மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?

|

மனித கண்களுக்கு விசித்திரமாகத் தோன்றும் உயிரினங்களால் கடல் நிரம்பியுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும், ஆழத்திலிருந்து எதிர்பாராமல் சில உயிரினங்கள் கரைக்கும் வரும் போது அவை வறண்ட தரையில் இறந்து கரை ஒதுங்குகிறது. அப்படி கடலில் இருந்து மனித கண்களில் சிக்கிய 10 விசித்திரமான கடல் விலங்குகளை பற்றிய பதிவு தான் இது. இதில் எந்த உயிரினம் உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கமெண்டில் பதிவிடுங்கள்.

1. விலங்கு இராச்சியத்தில் மிகப்பெரிய கண்களைக் கொண்ட ஸ்க்விட்

1. விலங்கு இராச்சியத்தில் மிகப்பெரிய கண்களைக் கொண்ட ஸ்க்விட்

தென்னாப்பிரிக்காவின் பிரிட்டானியா விரிகுடாவில் உள்ள கோல்டன் மைல் கடற்கரையில் இறந்த ராட்சத ஸ்க்விட் (ஆர்க்கிடூதிஸ் டக்ஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. விலங்கு இராச்சியத்தில் மிகப்பெரிய கண்களைக் கொண்டுள்ளன (1 அடி அல்லது 30 சென்டிமீட்டர், விட்டம் அளவிடும்); மேலும் அவை 60 அடி (18 மீட்டர்) வரை நீளத்தை அடையலாம். இந்த குறிப்பிட்ட மாபெரும் ஸ்க்விட் இப்போது தென்னாப்பிரிக்காவின் இசிகோ அருங்காட்சியகங்களின் சேகரிப்பில் உள்ளது.

2. ஏழு கைகளைக் கொண்ட ஆக்டோபஸ்.. 8வது கை எங்கே?

2. ஏழு கைகளைக் கொண்ட ஆக்டோபஸ்.. 8வது கை எங்கே?

சியாட்டலுக்கு அருகிலுள்ள ஒரு தீவின் பாறை கடற்கரையில் ஒரு நபர் "சிவப்பு குளோப்" ஒன்றைக் கண்டபோது, ​​அவர் சில புகைப்படங்களை எடுத்தார், அது உயிரினத்தின் அடையாளம் குறித்த நட்பு விவாதத்தைத் தூண்டியது. இது பொதுவாக வாஷிங்டனின் குளிர்ந்த கடலோர நீரில் நீந்தாத ஆழமான நீர் உயிரினமாகும். ஆக்டோபஸில் ஏழு கைகளுக்கு மேல் உள்ளது. ஆண்களில், எட்டாவது கை இனச்சேர்க்கையின் போது பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ள நேரம் அது சாதாரணமாக அதன் வலது கண்ணுக்கு அருகிலுள்ள ஒரு சாக்கில் இழுத்துச் செல்லப்படுகிறது.

பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!

3. ஒன்பது கைகளைக் கொண்ட ஆக்டோபஸ்

3. ஒன்பது கைகளைக் கொண்ட ஆக்டோபஸ்

ஒரு கடற்பாசி விவசாயி ஜப்பானுக்கு வெளியே ஒரு வலையில் சில ஆக்டோபஸைப் பிடித்துள்ளார். அதை அவரின் மனைவி சமைக்க முயன்ற போது அதில் ஒரு ஆக்ட்டோபஸிற்கு 9 கால் இருப்பதாய் கவனித்துள்ளார். இந்த ஆக்டோபஸுக்கு ஒன்பது கைகள் எவ்வாறு கிடைத்தன என்ற கேள்வி எழுப்பப்பட்டது? பல்லிகள் தனது வால்களை மீண்டும் வளர்ப்பது போல, ஆக்டோபஸ்கள் அதன் கரங்களை மீண்டும் வளர்க்க கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. இதன் விளைவாக புதிதாக வளர்ந்த கரங்களில் கூடுதலாக இரு கை உருவாகியிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக்டோபஸ் தனது வாழ்வில் சுமார் 90 முறை உறுப்புகளை மீண்டும் உருவாக்குகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

4. கடலில் ஏற்பட்ட வெகுஜன இறப்பு.. பின்னணியிலிருந்த நம்ப முடியாத உண்மை

4. கடலில் ஏற்பட்ட வெகுஜன இறப்பு.. பின்னணியிலிருந்த நம்ப முடியாத உண்மை

கம்சட்காவின் தொலைதூர ரஷ்ய தீபகற்பத்தில் ஆக்டோபஸ்கள், மீன் மற்றும் நட்சத்திர மீன்கள் உட்பட ஆயிரக்கணக்கான இறந்த கடல் உயிரினங்கள் கரைக்கு வந்தன. இது ஒரு வெகுஜன விஷ நிகழ்வு என்று சந்தேகிக்கப்பட்டது. காம்சட்காவின் அவாச்சா விரிகுடாவில் 95% விலங்குகளை அழித்திருக்கலாம், இது ஒரு பேரழிவு நிகழ்வாகும், இது மீதமுள்ள விலங்குகளுக்கு அந்த பகுதியில் உள்ள உணவுச் சங்கிலியை சீர்குலைக்கும் என்று உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இறுதியில் நச்சு ஆல்கேகளால் தான் இந்த பேரழிவிற்குக் காரணமாக இருந்தது என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

