இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்: எதற்காக?

பட்-ன் நோக்கம் என்னவென்றால் ஏற்கனவே உள்ள மருந்துகளின் மூலம் புதிய நோய்களை குணப்படுத்த முடியுமா என்பது தான்.

|

மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தை கொண்டு நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? பாரசைட்டை கொல்லும் மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்தலாமா? முடி கொட்டும் பிரச்சனையை இதய நோய்க்கான மருந்தை கொண்டு சரிபடுத்தமுடியுமா? இது போன்ற மருந்துகளுக்கும் match.com அல்லது tinder போன்ற தளங்கள் ஜோடிப்பொருத்தம் பார்க்க இருந்தால் எப்படி இருக்கும்? டாக்டர் அடுல் பட்-ஐ நம்பினால் இது சாத்தியமே!

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்.!


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் எதிர்பாராவிதமாக வேறு மருத்துவத்திற்கு பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்தியவை. பட் UC சான்பிராசிஸ்கோ-ன் இயக்குநர் , பிரிசெல்லா சான் மற்றும் மார்க் சக்கர்பெர்க் அதில் சிறப்பு பேராசியர்களாக உள்ளனர். இவரின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மார்க் 10மில்லியன் டாலர் பரிசளித்துள்ளார். பட்-ன் இந்த ஆராய்ச்சியை "டேட்டா ரீசைக்ளிங் " என அழைக்கிறார்.

இதைப் பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால்,இது போன்ற மருந்துகளை எதிர்பாராமல் கண்டுபிடிப்பதற்கு பதிலாக பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து கண்டறிவது தான்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்.!


யூ.சி.எஸ்.எப் இன்ஸ்டியூட் ஆப் கம்ப்யூட்டேசனல் ஹெல்த் சயின்ஸ் தலைவரான பட் "trillion points of data" என்பதை நம்புகிறார். இதன் அடிப்படையில் பொதுவெளியில் கிடைக்கும் டிரில்லியன் கணக்கான தரவுகளை கொண்டு அனைத்துவித நோய்களுக்கும் , புதிதாக உருவாகும் நோய்களுக்கும் தீர்வுகளை கண்டறிந்து நோயாளிகளை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கமுடியும்.

பொதுவெளியில் உள்ள தரவு என்பது மிகவும் உயர்தரமாக இருந்தாலும், நம்மிடம் இருப்பது மிகவும் பிரம்மாண்டமானது. எடுத்துக்காட்டுக்கு நாசா-வை எடுத்துக்கொண்டால், ஒராண்டில் பல புகைப்படங்களை எடுத்தாலும் அவற்றை பார்க்கும் அளவிற்கு வானிலை ஆய்வாளர்கள் இல்லை. ஆனால் அறிவியல் பூர்வமான தகவல்கள் குறிப்பிட்ட சிறப்பு சமயங்களில் மட்டுமே பயன்படும். புற்றுநோய்க்கு பயன்படும் தகவல்கள் அதற்கு மட்டுமே பயன்படாமல், அதற்கு துளியும் சம்பந்தம்இல்லாத இடத்திலும் அதே தரவுகள் பயன்படும்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்.!

தற்போது சிறந்த அறிவியலாளர்கள் பலரும் தங்களது தரவுகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தி ,சக அறிவியலாளர்களின் சரிபார்ப்பிற்கு பின்பே டாப் இதழ்களில் வெளியிடப்படும். எனவே மருந்துகள் மற்றும் நோய்களின் தரவுகளை கணிணிமுறையில் இணைத்து, எந்த மருந்துக்கலவையின் மூலம் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்பதை கண்டறிந்து அந்த மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்கிறார் பட்.

யூ.சி.எஸ்.எப் ல், மூன்றாண்டுகளுக்கான மின்னணு சுகாதார அறிக்கைகளை பரிந்துரைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அந்த அறிக்கைகளில் உள்ள தரவுகளை பார்ப்பதன் மூலம் மெய்நிகர் குளூக்கோஸ் கண்காணிப்பு அமைப்பை பயன்படுத்தி நோயாளிகளுக்கு எந்த விகித்ததில் குளுக்கோஸ் தரவேண்டும் என கண்டறியலாம்.


பட்-ன் நோக்கம் என்னவென்றால் ஏற்கனவே உள்ள மருந்துகளின் மூலம் புதிய நோய்களை குணப்படுத்த முடியுமா என்பது தான். இது புதிய மருந்துகளை சந்தைக்கு கொண்டுவருவது இல்லை. ஆனால் ஏற்கனவே உள்ள மருந்துகளை புதிய விசயத்திற்கு பயன்படுத்துவது. மருந்து நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் கொட்டி மருந்துகளை கண்டறிய ஆராய்ச்சிகள் செய்யும் நிலையில் இது சிறந்த முறைதான்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்.!


நியூமெடி (NuMedii)என்னும் ஸ்டார்ட் நிறுவனம் , இந்த வகையில் தயாரிக்கப்படும் மருந்துகளை சந்தைப்படுத்த தயாராகவுள்ளது. சரியான கூட்டாளிகள், வெற்றிகரமான பரிசோதனைகள் என்ற கட்டங்களை தாண்டி 3-5 ஆண்டுகளில் நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் கிடைக்கும் என்கிறார் பட்.


துரதிஸ்டவசமாக இந்தியாவில் சில காலத்திற்கு பின்பே இந்த மருந்துகள் கிடைக்கும். இந்த வகையில் கிடைக்கும் மருந்துகளின் விலை தயாரிப்பு செலவுகளால் தற்சமயம் அதிகமாக இருக்கும். ஒரு வருட மருத்துவத்திற்கு மருந்தின் விலை அதிகபட்சமாக $750,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலை இந்தியாவிற்கு ஏற்றதா என தெரியவில்லை என்கிறார் பட்.

Best Mobiles in India

English summary
Zuckerberg backs Indian origin scientist with formula to jolt drug market ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X