நடந்தது என்ன.? நாய்கள் முதல் ஹிட்லரின் நாஸிக்களிடம் சிக்கிய மனிதர்கள் வரை.!
Scientific experiments, which you cant find in your school books, History, Science, Technology, News, வரலாறு, அறிவியல், அறிவியல் தமிழ், தொழில்நுட்பம், செய்திகள்
நீர் ஆவியாக கூடாதென்பதற்காக நிகழ்த்தப்பட்ட - ப்ராஜெக்ட் தெர்மாகோல், கடலில் கொட்டிய எண்ணையை வாரி வாரி அள்ளிய - ப்ராஜெக்ட் பக்கெட் போன்ற "உலகை உலுக்கிய" பரிசோதனைகளை கண்ட தமிழர்களுக்கு, உலகின் இதர கொடூரமான, ஜீரணத்திக்கொள்ள காலமெடுக்கும் அறிவியல்-தொழிநுட்ப பரிசோதனைகள் எல்லாம் - ஜுஜுப்பி போலத்தான் இருக்கும்.

அதுவொருபக்கம் அப்படியே இருக்கட்டும். 'டெஸ்டிங்' எனக்கூறி முட்டாள்த்தனமாக நிகழ்த்தப்பட்ட உலகின் பல்வகையான கேலி கூத்துகளுக்கு அப்பால் சற்று பேசுவோமா.?
நாம் வரலாறு என்று படிக்கும் பக்கங்களில் முக்கால்வாசி பக்கங்கள் பொய்களால் உருவாக்கம் பெற்றது, குறிப்பாக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான அறிவியல் தொழில்நுட்ப சோதனைகள் பற்றிய நிஜமான தகவல்கள் எல்லாமே மறைக்கப்படுகிறது என்று கூறினால் - நீங்கள் நம்புவீர்களா.??
இவைகளெல்லாம், மனித இனம் தெரிந்துக்கொள்ள கூடாது என்பதற்காக வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா.? இல்லை, இதுபோன்ற ஆய்வுகள் மக்களை தவறான முறையில் தூண்டும் ஆபத்துக்கள் ஏற்படுமென்று வரலாற்று பக்கங்களில் தவிர்க்கப்பட்டதா.? - என்ற கேள்விக்கான பதிலை கட்டுரையின் முடிவில் நீங்களே உணர்வீர்கள்.

ப்ராஜக்ட் ஸ்ட்ராம்ப்யூரி (Project Stormfury)
அமெரிக்க அரசாங்கத்தினால், இரவின் லாம்கோர் என்ற ஆய்வாளரின் கீழ் 1940-களில் நடைபெற்ற இந்த சோதனையில், ஐஸ் கிரிஸ்டல்களை பயன்படுத்தி சூறாவளியை சக்தியிழக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன. இதை சோதனை செய்யும் நோக்கத்தில் சூறாவளி ஒன்றின் போது விமானம் மூலமாக ஐஸ் கிரிஸ்டல்களை சூறாவளிக்கு எதிர்பக்கம் கொட்ட, அது கடலில் இருந்து நகர்ந்து நகரத்திற்குள் சென்று உயிர் மற்றும் பொருள் நாசம் செய்தது.

எலிபெண்ட் அண்ட் அசிட் (Elephant and Acid)
ஆண் யானைகளின் நடத்தையைப் பற்றிய ஆய்வான இதில், ஆண் யானை ஒன்றிற்க்கு லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு என்ற போதை மருந்து கொடுக்கப்பட்டது. சாதரணமான மனிதனுக்கு கொடுக்கப்படுவதை விட 3000 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டது. போதை மருந்து செலுத்தப்பட்ட பின்பு வெறி பிடித்து திரிந்த அந்த ஆண் யானை, பரிசோதனைக்கு பின்பு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இறந்து போனது.

ஹார்ட் ஸ்டாப்பிங் (Heart Stabbing)
ஒருவர் பிறர் இதயத்தை கத்தியால் குத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஒருவர் தன் இதயத்தையே கத்தியால் குத்தியதை கேள்விப்பட்டு இருக்கீர்களா.? - அவர் தான் ஜெர்மனை சேர்ந்த வெர்னர் தியோடர் ஓட்டோ பிரோஸ்மான். அறுவை சிகிச்சை பயற்சி பெற்ற இவர் தனக்கு தானே மயக்க மருந்து செலுத்தி தன் இதயத்தையே அறுவை சிகிச்சை செய்து - எப்போது வேண்டுமானால் உயிர் இழக்கலாம் என்ற நொடிகளை கடந்து - இதய சிலாகையேற்றல் என்பதை பற்றிய புரிதலை அதிகம் பெற்று சாதனை புரிந்தார். 1956-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாஸி சோதனைகள் (Experiments by Nazi)
ஹிட்லரின் நாஸி படையினர் (நாஸி விஞ்ஞானிகள்) அரங்கேற்றிய விபரீதமான பரிசோதனைகள் ஆயிரம். மனிதர்கள் தான் நாஸிக்களின் பரிசோதனை எலிகள் என்றே கூறலாம். அப்படியான சில பரிசோதனைகளில் மனிதர்கள் பனியில் உறைய வைக்கப்பட்டனர். அதில் சில சோதனைகள் மூலம் பலர் தங்களின் உறுப்புகளையும், உயிரையும் இழந்தனர். மேலும் பலர் மனநிலை பாதிப்படைந்தனர்.

