வீடியோ கேம் பிரியர்களுக்காக ஓர் புதிய சமூக வலைதளம்!

இந்த புதிய சின்கா வித் ப்ரன்ட்ஸ் சமூக வலைதளத்தின் மூலம் வீடியோ விளையாட்டுப் பிரியர்கள் ஒன்றாக இணைய முடியும். அதில் அவர்கள் உறுப்பினர்களாக இணைய முடியும். மேலும் விளையாட்டுப் பிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் இந்த சமூக வளைத்தளத்தின் மூலம் உரையாட முடியும். அதோடு தங்கள் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்.
தற்போது சின்கா விளையாட்டுகளை 290 மில்லியன் பேர் விளையாடுகின்றனர். இந்த 290 மில்லியன் பேரையும் இந்த புதிய சமூக வளைத்தளத்தின் மூலம் இணைக்க முடியும் என்று சின்கா நம்புகிறது.
மேலும் இந்த புதிய சமூக வளைத்தளத்தின் மூலம் சின்காவின் குழு விளையாட்டுகளை இதன் உறுப்பினர்கள் சூப்பராக விளையாட முடியும். அதுபோல் இந்த சின்க் நிறுவனம் பல புதிய விளையாட்டுகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. அவற்றை ஆப்பிள் அப்ளிகேசனுக்குள் சென்று பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய சின்கா சமூக வளைத்தளத்தின் மூலம் இனி வீடியோ விளையாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து பொழுதைப் போக்கலாம்.


Click it and Unblock the Notifications