சீனாவிடம் டியூசன் படிக்க வாங்க அமெரிக்கா.! இதோ சீனாவின் 15 சாதனைகள்.!

சீனா அளவிற்கு வேறு எந்தவொரு நாடும் சொந்தமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி, அதை தழுவிக்கொண்டு, தொழில்நுட்பத்தில் முன்னோடி இருக்க இயலாது.

|

தொழில்நுட்பத்தை எவ்வளவு வேண்டுமானாலும் முன்னேற்ற முடியும். ஆனால் முன்னேற்றத்தின் உண்மையான அளவீடு என்பது சமுதாயம் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதை பொறுத்தது.

தொழில்நுட்பத்தில் உலகிற்கே முன்னோடியான சீனா! 15 முக்கிய காரணங்கள்..

சீனா அளவிற்கு வேறு எந்தவொரு நாடும் சொந்தமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி, அதை தழுவிக்கொண்டு, தொழில்நுட்பத்தில் முன்னோடி இருக்க இயலாது. கண்காணிப்பு மற்றும் அடக்குமுறை போன்ற நோக்கங்களுக்காகவும் இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.


சீனாவை உலகளவில் தொழில்நுட்ப முன்னோடியாக மாற்றிய 15 முக்கிய தொழில்நுட்ப சாதனைகள் இதோ.

1) நிலவில் பருத்தி விளைச்சல்

1) நிலவில் பருத்தி விளைச்சல்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நிலவின் தூரப்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை செய்தது. அத்துடன் திருப்தியடையாமல், பரிசோதனையின் ஒரு பகுதியாக பயிர்களை வளர்க்க முயற்சி செய்ய தொடங்கினர். மற்றும் அந்நாடு வெற்றிகரமாக மிதமிஞ்சிய மைக்ரோ கிராவிட்டி சூழலில் அவற்றை பயிரிட்டு சாதனை செய்தது.

2. தேசிய சமூக மதிப்பீடு

2. தேசிய சமூக மதிப்பீடு

2019 ஆம் ஆண்டு அந்நாட்டில் " சமூக மதிப்பீடு அமைப்பு" என்ற புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக இது மக்களைக் கட்டுப்படுத்தும் சந்தேகத்திற்குரிய அரசாங்க முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இது மக்களின் கடன் மதிப்பீடு, சமூக பங்களிப்புக்கள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் மதிப்பெண் வழங்கும். மேலும் இதில் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவது அல்லது செய்த குற்றங்களும் கணக்கில்கொள்ளப்படும். இந்த மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டே பயணத்திற்கான டிக்கெட், கடன்கள், அனுமதிகள் மற்றும் பல முக்கிய விசயங்களில் முடிவெடுக்கப்படுகிறது.

3. கழிவுகளை அகற்றும் கரப்பான்பூச்சிகள்

3. கழிவுகளை அகற்றும் கரப்பான்பூச்சிகள்

இது மிகவும் அழகாக மற்றும் சிறப்பான முன்னெடுப்பு. சீனா தீவிரமாக காற்று மாசுபாடு சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், கழிவு மேலாண்மை நிறுவனங்கள் குப்பையை எரிப்பதற்கான மாற்றுவழியை கண்டுபிடிக்க வேண்டும். கரப்பான் பண்ணைகளை அமைப்பதன் மூலம், தினசரி 50 டன் சமையலறை கழிவுகளை பில்லியன் கரப்பான் பூச்சிகளை கொண்டு அழிக்கின்றனர். இதை செய்ய வேண்டும். இறந்த கரப்பான்களும் புரதத்தின் ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது.

4.விண்வெளி சூரியசக்தி மின்நிலையம்

4.விண்வெளி சூரியசக்தி மின்நிலையம்

இது இன்னும் திட்டமிடல் கட்டத்தில் மட்டுமே உள்ளது. சீனா 2021- 2025 க்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்ட்ராடோஸ்பியரில் சூரியசக்தி பண்ணைகளை அமைக்க விரும்புகிறது. அங்கு சூரிய பேனல்கள் இரவுநேர பிரச்சினை, மேகத்தால் மூடப்படுதல் அல்லது பனிமூட்டம் போன்ற பிரச்சனைகளை ஆற்றல் சேகரிப்பின்போது எதிர்கொள்ள வேண்டியதில்லை.

5.ஜீன்கள் மாற்றம்செய்யப்பட்ட குழந்தைகள்

5.ஜீன்கள் மாற்றம்செய்யப்பட்ட குழந்தைகள்

சீன டாக்டர்கள் கருவிலுள்ள இரட்டை குழந்தைகளின் மரபணுக்களை திருத்தம் செய்து, ​​ எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்எதிர்ப்பு சக்தி உள்ளவாறு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவற்றின் மரபணுக்கள் திருத்துவதில் வேறு எந்த பக்க விளைவுகள் உள்ளதாக என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

6.3டி-ல் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம்

6.3டி-ல் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அற்புத கட்டிடக்கலையான உலகின் முதல் 3டி-ல் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம் ஒன்றை சீனா திறந்துவைத்துள்ளது. அது முழுமையாக அச்சிடப்பட்டதல்ல எனினும், மாறாக அதன் பகுதிகள் அச்சிடப்பட்டு பின்னர் ஒன்றிணைக்கப்பட்டன. இது அனைத்தும் வெறும் 450 மணி நேரத்தில் செய்துமுடிக்கப்பட்டு சாதனை புரிந்தது சீனா.