ரஷியன் போர்ஹோல் (Russian Borehole)
சுமார் 40,000 அடி ஆழம் தோண்டப்பட்ட போர்வெல் சோதனையான இது பல்வேறு அதிநவீன உபகரணங்கள் கொண்டு 1970-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. பல்வேறு புவியியர்பியல் ஆய்வுகள் நடத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த செயற்கையான போர்வெல் ஆனது, பூகம்பங்கள் மற்றும் இதர இயற்கை சீற்றங்களை உண்டாக்கும் என்பதால் அப்படியே நிறுத்தப்பட்டது.

ஹாட்ரான் கொல்லிடர் (Hadron Collider)
சுவிட்சர்லாந்து நாட்டின் நிலத்தடியிலுள்ள இது தான் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பார்டிக்கில் கொல்லிடர் ஆகும். நிலத்திற்கு அடியில் சுமார் 27 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இந்த ஆய்வகத்தில், உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 10,000 விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். சில விஞ்ஞானிகள் இது உலகை அழிக்கும் வல்லமை பெற்றது என்றும், இதன் பெரும் வெடிப்பானது உலகை அழிக்கும் அல்லது பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகளை உருவாக்கும் என்றும் நம்புகின்றனர்.

ஸ்டார்பீஷ் ப்ரைம் (Starfish Prime)
1962-ஆம் ஆண்டு, ஜூலை 9-ஆம் தேதி ஐக்கிய அமெரிக்க வான்பகுதியின் காந்த புலத்திற்கு வெளியே நடத்திய அணு ஆயுத சோதனையான இதில் சுமார் 1.4 மெகாடன் டிஎன்டி பயன்படுத்தப்பட்டது. இந்த வெடிப்பு சோதனைக்கு பின்னர் பூமியின் காந்தப்புலம் கிட்டத்தட்ட நிலை குலைந்தது என்று கூறப்படுகிறது.

மறுவாழ்வு (Live Again)
ஆன்ட்டி கொகுலண்ட்ஸ் மற்றும் எப்பிநெப்பிரின் செலுத்தினால் இறந்த உடலுக்குள் இரத்த ஓட்டம் நிகழும் என்று சோதனை செய்த ராபர்ட் ஈ கார்னிஷ், 1932-ல் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப முடியும் என்று நம்பினார். அவரின் அனைத்து சோதனைகளும் தோல்வியில் முடிந்தது என்பதும், ஒரு பரிசோதனையின் போது மட்டும் இரண்டு நாய்களை சிறிது நேரம் உயிர்பிழைத்திருக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கன்ட்ரோலிங் தி மைண்ட் (Controlling the Mind)
மனதை கட்டுப்படுத்தும் யோசனை என்பது ஒரு அழகான, அதே சமயம் மிகவும் பயங்கரமான யோசனையாகும். அதை நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஸ்பானிஷ் பேராசிரியரான ஜோஸ் டெல்கடோ மனதை கட்டுப்படுத்தும் ஒரு நுட்பத்தை உருவாக்கினார். விலங்குகளின் மூளையோடு நிகழ்த்தப்பட்ட இந்த மனதை கட்டுப்படுத்தும் சோதனையின் வழியாக விலங்குகளின் கால்களை அசைக்க முடிந்தது. மறுபக்கம் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட விலங்குகளுக்கு மிக மோசமான பின் விளைவுகள் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணுவாயுத சோதனை (Nuclear Test)
பூமி கிரகத்தில் நிகழ்த்தப்பட்ட மிகவும் மோசமான சோதனைகளில் எப்போதுமே அணு ஆயுத பரிசோதனைக்கு தான் முதல் இடம். ஏனெனில் அணு ஆயுதத்திற்கு மட்டும் தான் பெரும்பாலான மனித இனத்தை அழிக்கும் வல்லமை உண்டு. 1945-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட ஒரு அணுவாயுத சோதனையில் சுமார் 20,000 டன் டிஎன்டி பயன்படுத்தப்பட்டது. மிகவும் அபாயகரமான விளைவை நிரூபித்த வரலாற்று சோதனைகளில் ஒன்றாக இச்சோதனை கருதப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








