உலகின் டாப் 10 விமான படைகள்: இந்தியாவிற்கு என்ன இடம்? முதலிடத்தில் யார்?

உலகப் போருக்குப் பின், அதாவது 1954 ஆம் ஆண்டில், ஜப்பானின் ஏகாதிபத்திய விமான சேவை மற்றும் ஏகாதிபத்திய கடற்படை விமான சேவை ஆகியவகள் ஒருங்கிணைகப்பட்டது.

|

யாராவது "இந்தியா தான் ஜித்து, நாம் தான் உலகிலேயே கெத்து" என்று டயலாக் அடித்தால் அவர்களிடம் கூறுங்கள். "நாமும் கெத்து தான்" என்று! ஆம், இங்கே நாம் (இந்தியா) மட்டும் சிறந்தவர்கள் இல்லை. நம்முடன் ஒரு கூட்டமே சிறந்து விளங்குகிறது என்பதை புரிந்து, அதை அகண்ட மனத்தோடும் அறிவோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சமீபத்திய "ஹாட் டாப்பிக்" இந்திய விமான படை தான். அந்த தலைப்பின் வழியாக சென்று, உலகின் டாப் 10 விமான படைகள் எது? அந்த பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? முதல் மூன்று இடங்களில் இருப்பது யார்? குறிப்பாக முதல் இடத்தில இருப்பது யார்? என்பதை பற்றி அலசும் தொகுப்பே இது!

உலகின் டாப் 10 விமான படைகள்: இந்தியாவிற்கு என்ன இடம்?

இந்த டாப் 10 பட்டியல் ஆனது அவற்றின் (குறிப்பட்ட நாட்டின் விமான படையின்) சக்தி, வலிமை, உத்திகள் மற்றும் உளவுத்துறை உள்ளீடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

10. ஜப்பான் விமானப்படை

10. ஜப்பான் விமானப்படை

உலகப் போருக்குப் பின், அதாவது 1954 ஆம் ஆண்டில், ஜப்பானின் ஏகாதிபத்திய விமான சேவை மற்றும் ஏகாதிபத்திய கடற்படை விமான சேவை ஆகியவகள் ஒருங்கிணைகப்பட்டது. குறிப்பாக ஜப்பான் தங்கள் இராணுவத்தை மிகவும் வலுபடுத்தினர். அதற்காக அதிநவீன ரேடார் சிஸ்டம் மற்றும் காம்பாட் ஏர் பாட்ரோல்ஸ் ஆகியவைகளை களத்தில் இறக்கினர். இது போன்ற காரணங்களால் உலகின் டாப் 10 விமான படைகளின் பட்டியலில் 10 வது நிலையில் ஜப்பான் உள்ளது.

09. ஆஸ்திரேலிய விமானப்படை

09. ஆஸ்திரேலிய விமானப்படை

ஆஸ்திரேலிய விமானப்படை 1921 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மற்ற நாட்டின் படைகளோடு ஒப்பிடுகையில், ஒப்பீட்டளவில் சிறிய படையாகும் ஆனால் மிகவும் புத்திசாலித்தனமான விமானப்படை ஆகும். ஆஸ்திரேலிய விமானப்படை ஆனது 20 ஆம் நூற்றாண்டின் மிக இரகசியமான சில முயற்சிகளில் பங்கு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் இயக்க மற்றும் இயக்கம் அல்லாத காற்று விளைவு தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளதால் பட்டியலின் ஒன்பதம் இடத்தை இது நிரப்பி உள்ளது.

08. ஜெர்மன் விமானப்படை

08. ஜெர்மன் விமானப்படை

அமெரிக்க மாகாணங்களில் அல்லது கனடாவில் பயிற்சியளிக்கப்பட்ட சிறந்த விமானிகளை கொண்டுள்ளது ஜெர்மன் படை. இரண்டாம் உலகப் போரின்போது அவர்களது கடற்படைகளில் இருந்த பல மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு வெளிநாட்டு வீரர்களை தோற்கடிக்கப்பட்ட நாளில் இருந்து ஜெர்மன் நாட்டு விமானிகளின் மற்றும் விமான திறனின் பெயர்கள் மற்றும் கதைகள் வரலாற்றில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக பட்டியலின் எட்டாம் இடத்தை ஜெர்மன் விமான படை நிரப்பி உள்ளது.

07. இந்திய விமானப்படை

07. இந்திய விமானப்படை

தர்க்க ரீதியிலான விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் போன்ற விடயங்களின் கீழ் எப்போதும் உலக நாடுகளின் கவனத்தைத் திசை திருப்ப இந்திய விமானப்படை தவறியது இல்லை. அதனால் தான் இந்திய விமானப்படை உலகீழ் உள்ள சிறந்த ஆயுதம் ஏந்திய விமானப்படைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் சுமார் 170,000 நபர்கள் மற்றும் 1,500 விமானங்களை கொண்ட வலுவான விமானப்படை ஆகும். இதன் விளைவாக இந்திய விமானப்படை ஆனது டாப் 10 பட்டியலின் 7 வது இடத்தில் உள்ளது.

