20 ஜிபி ரேம் உடன் புதிய ஸ்மார்ட்போன் ரெடி.. எந்த நிறுவனம் அறிமுகம் செய்கிறது தெரியுமா?

|

ZTE நிறுவனம் விரைவில் 20 ஜிபி ரேம் கொண்ட சூப்பர் ஸ்மார்ட்போன் சாதனத்தை ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. சீன நிறுவனம் இதுவரை இன்னும் எந்தவொரு உறுதியான விவரங்களையும் வெளியிடவில்லை என்றாலும் கூட, அதன் நிர்வாகிகளில் ஒருவர் இந்த வளர்ச்சியைப் பற்றி ஆன்லைனில் டீஸ் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இன்னும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி என்ன விஷயங்கள் வெளியாகியுள்ளது என்று பார்க்கலாம்.

20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்

20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்

ஆசஸ், லெனோவா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே 18 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், ZTE நிறுவனம் தற்பொழுது 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்க திட்டமிட்டுள்ள செய்து இரண்டு நிறுவனங்களுக்கும் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது. இதனால், ZTE நிறுவனம் அதன் போட்டியாளரான தெற்காசிய ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களுக்கு புதிய போட்டியை கடினமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1TB ஸ்டோரேஜ் உடன் மற்றொரு ஸ்மார்ட்போன் மாடல்

1TB ஸ்டோரேஜ் உடன் மற்றொரு ஸ்மார்ட்போன் மாடல்

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களில் முக்கிய வீரர்களில் ஒருவராக இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ZTE இன் இயக்குநர்களில் ஒருவரான லு கியான் ஹாவ், நிறுவனத்தின் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் பற்றி வெய்போவில் டீஸ் செய்துள்ளார். அதேபோல், அடுத்த ஆண்டு 1TB ஸ்டோரேஜ் உடன் மற்றொரு ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? உடனே அப்ளை செய்யுங்கள்..புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? உடனே அப்ளை செய்யுங்கள்..

இறுதி நுகர்வோருக்கான வடிவமைக்கப்பட்ட மாடல் இதுவல்ல

இறுதி நுகர்வோருக்கான வடிவமைக்கப்பட்ட மாடல் இதுவல்ல

சரியான வெளியீட்டுத் திட்டங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ZTE இன் நிர்வாகியின் டீஸர் இடுகை, நிறுவனம் முதல் மூவர் அனுகூலத்துடன் போட்டியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் அதன் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை கொண்டு வரக்கூடும் என்றும் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஒரு முன்மாதிரியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இறுதி நுகர்வோருக்கான வடிவமைக்கப்பட்ட மாடலின் தோற்றம் இதுவல்ல என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

16 ஜிபி ரேம் ஸ்டோரேஜ்

16 ஜிபி ரேம் ஸ்டோரேஜ்

ஆசஸ் நிறுவனம் தனது ROG போன் 5 அல்டிமேட் லிமிடெட் எடிஷனில் மார்ச் மாதத்தில் 18 ஜிபி ரேம் சேவையை கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், லெனோவா நிறுவனம் மேலும் தைவான் நிறுவனம் அடிச்சுவடுகளை பின்பற்றி லெனோவா லெஜியன் போன் டூவல் 2 ஸ்மார்ட்போன் உடன் 18GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ZTE சமீபத்தில் அறிமுகம் செய்த தனது ZTE ஆக்சென் 30 அல்ட்ரா 5G மற்றும் ஆக்சென் 30 புரோ 5G ஸ்மார்ட்போன்களில் 16 ஜிபி ரேம் ஸ்டோரேஜை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ZTE Is Working On a New 20 GB RAM Smartphone Says The Company Executive : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X