டிசம்பர் 2 வெளியாகும் ZTE பிளேட் வி2021 5ஜி: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்!

|

ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ZTE பிளேட் வி2021 5ஜி

ZTE பிளேட் வி2021 5ஜி

ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என சீன தனியார் விற்பனையாளர் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமரா உட்பட மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ZTE பிளேட் வி2021 5ஜி மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் தெரிகிறது.

ZTE பிளேட் வி2021 5ஜி வெளியீடு

ZTE பிளேட் வி2021 5ஜி வெளியீடு

இசட்டிஇ பிளேட் வி2021 5ஜி டிசம்பர் 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என JD.com பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போதே முன்பதிவுக்கு தயாராக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேண்டஸி ப்ளூ, ஸ்பேஸ் க்ரே மற்றும் ஸ்பேஸ் சில்வர் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் தொடங்கப்படும் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்படும் என கூறப்படுகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

ZTE பிளேட் வி2021 5ஜி இந்தியாவில் தொடங்கப்படுமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கும் என தெரிகிறது. இந்த மூன்று கேமராக்களும் செங்குத்தான வடிவமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது.

5ஜி ஆதரவோடு அறிமுகம்

5ஜி ஆதரவோடு அறிமுகம்

ZTE பிளேட் வி2021 5ஜி முன்புறத்தில் ஒற்றை செல்பி ஷூட்டருடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதி இருக்கிறது. எஃப்எம் ரேடியோ, பேஸ் அன்லாக் சென்சார் வசதியும் 5ஜி ஆதரவும் இருக்கிறது.

ZTE பிளேட் 20 5ஜி

ZTE பிளேட் 20 5ஜி

சமீபத்தில் ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மூன்று கேமரா அமைப்பு மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் இதில் இருக்கிறது.

இரண்டு வண்ண விருப்பங்கள்

இரண்டு வண்ண விருப்பங்கள்

ZTE பிளேட் 20 5 ஜி ஒரே சேமிப்பு வேரியண்ட் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ZTE பிளேட் 20 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டில் வருகிறது. இதன் சீன விலை சிஎன்ஒய் 1,499 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,700 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜாஸி க்ரே, லைட் ப்ளூ மின்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ZTE பிளேட் 20 5 ஜி: கேமரா அம்சங்கள்

ZTE பிளேட் 20 5 ஜி: கேமரா அம்சங்கள்

ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அம்சங்கள் உள்ளது. அது 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. இதன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
ZTE Blade V2021 5G Going to Launch on December 2: Expected Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X