06. பிரான்ஸ் விமானப்படை

06. பிரான்ஸ் விமானப்படை

பிரான்ஸ் விமானப்படை பொறுத்தவரை, சர்வதேச விமானத் துறையில், தொழில் நுட்பம் சார்ந்த புகழ் பெற்ற அந்தஸ்தை கொண்டுள்ளனர். அதன் சிறந்த தொழில்நுட்பங்கள், முறைகள், உத்திகள் மற்றும் வானில் நிகழ்த்தும் ஆளுமை திறன்களை அடித்து கொள்ள உலகில் உள்ள மற்ற விமானப் படைகளால் முடியாத காரியமாகவே உள்ளது. அடிப்படையில் இது மற்ற விமான படைகளை இன்னும் சிறப்பாக ஆக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எனவே இது 6 வது இடத்தில் உள்ளது.

05. சீன விமானப்படை

05. சீன விமானப்படை

உலகெங்கிலும் சில தன்னியக்க விமானப் போர் விமானங்களை உள்ளடக்கிய 330,000 க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் 2,500 விமானங்கள் கொண்ட மிகப்பெரிய விமானப் படையாக சீன விமான படை உள்ளது. மற்ற விமான படைகளுடன் ஒப்பிடும் போது சீனா அதன் விமானப்படை நவீனமயமாக்கல் அணுகுமுறையின் கீழ் தனித்து நிற்கிறது. ஏர் ஸ்ட்ரைக் (வான்வெளி தாக்குதல்) என்று வந்துவிட்டால் சீன விமானப்படை மிகவும் சிறந்தவை ஆகும். ஆக பட்டியலின் 5 வது இடத்தில் உள்ளது.

04. பிரிட்டன் விமானப்படை

04. பிரிட்டன் விமானப்படை

உலகின் மிகப்பெரிய மோதல்களில் முடிவெடுக்கும் செயல்திறன் கொண்ட விமான படை யார் என்று கேட்டாலும் சரி, உலகின் முதல் மற்றும் மிகவும் பழைய விமானப்படை எது என்று கேட்டாலும் சரி, விடை ஒன்று தான் - பிரிட்டன் விமானப்படை. பழமையான படையாக இருப்பதால் அவர்களது தந்திரோபாயங்கள் மிகவும் எளிதான முறையில் கையாளப்படும், அது மற்ற விமான படைகளை எளிதாக தோற்கடிக்கும். ஆக பட்டியலின் நான்காவது இடத்தை ஆக்கிரமித்து உள்ளது பிரிட்டன் விமான படை.

03. இஸ்ரேல் விமானப்படை

03. இஸ்ரேல் விமானப்படை

இஸ்ரேல் தொடர்ந்து இந்த இடத்தில் இருக்கிறது என்றால், அவர்கள் உலகின் சிறந்த விமானப்படை ஆக இருக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரே ஒரு பிரதான காரணம் இருக்கிறது - இந்த நாடு தொடர்ந்து வலுவான மற்றும் சிறந்த போர் மண்டல பகுதியில் உள்ளது. எங்கும், எப்போதும் யுத்தம் தான் என்கிற நிலைப்பாட்டின் கீழ் இருக்கும் நாடானது ஒன்று சரியும் அல்லது மேலோங்கும். இஸ்ரேல் மேலோங்குவதை தேர்ந்து எடுத்து உள்ளது. மிக முன்னேறிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த விமான கைவினை மற்றும் சண்டை, பயிற்சியாளர்கள் போன்றவைகளை கொண்டு இருப்பதால் பட்டியலின் மூன்றாவது இடத்தில் இது உள்ளது.

02. ரஷியன் விமானப்படை

02. ரஷியன் விமானப்படை

ரஷ்யாவும் உலகின் சிறந்த இராணுவப் படைகளைக் கொண்டுள்ளது. அதனால் தான் இது பட்டியலின் 2 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. நம்பினால் நம்புங்கள் ரஷ்யாவின் வானூர்தி சக்திகள் ஆனது இராணுவ வலிமைக்கு ஒத்ததாக இருக்கிறது. எந்தவொரு இராணுவ சக்தியையும் அல்லது விமானப்படைகளையும் தங்களது மூலோபாய திட்டமிடல் மற்றும் விவேகமான தொழில்நுட்பங்களுடன் பிரிக்கக்கூடிய திறனை ரஷ்யா கொண்டு உள்ளது.

01. அமெரிக்க விமானப்படை

01. அமெரிக்க விமானப்படை

உலகின் மற்ற விமான படைகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க விமானப்படை ஆனது மிகப் பெரிய எண்ணிக்கையிலான போர் விமானங்களை தன்வசம் கொண்டு உள்ளது. போர் என்று வரும் போது, மிகவும் ஒன்றிணைந்த விமானப் படைகள், இராணுவப் படைகள், கடற்படைப் படைகள் தாக்குதலை நடத்துவதால் தான் என்னவோ அமெரிக்க எப்போதுமே முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடாக இருப்பது மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வலுவான இராணுவ சக்திகளாக இருப்பதால், இந்த டாப் 10 பட்டியலின் முதல் இடத்தை அமெரிக்கா பெற்று உள்ளது.

Best Mobiles in India

English summary
10 Strongest Air Forces All Around The World: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X