பூமிக்கு வந்த ஏலியன்ஸ்: நாசா லைவ் வீடியோவில் சிக்கிய ஆதாரம்- வட்டமடிக்கும் 10 யுஎஃப்ஓ?

|

யுஎஃப்ஓ என்பது அடையாளம் தெரியாத வானில் பறக்கும் பொருட்கள் ஆகும். அடையாளம் குறிப்பிடப்படாத பொருகள் கண்டறியும் போதெல்லாம் புலப்படும் ஒரே வார்த்தை யுஎஃப்ஓ என்பதுதான். காரணம் யுஎஃப்ஓ என்பது ஏலியன்கள் பயன்படுத்தப்படும் விண்கலன்களை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே ஒரு வட்டத்தை உருவாக்கும் யுஎஃப்ஓ-க்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மின்மினுக்கும் பொருட்களானது கழுகுக் கண்கள் கொண்ட விண்வெளி பார்வையாளரால் இந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நாசா நேரடி ஸ்ட்ரீம்

நாசா நேரடி ஸ்ட்ரீம்

இந்த காட்சிகளானது பரவலாக பரப்பப்பட்டு சமூகஊடகங்களில் யுஎஃப்ஓ குறித்து விண்வெளி ஆர்வலர்கள் உட்பட பலரிடமும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப்பில் அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை வெளியிட்டு இதுகுறித்த விவாதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாசாவின் சமீபத்திய நேரடி ஸ்ட்ரீமிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

அடையாளம் காணப்படாத 10 பறக்கும் பொருட்கள்

அடையாளம் காணப்படாத 10 பறக்கும் பொருட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றி வருகிறது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேற்புறத்தில் விண்வெளி ஆய்வு நிலையம் இருந்தபோது அதை இந்த பொருட்கள் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த யுஎஃப்ஓக்கள் நேரடியாக உண்மையில் கைப்பற்றப்பட்டது. கழுகுக் கண்களை கொண்ட விண்வெளி பார்வையாளர்களால் இது கைப்பற்றப்பட்டது.

கேமராவில் சிக்கிய உருண்டை போன்ற பொருள்

கேமராவில் சிக்கிய உருண்டை போன்ற பொருள்

உருண்டை போன்ற பொருட்களை கேமராவில் கண்ட பிறகு கவனமாக இந்த யுஎஃப்ஓக்களை காட்சி படுத்தியுள்ளனர். இருப்பினும் இவை அனைத்தும் ஊகம் என கூறப்படுகிறது. காரணம் இதுகுறித்த நாசான் பார்வையை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த காட்சிகள் பரவலாக பரப்பப்பட்டு சமூகவலைதளங்களில் யுஎஃப்ஓ குறித்து விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ்எஸ் அருகே சுற்றிக் கொண்டிருந்த பொருள்

ஐஎஸ்எஸ் அருகே சுற்றிக் கொண்டிருந்த பொருள்

நாசாவின் நேரடி ஸ்ட்ரீமில் ஐஎஸ்எஸ் அருகே சுற்றிக் கொண்டிருந்து ஃப்ளீட் ஆஃப் யுஎஃப்ஓ-க்களை கழுகு பார்வை கொண்ட விண்வெளி ஆர்வலர் கண்டறிந்துள்ளார். யூஎஃப்ஓ ஹண்டர் Mr.MBB33 இதை கண்டறிந்துள்ளார். நாசாவின் நேரடி ஸ்ட்ரீமில் இது காணப்பட்டுள்ளது. இந்த நேரடி ஸ்ட்ரீம் தொடர்ச்சியாக இருந்த போதும் இதை உன்னிப்பாக கவனித்தவர் மிக சிறந்த விண்வெளி ஆர்வலராக இருப்பார்.

யுஎஃப்ஓ ஹண்டர் கருத்து

யுஎஃப்ஓ ஹண்டர் கருத்து

யுஎஃப்ஓ ஹண்டர் இதுகுறித்து கூறுகையில், இது தெற்கு அட்லாண்டிற்கு மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து காலை 8:30 மணியளவில் பதிவு செய்யப்பட்டது. நாசாவின் சமீபத்திய நேரடி ஸ்ட்ரீமிகள் இதுவும் ஒன்று, அடையாளம் தெரியாத பத்து பறக்கும் பொருட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றி வருகின்றன. உருண்டை போன்ற பொருட்கள் கேமராவை கடந்து செல்வதை காட்டும் காட்சிகளை கவனமாக பார்த்தபின் சதி கோட்பாளர்கள் இந்த முடிவுக்கு வந்தனர்.

வட்டத்தை உருவாக்கும் 10 பொருட்கள்

வட்டத்தை உருவாக்கும் 10 பொருட்கள்

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே ஒரு வட்டத்தை உருவாக்கி 10 பொருட்கள் சுற்றிக் கொண்டிருந்தன. யூடியூப்பில் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை யுஎஃப்ஓ ஹண்டர் வெளியிட்டார். தொடர்ந்து பல விண்வெளி கோட்பாட்டாளர்கள் யுஎஃப்ஓ ஹண்டர் வீடியோ மற்றும் அவர் சுட்டிக்காட்டிய விஷயம் குறித்து கருத்து தெரிவித்து விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏணைய புள்ளிகள் இருப்பதாக தகவல்

ஏணைய புள்ளிகள் இருப்பதாக தகவல்

அதேபோல் தான் ஐஎஸ்எஸ் கேமராக்களை சோதித்ததாகவும் அதில் இன்னும் ஏணைய புள்ளிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் 2019 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையால் எடுக்கப்பட்ட "அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள்" (யுஎஃப்ஓ) புகைப்படங்கள் மற்றும் வீடியோ சட்டப்பூர்வமானவை என தெரிவிக்கப்பட்டது. இது கடற்படை வீரர்களால் எடுக்கப்பட்டவையாகும். ஒளிரும் முக்கோண வடிவிலான பொருட்கள் மேகங்கள் வழியாக கடக்கும் காட்சிகளை கடற்படை வீரர்கள் பதிவு செய்தனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
10 UFO's Found in Nasa Live Stream Video By UFO Hunter

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X