5. மீனை நீரில் மிதந்து வேட்டையாடிய சிலந்தி

5. மீனை நீரில் மிதந்து வேட்டையாடிய சிலந்தி

வீட்டின் குளத்தில் வளர்க்கப்பட்ட தங்க மீனை வேட்டையாடும் எட்டு கால் கொண்ட சிலந்தியின் புகைப்படம் தான் இது. இந்த சிலாந்து ஒரு நர்சரி வலை சிலந்தி அல்லது ஒரு செமியாக்வாடிக் அராக்னிட் என்று அழைக்கப்படும் சிலந்தியாகும். இது தண்ணீரில் நடக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. தன்னை விட பெரிய உருவத்தில் இருக்கும் உயிர்களை எளிமையாக வேட்டையாடக் கூடிய திறனைக் கொண்டுள்ளது. தண்ணீரில் வேட்டையாடி பிடித்த மீனுடன் சுவரில் ஏறும் சிலந்தியின் சக்தி என்னவென்று தெரிகிறதா?

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

6. உயிருடன் மீட்க்கப்பட்ட குப்பைத்தொட்டி.. இல்லை இல்லை ஆமை

6. உயிருடன் மீட்க்கப்பட்ட குப்பைத்தொட்டி.. இல்லை இல்லை ஆமை

அர்ஜென்டினா கடற்கரையில் வலையில் சிக்கிய ஒரு பச்சை ஆமையின் நிலை பார்ப்பதற்கே மிகவும் வருத்தமளிக்கக் கூடியதாக இருந்தது. காரணம், இந்த ஆமை கடலில் நைலான் பைகள் மற்றும் கடினமான பிளாஸ்டிக் உள்ளிட்ட மனித குப்பைகளைச் சாப்பிட்டுள்ளது. ஆமை, அதன் வழக்கமான இரையான ஜெல்லிமீன்கள், கடற்புற்கள் மற்றும் புழுக்கள் என தவறாக நினைத்து பிளாஸ்டிக் பைகளை சாப்பிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

7. சுறா மீனுக்கும் வால்மீனுக்கும் சண்டை.. வெற்றி யாருக்குத் தெரியுமா?

7. சுறா மீனுக்கும் வால்மீனுக்கும் சண்டை.. வெற்றி யாருக்குத் தெரியுமா?

லிபியாவின் கடற்கரையில் ஒரு இறந்த த்ரெஷர் சுறா கரைக்கு வந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த சுறா ஒரு வாள் மீனால் கொல்லப்பட்டிருந்தது. திமிங்கிலங்கள், கடல் ஆமைகள் மற்றும் மனிதர்கள் உட்பட உணரும் விலங்குகள் மீது ஆக்ரோஷமான தாக்குதலை வாள்மீன்கள் மேற்கொள்ளும் என்பது அறியப்பட்ட விஷயம் தான், ஆனால் அவை இதற்கு முன்னர் சுறாக்களைத் தாக்கியதாக இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.!மொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.!

8. இயற்கையாக உருவாகிய முதல் ஹைபிரிட் மீன் இது தான்

8. இயற்கையாக உருவாகிய முதல் ஹைபிரிட் மீன் இது தான்

அமெரிக்க பெடில் மீனுடன், ரஷ்ய ஸ்டர்ஜன் மீன் சேரும் போது என்ன நிகழும்? இது ஒரு அசாதாரண காதல் கலப்பின உயிராக உருவெடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார். இது ஒரு துணிவுமிக்க மீனை உருவாக்கியுள்ளது, இதற்கு விஞ்ஞானிகள் ஸ்டர்டில் பிஷ் (sturddlefish) என்று பெயரிட்டுள்ளனர். இந்த அசாதாரண நிகழ்வு ஸ்டர்ஜனின் முட்டைகள் துடுப்பு மீன் விந்தணுக்களுடன் இணைந்தானால் உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தானாக நடந்த ஒரு கலப்பின முறை என்று கூறியுள்ளனர்.

9. நாய்க்குட்டி அளவில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் பில் பக்குகள்

9. நாய்க்குட்டி அளவில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் பில் பக்குகள்

இந்த வினோதமான தோற்றமுடைய மிருகம் ஒரு ஐசோபாட் ஆகும். மேலும் இது இதுவரை காணப்படாத வகையில் மிகப்பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐசோபாட் சுமார் 13 அங்குலங்கள் (33 செ.மீ) நீளம் கொண்டது மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய மாபெரும் ஐசோபாட் ஆகும்.

23 மில்லியன் ஆண்டுகள் கடந்து வந்து பூமியில் விழுந்த சிறுகோள்.. சிறிய சைஸ் பாகம் கொடுத்த புது தகவல்..23 மில்லியன் ஆண்டுகள் கடந்து வந்து பூமியில் விழுந்த சிறுகோள்.. சிறிய சைஸ் பாகம் கொடுத்த புது தகவல்..

10. மரைன் பிளாப்

10. மரைன் பிளாப்

பலூன் போல தோற்றமளிக்கும் இந்த உயிரினம் ஆழமான நீருக்கடியில் வாழ்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கோம்ப் ஜெல்லிகளுடன் தொடர்புடைய ஒரு டுயோபிராச்சியம் ஸ்பார்க்ஸே (Duobrachium sparksae) என்று அழைக்கப்படும் ஒரு புதிய இனமாகும். இது பரிஸம் போல பல வண்ணங்களில் ஒளிரக்கூடியது என்று தெரிவித்துள்ளனர். இது ஆழ்கடலில் இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய உயிரினமாகும்.

Best Mobiles in India

English summary
10 strange sea animals that washed ashore unexpectedly : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X