நீங்க எங்கே சென்றாலும் AC மாதிரி சில்லுனு காற்று வேண்டுமா? இந்த போர்ட்டபிள் ஏசியை வாங்குங்க!
அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள வெயில் இந்த போடு போடுது, என்னானு இந்த கோடை காலத்தை தாண்டி தப்பித்து உயிர் வாழப்போகிறோமோ என்று வேக்காட்டில் புலம்பும் தமிழர்களே! உங்கள் கவலை என்னவென்று எங்களுக்கு நன்றாக தெரிகிறது.
இந்த கோடை காலத்தின் கொடூரமான வெப்பத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியானால், உங்களுக்கான ஒரு கூலிங் கேட்ஜெட்டை உடனே நீங்கள் வாங்க வேண்டும். AC, ஏர் கூலர், டவர்-ஃபேன், கூகிளின் ஃபேன் போன்ற சாதனங்கள் எல்லாம் சற்று விலை அதிகம் என்பதனால், எல்லோராலும் இதை வாங்க முடியாது. இருப்பினும், உங்கள் பட்ஜெட்டிற்குள், உங்களை வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க உதவும் போர்ட்டபிள் AC சாதனத்தை தான் இங்கு பார்க்க போகிறோம்.

நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது வெளியில் எங்காவது சென்றிருந்தாலும் சரி, இந்த போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர் இனி உங்களை குளிர்விக்க தயாராக இருக்க போகிறது. இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். உங்கள் கைகளில் பிடித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இது உங்களுக்கு தேவையான மிகவும் குளிர்ச்சியான காற்றை ஒரு சிங்கிள் டச் இல் வழங்குகிறது.
இங்கு நாம் பார்க்கப்போகும் சாதனத்தின் பெயர் ZVR Fan Cooling Neck Fan ஆகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது உங்கள் கழுத்தில் அழகாக தொற்றிக்கொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையடக்க நெக் ஃபேன், லைட் வெயிட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உங்களுடைய அவுட்டோர் தேவைகள், உடற்பயிற்சி மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப காற்றோட்டத்தைத் தனிப்பயனாக்க இதில் மூன்று ஸ்பீட் மோட்கள் உள்ளது.
இதில் இரண்டு பக்கமும் ஒரு ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக உங்கள் கழுத்தை சுற்றி குளிர்ந்த காற்றை வழங்குகிறது. இது ரிச்சார்ஜபிள் பேட்டரி உடன் வருகிறது. இதன் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும், இந்த Neck Fan சாதனம் கொண்டு செல்ல வசதியாக உள்ளது. இது இப்போது பிளிப்கார்ட் தளம் வழியாக 40% சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

கழுத்தில் ஃபேன் கருவியை மாட்டினால் பெண்களின் முடி சிக்குமே என்று சிலர் கேள்வியை எழுப்பலாம். இந்த சாதனம், முடியை பாதுகாப்பாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெக் ஃபேனில் 48 காற்று திறப்புகளும் 360° ஏர் அவுட்லெட் துளைகளும் உள்ளது. இது டூயல் ஃபிரிக்வென்சி மாக்லெவ் மோட்டார் உடன் சூப்பர் அமைதியாக இயங்குகிறது. இது செல்போனை விட குறைவான எடை கொண்டது என்பதனால், உங்கள் கழுத்தில் வலி இருக்காது.
இந்த ZVR Fan Cooling Neck Fan சாதனம் Flipkart வழியாக 40% தள்ளுபடியுடன் வருகிறது. நீங்கள் கையடக்க மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கூலிங் சாதனத்தை தேடுகிறீர்களானால், இது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாகும். இது முன்பு ரூ. 1999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்ட சலுகைக்கு பிறகு இதன் விலை ரூ. 1,199 ஆக குறைந்துள்ளது. இந்த தள்ளுபடி மூலம் ரூ. 800 சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications