Home
Mobile

OnePlus Mini போன் சும்மா தீயா இருக்கே.. சின்ன டிஸ்பிளே ஆனால் டபுள் 50MP கேமரா, 6000mAh பேட்டரி.. என்ன விலை?

ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல்களை அப்படியே தூக்கி ஓரமாக வைக்கும்படியான விலை மற்றும் அம்சங்களுடன் ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) மாடல் ரெடியாகி உள்ளது போல் தெரிகிறது. ஒன்பிளஸ் 13 மினி எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 13 மினி எப்போது அறிமுகமாகும் (OnePlus 13 Mini Launch Date)? ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஒன்பிளஸ் 13 சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி என்கிற மாடல், 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் (2025 Q3) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2025 ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

OnePlus Mini போன் சும்மா தீயா இருக்கே.. சின்ன டிஸ்பிளே ஆனால்!

ஒன்பிளஸ் 13 மினி என்ன ஸ்பெஷல் ஆக இருக்கும்? நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களில் ஒருவரா டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸில் இருந்து வரவிருக்கும் "சிறிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" (Small Flagship Smartphone) ஆனது உயர்நிலை செயல்திறன் (High-end performance) மற்றும் நீண்ட பேட்டரி லைஃப்பை (Long battery life) வழங்கும்.

மேலும் ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி மாடல் ஆனது இன்டர்நேஷனல் ஆஸ்தெட்டிக் (International aesthetic) உடனான மிகவும் சிம்பிள் ஆன கேமரா யூனிட்டை (Simple Camera Unit) கொண்டிருக்கும் என்றும், இது பார்ப்பவர்களை டக்கென்று ஈர்க்கும் படியான.. மிகவும் அழகான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (OnePlus 13 Mini Or OnePlus 13T Specifications Expected)?
- மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் (metal middle frame andglass back)
- நான்கு பக்கங்களிலும் குறைந்தபட்ச பெசல்களை கொண்ட டிஸ்பிளே டிசைன் (Minimal bezels Design)

- 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் LTPO OLED டிஸ்பிளே
-டிஸ்பிளேவில் ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிட்டன் சென்சார் (Short-focus in-display fingerprint sensor)
- ஒன்பிளஸ் 13 மாடலில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்

- டூயல் ரியர் கேமா செட்டப் (Dual Camera Setup)
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 6000mAh பேட்டரி
- வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Wireless Charging Support)

ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் OnePlus 13 Mini Or OnePlus 13T Price Expected)? லீக் ஆன விவரங்களின் படி, ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி ஆனது மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பவர்டு ஸ்மார்ட்போனாக சந்தையில் நிலைநிறுத்தப்படலாம்.

இது சுமார் 3,000 யுவான்களுக்கு (415 அமெரிக்க டாலர்கள் - இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.36,000 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். தற்போதைக்கு 3,099 யுவான் என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேஸிங் எடிஷன் (Realme GT 7 Pro Racing Edition) ஸ்மார்ட்போன் தான், சீனாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பவர்டு ஸ்மார்ட்போனாக உள்ளது; ஒன்பிளஸ் இதை முறியடிக்க விரும்புவது போல் தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13T AKA OnePlus 13 Mini Design Major Specifications Price Launch Date Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X