ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிய 10 உண்மைகள்.! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.!

உண்மையில் ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிய சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்னம் சில விஷயங்கள் நம் வாழ்க்கையை நாம் எப்படி நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டுமென்ற புரிதலை உண்டாக்குகிறது.

By Sharath
|

அவர் மரணத்தின் சோகமான செய்தி உலகெங்கிலும் பரவி வருகிற நிலையில், அவரின் வாழ்க்கை, வேலை மற்றும் அவருடைய அறியப்படாத சில உண்மைகளை இங்கு நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம்.

ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிய 10 உண்மைகள்.!உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.!

உண்மையில் ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிய சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்னம் சில விஷயங்கள் நம் வாழ்க்கையை நாம் எப்படி நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டுமென்ற புரிதலை உண்டாக்குகிறது.

விஞ்ஞானம் அல்லது இயற்பியல் போன்ற முன்னேற்றங்களைக் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம், ஆனால் ஸ்டீஃபன் ஹாகிங் பற்றி சில விஷயங்களை நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

1. அவர் பள்ளியில் பிரகாசமான மாணவர் அல்ல

1. அவர் பள்ளியில் பிரகாசமான மாணவர் அல்ல

கருந்துளை பற்றி விளக்கம் கொடுத்த ஸ்டீஃபன் ஹாகிங் தனது பள்ளி வயதில் பிரகாசமான மாணவனாக இருந்ததில்லையாம், 9 ஆம் வகுப்பு வரை மந்தமாகவே இருந்திருக்கிறார். பிறகு கூடுதல் கவனத்துடன் பள்ளி பாடங்களில் சிறக்க துவங்கி இருக்கிறார்.

2. உயிரியல் பிடிக்காத ஹாகிங்

2. உயிரியல் பிடிக்காத ஹாகிங்

சொன்னால் நம்ப மாட்டீர்கள் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் என அனைத்திலும் விருப்பம் காட்டிய ஹாகிங் உயிரியலில் மட்டும் விருப்பம் காட்டியதே இல்லையாம். கிறிஸ்டின் லார்ஸன் எழுதிய ஒரு சுயசரிதை பற்றி அவர் " மிகவும் விவரிக்கப்பட்ட தெளிவற்ற" நூல் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் இயற்பியல் நூல்களை
"துல்லியமான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட" நூல்கள் என்று தெரிவித்திருந்தார்.

3. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்ற மருத்துவர்

3. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்ற மருத்துவர்

தனது 21 வயதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, ​​ஹாகிங்கிற்கு ALS இன் அறிகுறிகள் காட்டத் தொடங்கியது. குடும்பத்தின் வற்புறுத்தலினால் மருத்துவமனை பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது தான் அவர் லூ கெரிக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவர் சொல்லி அறிந்தார் ஸ்டீஃபன் ஹாகிங். அது மட்டுமில்லாமல் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

4. எல்லையற்ற யுனிவர்ஸ் தியரி

4. எல்லையற்ற யுனிவர்ஸ் தியரி

ஹாகிங்கின் முக்கிய சாதனைகளில் ஒன்று, பிரபஞ்சம் எல்லைகளுக்குள் இல்லை என்ற கோட்பாட்டை விளக்கினார். 1983 ஆம் ஆண்டில் ஹாகிங் மற்றும் ஜேம்ஸ் ஹார்ட்லி இருவரும் இனைந்து, குவாண்டம் இயக்கவியல்களை பொதுவான சார்பியலுடன் இணைத்து, இந்தப் பிரபஞ்சம் ஒரு கட்டுப்பாட்டு எல்லைக்குள் இல்லை என்றும் இந்தப் பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் நிரூபித்தனர்.

5. 1985 இல் சாவின் விளிம்பில் உயிர் தப்பிய ஹாகிங்

5. 1985 இல் சாவின் விளிம்பில் உயிர் தப்பிய ஹாகிங்

ஜெனிவாவில் இருந்த பொது ஹாக்கிங் நிமோனியாவாள் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். மருத்துவர்கள் நம்பிக்கை இழந்த பொதும், ஹாகிங் இன் மனைவி ஜேன் மூச்சுப் பெருங்குழாய் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களை முயற்சி செய்து அவரைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டார். பேச்சுத்திறனை இழந்து, அறுவைசிகிச்சையின் மூலம் சாவின் விளிம்பில் இருந்த ஹாகிங் காப்பாற்றப்பட்டார்.

6. அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஸ்பீச் சிந்தசைஸர்

6. அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஸ்பீச் சிந்தசைஸர்

பேச்சாற்றலை இழந்த ஸ்டீஃபன் ஹாகிங்ற்கு முதன் முதலில் ஸ்பீச் சிந்தசைஸர் ஐ கலிபோர்னியா நிறுவனம் உருவாக்கியது. இந்த ஸ்பீச் சிந்தசைஸர் அமெரிக்கா உச்சரிப்புடன் பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்டது. பேச்சாற்றலை இழந்த ஸ்டீஃபன் ஹாகிங்ற்கு திரையில் வரும் வார்த்தைகளை தன் கைகளால் தேர்ந்தெடுத்து பேசும் வசதியை இந்த ஸ்பீச் சிந்தசைஸர் ஏற்படுத்திக் கொடுத்தது. சில காலத்தில் ஹாக்கிங் இன் கைகள் செயல் இழக்கத் தொடங்கிய பின்பு இன்பிறாரெட் கண் கண்ணாடி மூலம் கன்னத்தின் தசை அசைவுகளைக் கொண்டு செயல்படும் ஸ்பீச் சிந்தசைஸரை அந்நிறுவனம் உருவாக்கியது.

7. தொலைக்காட்சியில் பல முறை தோன்றிய ஸ்டீஃபன் ஹாகிங்

7. தொலைக்காட்சியில் பல முறை தோன்றிய ஸ்டீஃபன் ஹாகிங்

ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் 1993 எபிசோடில் ஹாகிங் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். மேலும் "தி சிம்ப்சன்ஸ்" கார்ட்டூன் நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்தார். "ஃப்யூச்சரமா" மற்றும் "தி பிக் பேங் தியரி" நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் ஸ்டீஃபன் ஹாகிங் என்பது குறிப்பிடத்தக்கது.

8. குழந்தைகள் புத்தக எழுத்தாளர் ஸ்டீஃபன் ஹாகிங்

8. குழந்தைகள் புத்தக எழுத்தாளர் ஸ்டீஃபன் ஹாகிங்

2007 ஆம் ஆண்டில், ஹாகிங் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றைத் தனது மகள் லூசி உடன் வெளியிட்டார். ஜார்ஜ்'ஸ் சீக்ரெட் கீ அன் தி யுனிவர்ஸ்(George's Secret Key to the Universe) என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தில் சூரிய குடும்பம், எரிமலை, கருந்துளை மற்றும் பிற வான் விவரங்களை விவரித்து எழுதி இருந்தார்.

9. ஏலியன் இருப்பதை நம்பிய ஸ்டீஃபன் ஹாகிங்

9. ஏலியன் இருப்பதை நம்பிய ஸ்டீஃபன் ஹாகிங்

2008 ஆம் ஆண்டில் நாசாவின் 50 வது ஆண்டு விழாவில், ஹாகிங் பேசுவதற்கு முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்பொழுது ஏலியன் பற்றிய தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக மக்களுக்கு ஹாகிங் தெரிவித்தார். ஏலியன்களின் தேடல் டி.என்.ஏ சார்ந்ததாக இருக்காது என்பதால் மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விழாவில் ஹாகிங்ஸ் தன்கருத்துகளை தெரிவித்தார்.

10. திரைப்படமாக உருவாக்கப்பட்ட ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கை கதை

10. திரைப்படமாக உருவாக்கப்பட்ட ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கை கதை

ஹாக்கிங் மற்றும் அவரது மனைவி ஜேன் வைல்டு இடையேயான காதல் கதை 2014 இல் "தி தியரி ஆஃப் எவ்ரிதிங்(The Theory of Everything)" என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் நடித்த "எடி-ரெட்மெய்ன்(Eddie Redmayne )" சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை இந்தப் படத்திற்காக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீஃபன் ஹாகிங் பாராட்டிய நடிகர்

ஸ்டீஃபன் ஹாகிங் பாராட்டிய நடிகர்

இந்த ஆஸ்கார் வெற்றியானது ஹாக்கிங்கிற்கு சமற்கிபிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஹாக்கிங் படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் தன்னையே நேரில் பார்ப்பது போல் இருப்பதாக, எடி-ரெட்மெய்ன் இன் நடிப்பைப் பாராட்டி புகழ்ந்திருக்கிறார்.


பிரபஞ்சம் முழுதும் "ஸ்டீஃபன் ஹாகிங்".

Best Mobiles in India

English summary
10 facts about Stephen Hawking you didn't know that may surprise you : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X