அடேய்.! ஜப்பானாவே இருந்தாலும் கூட ஒரு நியாயம் தர்மம் வேணாமா.?

|

ஜப்பான் - முரண்பாடுகள் கொண்ட ஒரு நாடாகும். ஏனெனில், உலகத்தில் யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விடயங்கள், பழக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் அங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

ஆரம்பத்தில் ஜப்பானிய கண்டுபிடிப்புகள் மிகவும் மோசமாக கேலிசெய்யப்பட்டன. உதாரணத்திற்கு 1995-ஆம் ஆண்டில் "பயனற்ற ஜப்பானிய கண்டுபிடிப்புகள்" என்ற பெயரில் ஒரு புத்தகமே வெளியானது. அதே புத்தகத்தில், இப்போது மிகவும் பிரபலமான கேமராவிற்கான மோனோபாட் (monopod) இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திரா காந்தி, கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏனென்று தெரியுமா..?இந்திரா காந்தி, கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏனென்று தெரியுமா..?

இப்படியாக, பல கேலிப்பேச்சுகளை சந்தித்த பின்னரே ஜப்பான் - ஒரு முன்னோடியான நாடாக திகழ்கிறது. இருந்தாலும் கூட ஜப்பானின் சில அசாதாரண கண்டுபிடிப்புகளை பார்க்கும் போது ஜப்பானியர்களின் அறிவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை; அதே சமயம் பொங்கிவரும் சிரிப்பையும் அடக்க முடியவில்லை.!

கேம் பிரியர்.!

கேம் பிரியர்.!

நீண்ட நேரம் வீடியோ கேம் விளையாடும் கேம் பிரியர்களை மனதிற்கொண்டு, அவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகள்.!

பொத்தான் ஒளிரும்.!

பொத்தான் ஒளிரும்.!

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள எலிவேட்டர்களில் குடை சின்னம் கொண்ட ஒரு பொத்தான் இருக்கும். வெளியில் மழை பொழிந்தால், அதை வெளிப்படுத்தும் பொருட்டு அந்த பொத்தான் ஒளிரும்.!

ஜப்பானிய ட்ரோன்.!

ஜப்பானிய ட்ரோன்.!

இது ஒரு ஜப்பானிய ட்ரோன் ஆகும். விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த ட்ரோன், சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றி வந்து விண்வெளி வீரர்களையும் மற்றும் சுற்றுப்புறங்களை புகைப்படம் எடுக்கும் பணியில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறது.!

மிகவும் கூச்ச சுவாபம்.!

மிகவும் கூச்ச சுவாபம்.!

இவைகள் ஜப்பானில் உள்ள பெண்களுக்கான டாய்லெட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஜென்டில் நாய்ஸ் (gentle noise) கருவிகளாகும். ஏனெனில் ஜப்பானிய பெண்கள் மிகவும் கூச்ச சுவாபம் உடையவர்கள் ஆவர்.!

வலுவான மற்றும் மிக சக்திவாய்ந்த.!

வலுவான மற்றும் மிக சக்திவாய்ந்த.!

ஜப்பானிய அறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இது ஒரு எக்ஸோசூட் (exosuit) ஆகும். இது மனிதர்களின் தசைகளை கட்டுப்படுத்தி, அவர்களை வலுவான மற்றும் மிக சக்திவாய்ந்த வேலைகளை செய்ய உதவுமொரு சூட் ஆகும். இதன் விலை 5,000 அமெரிக்க டாலர்களில் இருந்து தொடங்குகிறது.!

அழைக்கும்போதெல்லாம்.!

அழைக்கும்போதெல்லாம்.!

தனது உரிமையாளர் அழைக்கும்போதெல்லாம் அவர்களின் அருகில் செல்லும் திறன் கொண்ட குளிர்சாதனப்பெட்டி.! இதோ எதிர்காலம்.! ஜப்பானிய சிந்தனை என்றால் சும்மாவா.?

கடிதம் எழுதினால் போதும்.!

கடிதம் எழுதினால் போதும்.!

காசுப்போடா தேவையில்லை; கடிதம் எழுதினால் போதும். கையெழுத்தை ஊக்கப்படுத்தும் முனைப்பில் கீழ் உருவாக்கம் பெற்றுள்ள வெண்டர் மெஷின்.!

குரல் பயிற்சி.!

குரல் பயிற்சி.!

