பட்ஜெட் வாசிகளுக்கான, டூயல் கேமிரா கொண்ட பிளேட் வி8 (அம்சங்கள்).!

பிளேட் வி8 கருவி கொண்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன.?

|

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் இசெட்டிஇ (ZTE) அதன் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன பிளேட் வி8 கருவியை லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சிஇஎஸ் 2017 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீமியம் கருவியானது அதிகப்படியான அம்சங்கள் கொண்ட ஒரு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளேட் வி8 ப்ரோ கருவியை தொடர்ந்து இந்த பிளேட் வி8 கருவி அறிமுகம் செய்யப்பட்டது. இக்கருவி கொண்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன.? இக்கருவியின் விலை என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.

விலை

விலை

பிளேட் வி8 ப்ரோ கருவியின் விலை ரூ.15,620/- (230 டாலர்கள்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிளேட் வி8 அக்கருவியின் விலை வெளிப்படுத்தப்படவில்லை என்கிற போதிலும் ப்ரோமாறுபாட்டை விட குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அடுத்த மாதம் முதல்

அடுத்த மாதம் முதல்

வடிவமைப்பு வாரியாக பிளேட் வி8 ஒரு அளவிற்கு பிளேட் வி8 ப்ரோ கருவியை நினைவூட்டுவதாக உள்ளது. இக்கருவி தங்கம், டார்க் கிரே, வெள்ளி மற்றும் கேம்பைன் தங்க வண்ணங்களில் வருகிறது மற்றும் அடுத்த மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும்.

உலோக உடல், இரண்டு வேறுபாடு

உலோக உடல், இரண்டு வேறுபாடு

அம்சங்களை பொறுத்தவரை பிளேட் வி8 கருவியில் 2.5டி வளைந்த கிளாஸ் கொண்ட 5.2 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்ட உலோக உடல் கொண்டுள்ளது. உடன் இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு கட்டமைப்பு மற்றும் 3ஜிபி+ 32 ஜிபி மாறுபாடு அமைப்பு கொண்ட இரண்டு வேறுபாடுகளில் கிடைக்கின்றன. உடன் இரண்டு பதிப்புகளுமே அக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் மற்றும் அட்ரெனோ 505 ஜீபியூ மூலம் இயக்கப்படுகிறது.

ஓஎஸ், பேட்டரி

ஓஎஸ், பேட்டரி

பிளேட் வி8 கருவியானது பெட்டிக்கு வெளியே கூகுளின் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் உள்ளே மிபேவர் (MiFavor) 4.0 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது உடன் ஒரு நிலையான 2730எம்ஏஎச் பேட்டரி, ஒரு கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டன் மற்றும் கூடுதல் சேமிப்பிற்காக ஒரு மைக்ரோஎஸ்டி அட்டை துளை ஆகியவைகளும் இக்கருவியில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

கேமிரா

கேமிரா

எல்லா அம்சங்களுக்கும் மேலாக இக்கருவி முழுமையான ஆழத்தில் படங்களை கைப்பற்ற ஒரு 13எம்பி மற்றும் ஒரு 2எம்பி சென்சார் பயன்படுத்துகிறது அதாவது ஒரு இரட்டை கேமிரா அமைப்பு கொண்டுள்ளது. செல்பீ காதலர்களுக்காக விரிவான படங்களை கைப்பற்ற இக்கருவி அதன் 13எம்பி முன்பக்க கேமிராவை பயன்படுத்தும்.

பிளேட் வி8 ப்ரோ அம்சங்கள்

பிளேட் வி8 ப்ரோ அம்சங்கள்

டிஸ்ப்ளே : 5.5 அங்குல முழு எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி
கேமிரா: இரட்டை கேமரா (13எம்பி + 13எம்பி) மற்றும் 8எம்பி செல்பீ கேமிரா
சிபியூ: ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
ரேம்: 3ஜிபி
சேமிப்பு: 32 ஜிபி (விஸ்தரிக்கலாம்)
மென்பொருள்: ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
பேட்டரி: பாஸ்ட் சார்ஜ் 2.0 கொண்ட 3140எம்ஏஎச்
பிற அம்சங்கள் : மெட்டல் உடல், இரண்டு சிம், 4ஜி, எல்டிஇ, கைரேகை ஸ்கேனர்
விலை: சுமார் ரூ.15,620/-

மேலும் படிக்க

மேலும் படிக்க

சென்போன் ஏஆர் : 6ஜிபி ரேம், 23 எம்பி கேமிரா, 3100 எம்ஏஎச் பேட்டரி.!

Best Mobiles in India

English summary
ZTE's Blade V8 is actually a good-looking dual-camera smartphone for budget shoppers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X