Home
Scitech

முழுவதும் பெண்களின் விண்வெளி நடைப்பயணம்! பாதுகாப்பு காரணங்களால் பின்னடைவு..

நாசா விண்வெளி வீரர்களான அன்னே மெக்லீன் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை மார்ச் 29 அன்று விண்வெளியில் நடக்க திட்டமிட்டிருந்தனர்.

இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் ஆண்களின் துணையின்றி விண்வெளியில் நடக்கும் முதல் பெண்கள் என்ற சாதனையை உருவாக்குவதில் இந்த வாரம் வெற்றியின் விளிம்புவரை சென்றனர். ஆனால் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரியான அளவிலான விண்வெளி உடைகள் இல்லாததால், பெண்களின் அந்த முக்கிய மைல்கல்லை இந்த வாரம் எட்டும் சாத்தியமில்லை.

முழுவதும் பெண்களின் விண்வெளி நடைப்பயணம்!

நாசா விண்வெளி வீரர்களான அன்னே மெக்லீன் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை மார்ச் 29 அன்று விண்வெளியில் நடக்க திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், விண்வெளி உடையின் அளவு பிரச்சனை காரணமாக மெக்லீனுக்கு பதிலாக நிக் ஹேக் விண்வெளியில் நடப்பார் என திங்களன்று (மார்ச் 25) நாசா அறிவித்துள்ளது.

மெக்லீன் மற்றும் கோச்

மெக்லீன் மற்றும் கோச்

விண்வெளியில் நடக்கும் பெரும்பாலான பெண்களைப் போலவே, மெக்லீன் மற்றும் கோச் ஆகியோர் நடுத்தர அளவிலான ஹார்டு அப்பர் டோர்ஸோ (hard upper torso -HUT) உடன் கூடிய எக்ஸ்ட்ரா வெகிகுலர் மெபிலிடி யூனிட் என்ற நாசா வழங்குவதிலேயே மிகச்சிறிய அளவுடைய விண்வெளி உடையை அணிகின்றனர். தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ள ஆறு HUT விண்வெளி உடைகளில், இரண்டு நடுத்தரமாக அளவிலும், இரண்டு பெரிய மற்றும் இரண்டு மிகப்பெரிய அளவிலும் உள்ளன. எனினும் ஒரே ஒரு நடுத்தர மற்றும் ஒரு பெரிய உடை மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது; மீதமுள்ள உடைகள் அனைத்தும் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பாதுகாப்பாக நடக்கவேண்டுமெனில் அணியும் முன்னர் சுமார் 12 மணி நேரம் தயார்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார் நாசா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனி ஸ்கீர்ஹால்.

இரண்டு விண்வெளி உடை

இரண்டு விண்வெளி உடை

விண்வெளி வீரர்கள் பொதுவாக இரண்டு விண்வெளி உடைகளுடன் வெளியே செல்வதால், மார்ச் 22, மார்ச் 22, ஏப்ரல் 8 ம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள மூன்று தொடர் விண்வெளி நடைபயணங்களிலும் ஒரு நடுத்தர மற்றும் ஒரு பெரிய உடை என இரு உடைகளை விண்வெளி வீரர்கள் தயார்செய்வர் . கோச் பூமியில் நீருக்கடியில் விண்வெளி நடை பயிற்சியில் நடுத்தர அளவு உடையை எப்போதும் அணிந்திருந்தார். மெக்லீன் நடுத்தர மற்றும் பெரிய உடைகள் இரண்டிலும் பயிற்சி பெற்றார்.

இரண்டாவது விண்வெளி நடைப்பயணத்தின் போது..

இரண்டாவது விண்வெளி நடைப்பயணத்தின் போது..

மெக்லீன் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற தனது முதல் விண்வெளி நடைபயணத்தில் நடுத்தர அளவு உடையை அணிந்திருந்தார். அதேசமயம் ஹேக்கின் பெரிய உடையை அணிந்திருந்தார் என ஸ்டீபன் கூறினார். இரண்டாவது விண்வெளி நடைப்பயணத்தின் போது, மெக்லீன் பெரிய அளவு உடையை அணிய வேண்டும் என்று நாசா திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் அவரது இணை வீரர் நடுத்தர அளவு உடையை அணிந்துகொண்டு விண்வெளியில் நடக்க இயலும்.

பெரிய அளவு உடைக்கு மாறக்கூடாது

பெரிய அளவு உடைக்கு மாறக்கூடாது

இருப்பினும் மெக்லீன் வெற்றிகரமாக நடுத்தர அளவு உடையை அணிந்தகொண்டு தனது முதல் விண்வெளி நடையை வெற்றிகரமாக முடித்துவிட்டார். அவர் இரண்டாவது விண்வெளி நடையின் போது பெரிய அளவு உடைக்கு மாறக்கூடாது என முடிவு செய்துள்ளார்."தொடரின் முதல் ஸ்பேஸ்வாக்கில் தனது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மெக்லின் நடுத்தர உடையே பொருத்தமாக இருந்தது என்று தீர்மானித்தார்" என்கிறார் ஸ்டீபன்.

நாசா

நாசா

எனவே நாசா விண்வெளி குழுவினரின் விண்வெளி நடைபயண திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இரண்டாவது நடைபயணத்தில் விண்வெளி வீரர் ஹாக், மெக்லீன்க்கு மாற்றாக பயணிப்பார். ஏப்ரல் 8 ம் தேதி உள்ள மூன்றாவது விண்வெளி நடைபயணத்தில் ஹாக்கின் இடத்தில் மெக்லீன் பயணிப்பார்.அப்போது அவர் கனடா விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் டேவிட் செயிண்ட்-ஜாக்ஸுடன் விண்வெளியில் நடப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
1st All-Female Spacewalk Scrapped Over Safety Concerns, Not Sexism : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X