உங்களுக்கு அழகான குரல் இல்லை என்று வருத்தப்பட்டது உண்டா.? ஆம் என்றால் நீங்கள் ஜப்பானில் பிறக்க வேண்டியவர்கள். இது தான் குரல் பயிற்சி (beauty voice training device) சாதனமாகும். இது உங்கள் குரலை இனிமையாக்கும்.!

கவர்ச்சியான உதடு.!

கவர்ச்சியான உதடு.!

குண்டான மற்றும் கவர்ச்சியான உதடுகளை உருவாக்கி கொடுக்குமொரு ஜப்பானிய சாதனம்.!

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
நிகழ்நேர போட்டோஷாப்.!

நிகழ்நேர போட்டோஷாப்.!

இறுதியாக ஜப்பானின் போட்டோ பூத்களில் நீங்கள் படம் எடுத்துக்கொள்ளும் போது, உங்களின் கண்கள் பெரிதாக பதிவாகும் அதாவது நிகழ்நேர போட்டோஷாப் விளையாட்டு நிகழும். ஆக ஜப்பானியர்களின் குட்டி கண்களுக்கு குட்பை.!

'இந்த' ஜப்பான் மூளையை அடகு கூட வைக்க முடியாது..!

'இந்த' ஜப்பான் மூளையை அடகு கூட வைக்க முடியாது..!

பயங்கரமா பாராட்டு வாங்கணும்னா... முதல்ல நல்லா அசிங்கப்படனும் போல..! அதுக்கு இந்த 'பழைய' ஜப்பான் குசும்புக்கார மூளைகள் தான் சிறந்த எடுத்துக்காட்டு..!

இன்னைக்கு உலகமே ஜப்பான் செய்யும் ஒவ்வொன்றையும் "ஆஹா.. ஓஹோ..!" என்று மூக்கின் மேல் விரல் வைத்து போற்றி தள்ளினாலும்.. ஒரு காலத்துல ஜப்பான்காரங்க பண்ணின வேலைகளை பார்த்தால்.. சிரிப்பு சிரிப்பா தான் வருது.... நீங்களே பாருங்களேன்..!

ஆனியன் கட்டிங் காகில்ஸ்..!

ஆனியன் கட்டிங் காகில்ஸ்..!

வெங்காயம் நறுக்கும் போது போட்டுக் கொள்ளும் கண்ணாடி. கண் எரிச்சலை தடுக்குமாம்...!

ஆல் சவுண்ட் சேட்ச் க்யூபிக் பில்லோ..!

ஆல் சவுண்ட் சேட்ச் க்யூபிக் பில்லோ..!

தலகாணி போல இருக்கும் இதற்குள், நம் போனை வைத்துக் கொள்ளலாம். படுத்துக் கொண்டே 'ஹாயாக' பேசலாம்..!

ஸ்க்ரீன் ஜாக்கெட்..!

ஸ்க்ரீன் ஜாக்கெட்..!

ரகசியமாக செயல் பட..?!

360 டிகிரி கேமிரா..!

360 டிகிரி கேமிரா..!

நாங்கலாம் அப்போவே அப்படி.. இப்போ சொல்லவா வேணும்..!?

சாப்ஸ்டிக் விசிறி..!

சாப்ஸ்டிக் விசிறி..!

ஆக்க பொறுத்தவன்.. ஆற பொறுக்க மாட்டான்....! சரி தான்..!

டை வால்லெட் :

டை வால்லெட் :

ரெண்டு, மூணு மொபைல் வச்சிருக்கும் 'பிசி' மக்களின் கவனத்திற்கு..!

தி சோலார் லைட்டர்..!

தி சோலார் லைட்டர்..!

தீப்பெட்டி எதற்கு..? சூரியன் இருக்கு..!

இயர் எக்ஸ்ப்லோரர் :

இயர் எக்ஸ்ப்லோரர் :

உள்ள என்ன என்ன இருக்கு..?! பாத்து-பாத்து வசதியாக காது குடையலாம்..!

சைலன்ட் கரோக்கி..!

சைலன்ட் கரோக்கி..!

உங்க பாட்டு யாரையும் தொந்தரவு செய்யாது, யாருக்கும் கேக்காது..!

சவுண்ட் என்ஹான்சர்..!

சவுண்ட் என்ஹான்சர்..!

இதை மாட்டிக் கொண்டால்... யானைக்கு கேட்காதது கூட நமக்கு கேட்கும்..!

Best Mobiles in India

English summary
10 Inventions Japan Can Boast About. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X