7. கெய்ட் - அங்கீகரிக்கும் செயற்கை நுண்ணறிவு

7. கெய்ட் - அங்கீகரிக்கும் செயற்கை நுண்ணறிவு

இந்நாடு ஒரு புதிய வகை செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு முறைமையை பரிசோதித்து வருகிறது. அது ஒரு நபரின் அடையாளத்தை அவர்கள் எவ்வாறு நடக்கின்றனர் என்பதை வைத்து அடையாளம் காண்கிறது. காணொளியில் 50 மீ தொலைவில் உள்ளவர்கள் வரை அடையாளம் காணலாம். மக்களின் நடையை சேகரித்து அதன்மூலம் எப்படி கண்காணிப்பு அமைப்பு வேலை செய்யும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.

8. ஸ்மார்ட் நெடுஞ்சாலை

8. ஸ்மார்ட் நெடுஞ்சாலை

சீனா மொபைல் நிறுவனம் உஹன் நகரில் 5ஜி அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் நெடுஞ்சாலை ஒன்றை உருவாக்கி வருகிறது. இதில் முக்கிய அம்சங்களாக மனித ஆபரேட்டர்கள் இல்லாத ஸ்மார்ட் டோல்கள், நிகழ்நேர போக்குவரத்து தகவல், AI அடிப்படையிலான ட்ராஃபிக் கணிப்புக்கள் மற்றும் தன்னியக்க கார்களுக்கு உதவி ஆகியவை உள்ளன.

9. குளோனிங் போலீஸ் நாய்கள்

9. குளோனிங் போலீஸ் நாய்கள்

ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் காவல்துறையின் கால்நடையியல் பிரிவுகளுக்கு உதவும் வகையில் சோதனைகள் நடத்திவருகின்றனர். அவர்கள் சேவையில் சிறப்பாக செயல்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி நாய்களை குளோனிங் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன்மூலம் இனப்பெருக்கம் செய்தல், தேர்ந்தெடுத்தல் , பயிற்சி அளித்தல் போன்ற செயல்முறைகளை குறைக்கலாம். அதேசமயம் திறன்வாய்ந்த போலீஸ் நாய்களை உருவாக்கமுடியும்.

10. ஏர்போர்ட் பேசியல் ரெகக்னேசன் ஹெல்ப் டெஸ்க்

10. ஏர்போர்ட் பேசியல் ரெகக்னேசன் ஹெல்ப் டெஸ்க்

சீனா விமான நிலையங்கள் தங்கள் பயணிகள் விமானங்களின் நேரம் மற்றும் கேட்-ஐ கண்டுபிடிக்க சிறந்த வழியை கண்டறிந்துள்ளனர். டிஜிட்டல் பலகைகளில் தேடுவதற்கு பதிலாக, பேஸ் ரெகக்னேசன் உள்ள ஹெல்ப் டெஸ்க் உதவுகிறது. உங்கள் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் விமான விவரங்களை சில விநாடிகளில் தானாகவே காண்பித்து, சரியான திசையில் உங்களை வழிநடத்தும்.

11. செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள்

11. செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள்

அரசால் நடத்தப்படும் செய்தி நிறுவனமான Xinhua, நாள்முழுவதும் செய்திவாசித்தாலும் சம்பளம் கேட்காத வகையில் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது. பல ஷிப்ட்களில் செய்தி வாசிப்பாளர்களை பணியமர்த்துவதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவில் செயல்படும் செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கியுள்ளது.

12. 5ஜி ரிமோட் மூளை அறுவை சிகிச்சை

12. 5ஜி ரிமோட் மூளை அறுவை சிகிச்சை

5ஜி நம் எதிர்காலத்திற்கு எவ்வளவு அத்தியாவசியமானதாக இருக்கும் என்பதை சீனர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். டாக்டர் ஒருவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிமோட் மூலம் நோயாளிக்கு மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் 3,000 கிமீ தொலைவில் அறுவைசிகிச்சை அரங்கில் உள்ள ரோபோடிக் கருவிகளை எந்தவொரு இடையூறமின்றி துல்லியமாக இயக்கியுள்ளார்.

13. நைட் விஷன் உள்ள எலிகள்

13. நைட் விஷன் உள்ள எலிகள்

அந்நாட்டில் உள்ள உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இரவு நேரத்தில் பார்க்கும் திறனை எலிகளுக்கு வழங்கியுள்ளனர். 10 வாரங்களுக்கு இரவு நேர பார்வையை வழக்கும் வகையில் எலிகளுக்கு நானோ துகள்களை செலுத்தியுள்ளனர். இதன்மூலம் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இந்த திறனை வழங்கமுடியும்

14. பணியாள் ரோபோக்கள்

14. பணியாள் ரோபோக்கள்


சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, இந்தஆண்டு ஆரம்பத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வோர்ல்டு காங்கிரசில் (MWC) அறிமுகப்படுத்தப்பட்டது. "புத்திசாலித்தனமான பணியாளர் ரோபோ" என்று அழைக்கப்படும் இது, கண்ணாடி டம்ளரில் தண்ணீர் தருவது அல்லது நடனம் ஆடுவது போன்ற பணிகளை மட்டுமே செய்யாமல், முட்டைகளை உடையாமல் கையாளும் அளவிற்கு திறன் கொண்டவை.

15.செங்குத்து வன நகரம்

15.செங்குத்து வன நகரம்

சீனாவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தற்போது ஒரு "செங்குத்து வன நகரம்" என்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும் பணியில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் இது லியுஜியாங் ஆற்றின் கரையோரம் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கட்டிடம் ஆகும். அலுவலகங்கள், பள்ளிகள், குடியிருப்புகள், முதலியவை உள்ள இது, 40000 மரங்களால் கூழப்பட்டிருக்கும். மாசுபடுத்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள இது மிகப்பெரிய காற்று வடிகட்டி போல செயல்படவுள்ளது

Best Mobiles in India

English summary
15 Ways China Is Becoming A Pioneer In Technology, Leaving India & Rest Of World Far Behind : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X