இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டாவிற்கு பின்னால் இருந்த ராவ்.!

Written By:
  X

  ஒருவர் இறந்தால் மட்டுமே அவரின் மீதான பெரும் அக்கறைகளும், அவரின் மகத்தான சாதனைகளும் வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பது என்பது, உலகவாழ் மக்களின் மனதில் நன்கு பதிந்துவிட்ட ஒரு காரியமாகும்.

  அதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவின் (ISRO) முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவ் இழப்பும் ஒரு சாட்சி. உலகம் முழுவதிலும் உள்ள விண்வெளி சமூகம் இவரின் மரணம் துக்கம் விசாரிக்கிறது.

  யு.ஆர். ராவ் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானிகளில் ஒருவரான உடுப்பி ராமச்சந்திர ராவ், திங்கட்கிழமை (இன்று) காலமானார். இந்த தருணத்தில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டாவிற்கு பின்னால் இருந்த ராவ் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள் இதோ.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஏஎஸ்எல்வி

  1985-ஆம் ஆண்டில், விண்வெளி துறையின் செயலாளராகவும், விண்வெளி ஆணையராகவும் ராவ் பொறுப்பேற்றார். 1992-ஆம் ஆண்டில்,வெற்றிகரமாக ஏவப்பட்ட ஏஎஸ்எல்வி (ASLV) ராக்கெட தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தியவரும் இவரே.

  ஆர்யபட்டா

  1975-ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆன ஆர்யபட்டாவின் துவக்கத்திற்கு ராவ் ஒரு முக்கியமான பங்கை வகித்தார்.

  பல்வகை செயற்கைக்கோள்கள்

  ராவ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியாவில் ஆர்யபட்டா தவிர, பாஸ்கரா, ஆப்பிள் (APPLE), ரோஹினி, இன்சாட்-1 மற்றும் இன்சாட்-2 என தொடர்ச்சியான பல்வகை செயற்கைக்கோள்கள் மற்றும் ஐஆர்எஸ்-1ஏ மற்றும் ஐஆர்எஸ்-1பி ஆகிய தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் உட்பட குறைந்தது 20 செயற்கைக்கோள்களை இந்தியா மேற்கொண்டது. இந்த திட்டங்கள் தகவல்தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வானிலை சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டிருந்தன.

  பிஎஸ்எல்வி

  1995-ஆம் ஆண்டில் 850 கிலோ செயற்கைக்கோளை ஒரு துருவக் கோளப்பாதையில் தொடங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பிஎஸ்எல்வி வெளியீட்டு வாகனத்தின் வளர்ச்சிக்கான பொறுப்பாளியாகவும் ராவ் திகழ்ந்தார்.

  சேட்டிலைட் ஹால் ஆப் பேம்

  மார்ச் 19, 2013 அன்று, வல்லுநர் இன்டர்நேஷனல் சம்மேளனத்தால் (Society of Satellite Professionals International) ஏற்பாடு செய்யப்பட்ட சேட்டிலைட் ஹால் ஆப் பேம் (Satellite Hall of Fame) நுழைந்த முதல் இந்தியர் - ராவ் ஆனார்.

  முதல் இந்தியர்

  மே 15, 2016 அன்று ராவ் சர்வதேச வானியல் சம்மேளனத்தில் (International Astronautical Federation - IAF) இணைந்தார். இந்த சாதனையை அடைந்த முதல் இந்தியர் ராவ் ஆவார்.

  விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கட்டுரை

  காஸ்மிக் கதிர்கள், விண்வெளி இயற்பியல், உயர் ஆற்றல் வானியல், விண்வெளி பயன்பாடுகள் மற்றும் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய 350-க்கும் மேற்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கட்டுரைகளை ராவ் வெளியிட்டுளார். உடன் அவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

  கௌரவ பட்டங்கள்

  கர்நாடகாவில் உள்ள ஆதாருவில் மார்ச் 10, 1932 அன்று பிறந்த ராவ், 25 பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ பட்டங்கள் பெற்றுள்ளார். இதில் ஐரோப்பாவின் பழமையான பல்கலைக்கழகமான பொலோக்னா பல்கலைக்கழகமும் அடங்கும்.

  இஸ்ரோவின் தலைவராக

  அகமதாபாத்தில் உள்ள பிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி குழுவின் தலைவராகவும் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1984-1994 ஆண்டுகளில் இஸ்ரோவின் தலைவராக ராவ் பணியாற்றினார்.

  கௌரவ விருதுகள்

  இந்திய விண்வெளி தொழில்நுட்பத்திற்கான பங்களிப்புக்காக ராவ், 1976 ஆம் ஆண்டில் பத்ம பூஷனும், 2017-ஆம் ஆண்டு பத்ம விபூஷனும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Former ISRO chief UR Rao dies: 10 facts to know about the man behind India's first satellite Aryabhata. Read more about this in Tamil GizBot.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more