ராமேஸ்வரத்தில் மாணவர்கள் தயாரித்த 100 சிறிய செயற்கைக்கோள்கள் செலுத்தி சாதனை.!

|

புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மாணவர்கள் இப்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் 100 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ்

ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ்

அதாவது மாணவர்களிடம் விண்வெளித் துறையில் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்துவிழிப்புணர்வு மற்றும் பயிற்றுவித்தல் ஏற்படுத்தும் திட்டத்தை ராமேஸ்வரத்தில் இருக்கும் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை,ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியவை இணைந்து கடந்த ஆண்டு துவங்கின.

 திட்டத்திற்கு வேண்டி நாடு

இந்த திட்டத்திற்கு வேண்டி நாடு முழுவதும் இருந்து 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சுமார் 1000 மாணவர்கள்தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தலா 10 பேர் கொண்ட குழுவாகப் பிரித்து 100 குழுவினருக்கு ஆன்லைன் மூலமும்,
நேரடியாகவும் கையடக்க பெம்டோ செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு மற்றும் அதற்கான செயல்முறைகள் குறித்து பயிற்சி தரப்பட்டது.

உங்களின் பேஸ்புக் ப்ரொபைலை எப்படி யாருக்கும் தெரியாதபடி லாக் செய்வது? நறுக்கு டிப்ஸ்..உங்களின் பேஸ்புக் ப்ரொபைலை எப்படி யாருக்கும் தெரியாதபடி லாக் செய்வது? நறுக்கு டிப்ஸ்..

திகபட்சம் 50 கிராம் எடை

எனவே 100 மிகச்சிறிய செயற்கைகோள்களை தயாரித்த 1000 மாணவர்கள் இரண்டு இராட்சத பலூன் மூலம் விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தி கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு ரெக்கார்டு உட்பட 5 சாதனைகளை படைத்தனர். அதிலும் மாணவர்கள் தயாரித்த இந்தசெயற்கைக்கோள்கள் 40 கிராம் முதல் அதிகபட்சம் 50 கிராம் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றில் எவ்வளவு மாசு

மேலும் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்த செயற்கைகோள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விஞ்ஞானி சிவதானு பிள்ளை பேசியது என்னவென்றால், இந்த பெம்டோ மிக சிறிய செயற்கைக்கோள்கள் விவசாயம், தகவல் தொலைத்தொடர்பு,காற்றில் எவ்வளவு மாசு உள்ளது போன்றவற்றை அறியமுடியும் என்று கூறியுள்ளார்

பள்ளி மாணவர்களே அதிகமாக பங்கேற்று இருப்பதும்

குறிப்பாக இதில் அரசுப் பள்ளி மாணவர்களே அதிகமாக பங்கேற்று இருப்பதும், அதிலும் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிகளவில் இருப்பது மகிழச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார் சிவதானு பிள்ளை.

பூமியை வந்தடையும்

அதேபோல் ஹீலியம் நிரப்பப்பட்ட 2 ராட்சத பலூன்
களில் 100 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த ஹீலியம் பலூன் ஆனது சுமார் 38 ஆயிரம் மீட்டர் உயரை வரை செல்லும். பின்பு ஹீலியம் பலூன் இலக்கை அடைந்த பின்னர் பின்னர் செயற்கைக்கோள்கள் பாராசூட் மூலமாக பூமியை வந்தடையும். மேலும் இவற்றால் சேகரிக்ககப்பட்ட விவசாயம், காற்றின் வேகம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல விவரங்கள் கணினிகளில் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
100 small satellites made by students in Rameswaram: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X