 'ஷாக்கிங்' ஆக உள்ளது!

எலான் மஸ்க்கின் - ஸ்டார்லிங்க் எப்படி வேலை செய்கிறது?

எலான் மஸ்க்கின் - ஸ்டார்லிங்க் எப்படி வேலை செய்கிறது?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையானது, செயற்கைக்கோள் வழியிலான அதிவேக இணைய இணைப்பை (High-speed satellite internet connectivity) வழங்கும் நோக்கத்தை கொண்டது.

இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், பூமியின் தாழ் வட்டப்பாதையில் உள்ள (Low-Earth Orbit) செயற்கைக்கோள்களின் அமைப்பை (satellite constellation system) பயன்படுத்துகிறது.

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

ஸ்டார்லிங்க்கின்

ஸ்டார்லிங்க்கின் "வேகத்தை" இஸ்ரோ முந்துமா?

இஸ்ரோவின் ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-29 வழியாக கிடைக்கும் ஹியூஸின் எச்டிஎஸ் பிராட்பேண்ட் சேவையானது, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் அளவிற்கு வேகமான இண்டர்நெட் கனெக்ஷனை வழங்குமா என்பதில் தெளிவு இல்லை.

தற்போது வரையிலாக, இது சேவை அணுக கிடைக்கும் பகுதிகளில் சராசரியாக 90Mbps என்கிற வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளது!

இதுபற்றி இஸ்ரோவின் தலைவர் என்ன கூறுகிறார்?

இதுபற்றி இஸ்ரோவின் தலைவர் என்ன கூறுகிறார்?

"இஸ்ரோ செயற்கைக்கோள்களால் இயக்கப்படும் இந்த புதிய HTS பிராட்பேண்ட் சேவையானது, தரமான செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதோடு நில்லாமல், தொலைதூர இடங்களுக்கான பிராட்பேண்ட் கனெக்ஷனை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்று இஸ்ரோவின் தலைவர் எஸ் சோமநாத் கூறி உள்ளார்!

Photo Courtesy: ISRO, SpaceX, Wikipedia

Best Mobiles in India

English summary
2 ISRO Satellites Starts Offering Internet Service From Space Like Elon Musk's Starlink

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X