இந்தியாவில் ஐந்து புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது ZTE

By Siva
|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ZTE நிறுவனம் அமெரிக்கா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்தியாவில் மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது சற்றே குறைவான வரவேற்பை பெற்றுள்ளது.

ZTE-ன் புதிய 5 ஸ்மார்ட்போன்கள்

இந்த நிலையில் இந்தியாவிலும் அதிக வரவேற்பை பெறுவதற்காக ஐந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ZTE நிறுவனத்தின் சி.எம்.ஓ சச்சின் பாத்ரா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிமுகம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் ஆரம்பத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ZTE நிறுவனத்தின் சி.எம்.ஓ சச்சின் பாத்ரா அவர்கள் புதிய மாடல்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த மாடல்கள் ரூ.6000 முதல் ரூ.15000 வரையில் இருக்கும் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் ஒருசில குறிப்பிட்ட இகாம்ர்ஸ் இணையதளங்களில் மட்டுமே கிடைக்குமா? அல்லது அனைத்து இணையதளங்கள் அல்லது ஷோரூம்கள், ஆஃப்லைன் சேனல்களில் கிடைக்குமா? என்பது குறித்த தகவல் இனிமேல் வெளிவரவுள்ளதாக பாத்ரா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாடல்கள் குறித்த விவரங்கள் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் மிக விரைவில் இந்த தகவல்கள் கசியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சரியான தயாரிப்பு சரியான விலைக்கு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறிய பாத்ரா, இந்தியாவில் இருக்கும் கடுமையான போட்டி சந்தையை சமாளிக்க எங்களது தயாரிப்புகளில் புதிய அம்சங்கள் இருக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மனித உடல்களின் ஊடே புகுந்து சென்று பார்க்க உதவும் புதிய கேமரா.!மனித உடல்களின் ஊடே புகுந்து சென்று பார்க்க உதவும் புதிய கேமரா.!

ஒரே வருடத்தில் தங்களுடைய அனைத்து புதிய தயாரிப்புகளும் இந்தியர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

ஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியாமி, ஒப்போ, விவோ உள்பட பல சீன நிறுவனங்கள் ஜாம்பவனாக இருக்கும் நிலையில் ZTE யின் புதிய மாடல்கள் எந்த அளவுக்கு இந்தியாவில் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Best Mobiles in India

Read more about:
English summary
The ZTE smartphones will fall in the price range between Rs. 6,000-15,000.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X