சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்!

|

பெட்டல்ஜியூஸ்(Betelgeuse)- நமது சூரிய மண்டலத்தின் நட்சத்திரத்தை விட 900 மடங்கு பெரிய, 10 மில்லியன் ஆண்டுகள் பழமையான நட்சத்திரம். சிவப்பு சூப்பர்ஜெயண்ட் என வகைப்படுத்தப்பட்ட இந்த பெட்டல்ஜியூஸ் போன்ற நட்சத்திரங்கள் பெரும்பாலும் பிரகாசமாக எரிந்து விரைவில் அணைந்து அழகான நட்சத்திர வெடிப்பு நிகழ்வை (சூப்பர்நோவா) நிகழ்த்தி விடைபெறும். பெரும் பரபரப்பை கிளப்பி விடைபெறும் வகையிலான பாதையில் அது இருக்கலாம் என்று தெரிகிறது.

மிகப் பெரிய தொலைநோக்கி

மிகப் பெரிய தொலைநோக்கி

வானியலாளர்கள் ESO- இன் மிகப் பெரிய தொலைநோக்கியை இயக்கி, கடந்த டிசம்பர் முதல் பெட்டல்ஜியூஸ் வழக்கமாக இருப்பதை விட 64 சதவீதம் குறைவாக பிரகாசிப்பதைக் கண்டுபிடித்தனர். நட்சத்திரங்கள் தங்கள் பயணத்தின் இறுதியில் இருக்கும்போது இவ்வாறு நிகழும்.

கருவியைப் பயன்படுத்தி இது கண்காணிக்கப்பட்டது

கருவியைப் பயன்படுத்தி இது கண்காணிக்கப்பட்டது

ஓரியன் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியான பெட்டல்ஜியூஸ், வானத்தில் 11 வது பிரகாசமான நட்சத்திரமாக விளங்கியது. இருப்பினும் இன்று, அது 24 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரோ போலரிமெட்ரிக் ஹை கான்ட்ராஸ்ட் எக்ஸோப்ளானட் ரிசர்ச் (அல்லது SPHERE) கருவியைப் பயன்படுத்தி இது கண்காணிக்கப்பட்டது. இந்த கருவி ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கிரகங்களால் வெளிப்படும் துருவப்படுத்தப்பட்ட ஐஆர் ஒளியைக் காண ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கிறது. அதேசமயம் இது பெட்டல்ஜியூஸின் கூர்மையான படங்களை எடுக்கவும் உதவியது.

10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்?

ஜோஹன்னஸ் வான் ஹீக்

ஜோஹன்னஸ் வான் ஹீக்

பால்வீதி விண்மீன் மண்டலத்தில் காணப்பட்ட மிகச் சமீபத்திய சூப்பர்நோவா எஸ்.என் 1604 அக்டோபர் 9, 1604 அன்று காணப்பட்டது. ஜோஹன்னஸ் வான் ஹீக் உட்பட பலர் இந்த நட்சத்திரத்தின் திடீர் தோற்றத்தைக் குறிப்பிட்டனர். ஆனால் ஜோஹன்னஸ் கெப்லர் தான் அவரது பொருளின் முறையான ஆய்வின் மூலம் புகழ் பெற்றார்.

பூமியிலிருந்து வெகு தொலைவில் இல்லை

பூமியிலிருந்து வெகு தொலைவில் இல்லை

இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதால் (சுமார் 650 ஒளி ஆண்டுகள் தொலைவில்), பல்வேறு விவரங்களைக் கொண்டு படங்களை எடுக்க முடிந்தது. அவற்றின் மூலம் நட்சத்திரத்தின் மையப்பகுதியிலிருந்து மேற்பரப்புக்கு இடம்பெயர்ந்த சூடான வாயுவின் ஜினோமஸ் குமிழ்கள் வெளிப்பட்டன.

இந்த நட்சத்திரம் நிலையாக இல்லாமல் வடிவத்தை மாற்றிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசிக்கின்றன என்பதையும் படங்கள் வெளிப்படுத்தின.

நட்சத்திரம் உண்மையில் அணையுமா?

நட்சத்திரம் உண்மையில் அணையுமா?

பெட்டல்ஜியூஸ் நட்சத்திரம் உண்மையில் சூப்பர்நோவா நிலைக்கு சென்றால், அது நமது விண்மீன் மண்டலத்தில் அதன் அருகிலுள்ள மற்ற நட்சத்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பிரகாசமான நட்சத்திரமாக இருக்கும் . ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சிவப்பு ராட்சஷ நட்சத்திரம் ஊசலாடும்

சிவப்பு ராட்சஷ நட்சத்திரம் ஊசலாடும்

இதுதொடர்பான கோட்பாடுகளில் ஒன்று என்னவென்றால், இந்த சிவப்பு ராட்சஷ நட்சத்திரம் ஊசலாடும் கட்டத்தை கடந்து செல்கையில், வெப்பம் அதன் மேற்பரப்பைச் சுற்றிலும் பயணித்து வெப்பச்சலனக் கலங்களை மங்கச் செய்வதால் பிரகாசம் குறைகிறது. மற்றொரு கோட்பாடு என்னவென்றால், அது தனக்குதானே வெளியேற்றிக் கொண்ட சூடான வாயுவின் மேகங்களுடன் மங்கலாகத் தெரிகிறது.

ரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி

 கே.யூ.லூவனின்

கே.யூ.லூவனின்

பெல்ஜியத்தில் உள்ள கே.யூ.லூவனின் வானியலாளரும், புதிய அவதானிப்புகளுக்குப் பொறுப்பான அணியின் தலைவருமான மிகுவல் மொன்டர்கேஸ் கூறுகையில், " விதிவிலக்கான நட்சத்திர செயல்பாடு அல்லது நம்மை நோக்கி தூசி வெளியேற்றப்படுவதால் மேற்பரப்பு குளிர்வித்தல் என்ற இரு நிகழ்வுகள் குறித்தே ஆராய்ந்துவருகிறோம். நிச்சயமாக சிவப்பு சூப்பர்ஜெயிண்டுகள் பற்றிய எங்களது அறிவு முழுமையானது அல்ல., இது இன்னும் முன்னேற்றமடைந்து வருகிறது. எனவே ஆச்சரியம் இன்னும் நிகழலாம். " என்கிறார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
10 Million Year Old Star Shutting Down : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X